1.8 தொகுப்புரை

    அணி இலக்கணம், மொழிகள்அனைத்திற்கும் பொதுவானது. தொல்காப்பிய     உவமவியல் அணி இலக்கணம் பற்றி எடுத்துரைக்கிறது. அதற்கு முன்பும் அணி பற்றிய சிந்தனை இருந்துள்ளது. ஐந்திலக்கண நூல்களும், தனி அணி இலக்கண நூல்களும் அணிகள் பற்றி எடுத்துரைக்கின்றன. பிற்காலத்தில் எழுந்த அணி இலக்கண நூல்கள் வடமொழி இலக்கணத்தைத் தழுவியே அமைந்துள்ளன. அணி இலக்கண நூல்கள் சில கிடைக்கப் பெறவில்லை.

    காலந்தோறும் பொருள் அணிகளும், சொல்லணிகளும் வளர்ந்து வந்துள்ளமையைக் கண்டோம். அணி இலக்கண நூலான தண்டியலங்காரம் பற்றிய சிறப்புகளைத் தெளிவாக அறிந்தோம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
வீரசோழியம் பற்றி விளக்குக.விடை
2.
மாறனலங்காரம் குறித்து எழுதுக.விடை
3.
வடமொழி மொழிபெயர்ப்பாக அமைந்த அணி இலக்கண நூல்கள் இரண்டு பற்றிக் குறிப்பிடுக. விடை
4.
தண்டியாசிரியர் குறித்து விவரிக்க. விடை
5.
தண்டியலங்காரத் தனிச்சிறப்புகள் பற்றி எழுதுக.விடை