6.6 தொகுப்புரை

    இப்பாடத்தில் கிளைமொழி என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தைச் சான்றுகளுடன் அறிந்துகொண்டீர்கள். பழந்தமிழ் இலக்கணநூலாரும், தற்கால மொழியியலாரும் செய்துள்ள கிளைமொழிப்     பாகுபாட்டைத் தெரிந்து கொண்டீர்கள். பழங்காலத்திலும், இடைக்காலத்திலும் கிளைமொழி வழங்கிய இடங்கள், அவ்விடங்களில் வழங்கிய கிளைமொழிகள் பற்றி உரையாசிரியர்கள் கூறும் கருத்துகளை அறிந்து கொண்டீர்கள். தற்காலத்தில் மொழியியலார் தமிழில் வழங்கும் கிளைமொழிகளை வட்டாரம், சமூகநிலை போன்றவற்றை வைத்து எவ்வாறெல்லாம் வகைப்படுத்தி விளக்கிக் காட்டியுள்ளனர் என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
சங்க காலத்தில் நான்கு, ஒன்பது என்னும் எண்ணுப் பெயர்களின் கிளைமொழி வடிவங்கள் யாவை?
2.
இடைக்காலத்தில் கிளைமொழிகள் பரவியிருந்த வட்டாரங்களாக வீரசோழிய உரை குறிப்பிடுவன எத்தனை? அவை யாவை?
3.
இடைக்காலத்தில் காவிரி பாயும் பகுதியில் இரட்டை றகரம் எவ்வாறு மாறியது? ஒரு சான்று தருக.
4.
இடைக்காலக் கல்வெட்டுகளில் ‘ற்க்’, ‘ட்க்’ என்ற மெய்க்கூட்டுகள் எவ்வாறு மாறின? சான்று தருக.
5.
இடைக்காலத்தில் வழங்கிய சமூகக் கிளைமொழிகள் இரண்டனைக் குறிப்பிடுக.
6.
தற்காலத்தில்     வட்டார     அடிப்படையில் கிளைமொழிகளை     எத்தனை     வகையாகப் பிரித்துள்ளனர்? அவை யாவை?
7.
வடக்குக் கிளைமொழியில் ‘இருக்கிறது’ என்ற சொல் எவ்வாறு மாறி வழங்குகிறது.
8.
‘அவனை அங்கே பார்த்தான்’ என்ற தொடரைத் திருநெல்வேலி     மாவட்டத்தார்     எவ்வாறு கூறுகின்றனர்?
9.
பிராமணர் பேச்சுமொழியில் ‘எனக்கு’, ‘ஒனக்கு’ ஆகிய சொற்கள் எவ்வாறு மாறி அமைகின்றன?
10.
தலித்துகள் பேச்சுமொழியில் ‘தங்கச்சி’ என்ற சொல் எவ்வாறு மாறி வழங்குகிறது?