|
ஒரு
நாட்டை ஆட்சி செய்யும் ஒரு மன்னனுக்கு,
அஞ்சாமை,
ஈகை, ஊக்கம் போன்ற இயல்புகள்
இயற்கையாக
அமைந்திருக்கும். அவற்றோடு, அவன் செயற்கையாக, முயற்சியின்
வாயிலாக அறிவைப் பெறவேண்டும்.
நாட்டின்
வருவாயைப் பெருக்குவதற்கான திட்டத்தை இயற்றல்,
வரிகளை வசூலித்து ஈட்டல், அதைப் பாதுகாத்தல்,
பின்னர்
முறையாகப் பகிர்ந்து அளித்தல் போன்றவை ஒரு மன்னனின்
முதன்மையான கடமைகள்.
மேற்குறிப்பிட்ட
கடமைகளை நிறைவேற்றுவதற்கு அவனுக்குச்
சிறந்த கொடை உள்ளமும், இரக்க உணர்வும்,
செங்கோல்
செலுத்தும் ஆற்றலும், குடியை ஓம்பும் பண்பும் அமைந்திருக்க
வேண்டும்.
இவற்றோடு
அமையாது, மக்களோடு பழகும் முறையில் காட்சிக்கு
எளியவனாகவும், இனிய சொல்லை உடையவனாகவும் இருக்க
வேண்டும். இவற்றையெல்லாம் கொண்டு ஆட்சி செய்யும் நாடு,
மிகச் சிறந்த நாடாகக் கருதப்படும் என்கிறார் வள்ளுவர்.
|