3.7 தொகுப்புரை  

    நாட்டுப்புற ஆடல்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து செவ்வியல் ஆடல்களாக விளங்குகின்றன. தமிழ் நாட்டில் பரத நாட்டியம் உள்ளது போல, பிற மாநிலங்களிலும் செவ்வியல் ஆடல்கள் உள்ளன. மோகினி ஆட்டம், கதகளி, குச்சுப்புடி, பாகவதமேளம், மணிப்புரி ஆகிய ஆடல் வகைகளைப் பற்றி இந்தப் பாடத்தில் பார்த்தோம். இவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும் கண்டோம். தனித்தனியே பயிற்சிமுறை, ஒப்பனை முறை, அடவுகள் முதலியவை பற்றியும் அறிந்து கொண்டோம். பக்க வாத்தியங்கள், ஆடுவோர் பற்றியும் படித்தோம். நிறைவாக இந்திய செவ்வியல் நாட்டியங்கள் சிலவற்றைப் பற்றி ஒரு சுருங்கிய, முழுப் பார்வை நமக்குக் கிடைத்துள்ளது.

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1. மோகினி ஆட்டத்தில் இடம் பெறும் அலங்கார (ஒப்பனை) முறை குறித்து எழுதுக.
2. குச்சுப்புடி நடனத்தில் பயன்படுத்தப்படும் பாடல்கள் பற்றிக் கூறுக.
3. பாலகோபால தரங்கம் என்றால் என்ன?
4. பாகவத மேளம் நடைபெற்று வரும் இரு ஊர்களைக் குறிப்பிடுக.
5. பாகவத மேளக் கட்டுக்கோப்பினை விவரிக்க.
6. மணிப்புரி நடனத்திற்கும் பரத நாட்டியத்திற்கும் உள்ள உறவு நிலையைக் கூறுக. [விடை]
7. மணிப்புரியில் அமையும் தாண்டவ நடனம் குறித்து எழுதுக. [விடை]