முகப்பு |
உரோடகத்துக் கந்தரத்தனார் |
116. குறிஞ்சி |
'தீமை கண்டோர் திறத்தும்பெரியோர் |
||
தாம் அறிந்து உணர்க' என்பமாதோ; |
||
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று, |
||
இரு வெதிர் ஈன்ற வேல் தலைக் கொழு முளை, |
||
5 |
சூல் முதிர் மடப் பிடி, நாள் மேயல் ஆரும் |
|
மலை கெழு நாடன் கேண்மை, பலவின் |
||
மாச் சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம் |
||
விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு, தொடர்பு அறச் |
||
சேணும் சென்று உக்கன்றே அறியாது |
||
10 |
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த |
|
குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர் |
||
இன்னும் ஓவார், என் திறத்து அலரே! | உரை | |
வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவி தோழிக்கு வன்புறை எதிரழிந்து சொல்லியது.-கந்தரத்தனார்
|
146. குறிஞ்சி |
வில்லாப் பூவின் கண்ணி சூடி, |
||
'நல் ஏமுறுவல்' என, பல் ஊர் திரிதரு |
||
நெடு மாப் பெண்ணை மடல் மானோயே!- |
||
கடன் அறி மன்னர் குடை நிழற் போலப் |
||
5 |
பெருந் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து, |
|
இருந்தனை சென்மோ-'வழங்குக சுடர்!' என, |
||
அருளிக் கூடும் ஆர்வ மாக்கள் |
||
நல்லேம் என்னும் கிளவி வல்லோன் |
||
எழுதி அன்ன காண் தகு வனப்பின் |
||
10 |
ஐயள், மாயோள், அணங்கிய |
|
மையல் நெஞ்சம் என் மொழிக் கொளினே! | உரை | |
பின்னின்ற தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது.-கந்தரத்தனார்
|
238. முல்லை |
வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங் |
||
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப, |
||
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம், |
||
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய |
||
5 |
பருவம் செய்த கருவி மா மழை! |
|
'அவர் நிலை அறியுமோ, ஈங்கு' என வருதல் |
||
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன் |
||
உர உரும் உரறும் நீரின், பரந்த |
||
பாம்பு பை மழுங்கல் அன்றியும், மாண்ட |
||
10 |
கனியா நெஞ்சத்தானும், |
|
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே. | உரை | |
தலைமகள் பருவம் கண்டு அழிந்தது.-கந்தரத்தனார்
|
306. குறிஞ்சி |
தந்தை வித்திய மென் தினை பைபயச் |
||
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ- |
||
'குளிர் படு கையள் கொடிச்சி செல்க' என, |
||
நல்ல இனிய கூறி, மெல்லக் |
||
5 |
கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல் |
|
சூற் பொறை இறுத்த கோல் தலை இருவி |
||
விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவர, |
||
பைதல் ஒரு நிலை காண வைகல் |
||
யாங்கு வருவதுகொல்லோ-தீம் சொல் |
||
10 |
செறி தோட்டு எல் வளைக் குறுமகள் |
|
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே? | உரை | |
புனம் மடிவு உரைத்துச் செறிப்பு அறிவுறீஇயது; சிறைப்புறமும் ஆம்.- உரோடோகத்துக் கந்தரத்தனார்
|