முகப்பு |
பெருங்குன்றூர் கிழார் |
5. குறிஞ்சி |
நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, |
||
அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப, |
||
குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் |
||
நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப, |
||
5 |
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி |
|
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும், |
||
அரிதே, காதலர்ப் பிரிதல்-இன்று செல் |
||
இளையர்த் தரூஉம் வாடையொடு |
||
மயங்கு இதழ் மழைக் கண் பயந்த, தூதே. | உரை | |
தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.-பெருங்குன்றூர்கிழார்
|
112. குறிஞ்சி |
விருந்து எவன்செய்கோ-தோழி!-சாரல் |
||
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச் |
||
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு, |
||
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும் |
||
5 |
பெருங் கல் நாடன் வரவு அறிந்து, விரும்பி, |
|
மாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித் |
||
தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய், |
||
மலை இமைப்பது போல் மின்னி, |
||
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே? | உரை | |
பருவ வரவின்கண்ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.-பெருங்குன்றூர் கிழார்
|
119. குறிஞ்சி |
தினை உண் கேழல் இரிய, புனவன் |
||
சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர், |
||
ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன் |
||
ஆர் தர வந்தனன் ஆயினும், படப்பை |
||
5 |
இன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும் |
|
பல் மலர்க் கான் யாற்று உம்பர், கருங் கலை |
||
கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும் |
||
பெரு வரை நீழல் வருகுவன், குளவியொடு |
||
கூதளம் ததைந்த கண்ணியன்; யாவதும் |
||
10 |
முயங்கல் பெறுகுவன் அல்லன்; |
|
புலவி கொளீஇயர், தன் மலையினும் பெரிதே. | உரை | |
சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது.-பெருங்குன்றூர்கிழார்
|
347. குறிஞ்சி |
முழங்கு கடல் முகந்த கமஞ் சூல் மா மழை |
||
மாதிர நனந் தலை புதையப் பாஅய், |
||
ஓங்கு வரை மிளிர ஆட்டி, பாம்பு எறிபு, |
||
வான் புகு தலைய குன்றம் முற்றி, |
||
5 |
அழி துளி தலைஇய பொழுதில், புலையன் |
|
பேழ் வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன, |
||
அருவி இழிதரும் பெரு வரை நாடன், |
||
'நீர் அன நிலையன்; பேர் அன்பினன்' எனப் |
||
பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி |
||
10 |
வேனில் தேரையின் அளிய, |
|
காண வீடுமோ-தோழி!-என் நலனே? | உரை | |
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுக்க மறுத்தது.-பெருங்குன்றூர் கிழார்
|