முகப்பு |
ஓரி |
6. குறிஞ்சி |
நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால் |
||
நார் உரித்தன்ன மதன் இல் மாமை, |
||
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண், |
||
திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்கு |
||
5 |
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே, |
|
'இவர் யார்?' என்குவள் அல்லள்; முனாஅது, |
||
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி |
||
எறி மட மாற்கு வல்சி ஆகும் |
||
வல் வில் ஓரி கானம் நாறி, |
||
10 |
இரும் பல் ஒலிவரும் கூந்தல் |
|
பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே. |
உரை | |
இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன்நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர்
|
52. பாலை |
மாக் கொடி அதிரற் பூவொடு பாதிரித் |
||
தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் |
||
மணம் கமழ் நாற்றம் மரீஇ, யாம் இவள் |
||
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி, |
||
5 |
வீங்கு உவர்க் கவவின் நீங்கல்செல்லேம்; |
|
நீயே, ஆள்வினை சிறப்ப எண்ணி, நாளும் |
||
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே; |
||
அன்பு இலை; வாழி, என் நெஞ்சே! வெம் போர் |
||
மழவர் பெரு மகன் மா வள் ஓரி |
||
10 |
கை வளம் இயைவது ஆயினும், |
|
ஐது ஏகு அம்ம, இயைந்து செய் பொருளே. |
உரை | |
தலைமகன் செலவு அழுங்கியது.-பாலத்தனார்
|
265. குறிஞ்சி |
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல் |
||
அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை |
||
வீளை அம்பின் வில்லோர் பெருமகன், |
||
பூந் தோள் யாப்பின் மிஞிலி, காக்கும் |
||
5 |
பாரத்து அன்ன-ஆர மார்பின் |
|
சிறு கோற் சென்னி ஆரேற்றன்ன- |
||
மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக் |
||
கலி மயில் கலாவத்து அன்ன, இவள் |
||
ஒலி மென் கூந்தல் நம் வயினானே. |
உரை | |
பின்னின்ற தலைமகன் நெஞ்சிற்கு உரைத்தது.- பரணர்
|
320. மருதம் |
'விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று; |
||
எவன் குறித்தனள்கொல்?' என்றி ஆயின்- |
||
தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின், |
||
இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல் |
||
5 |
ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில், |
|
காரி புக்க நேரார் புலம்போல், |
||
கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு, |
||
காவல் செறிய மாட்டி, ஆய்தொடி |
||
எழில் மா மேனி மகளிர் |
||
10 |
விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே. |
உரை |
பரத்தை தனக்குப் பாங்காயினார் கேட்ப, நெருங்கிச் சொல்லியது.-கபிலர்
|