முகப்பு |
குட்டுவன் |
14. பாலை |
தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய, |
||
நல்கார் நீத்தனர்ஆயினும், நல்குவர்; |
||
நட்டனர், வாழி!-தோழி!-குட்டுவன் |
||
அகப்பா அழிய நூறி, செம்பியன் |
||
5 |
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது |
|
அலர் எழச் சென்றனர் ஆயினும்-மலர் கவிழ்ந்து |
||
மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல், |
||
இனம் சால் வயக் களிறு பாந்தட் பட்டென, |
||
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல் |
||
10 |
நெடு வரை விடரகத்து இயம்பும் |
|
கடு மான் புல்லிய காடு இறந்தோரே. |
உரை | |
இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது.- மாமூலனார்
|
192. குறிஞ்சி |
'குருதி வேட்கை உரு கெழு வய மான் |
||
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும் |
||
மரம் பயில் சோலை மலிய, பூழியர் |
||
உருவத் துருவின், நாள் மேயல் ஆரும் |
||
5 |
மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை, |
|
நீ நயந்து வருதல் எவன்?' எனப் பல புலந்து, |
||
அழுதனை உறையும் அம் மா அரிவை! |
||
பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப் |
||
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை |
||
10 |
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின் |
|
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு |
||
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே. |
உரை | |
இரவுக்குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.
|
201.குறிஞ்சி |
'மலை உறை குறவன் காதல் மட மகள், |
||
பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்; |
||
சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள் |
||
உள்ளல் கூடாது' என்றோய்! மற்றும், |
||
5 |
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித் |
|
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு, |
||
அவ் வெள் அருவிக் குட வரையகத்து, |
||
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும், |
||
உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும், |
||
10 |
பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின் |
|
மாயா இயற்கைப் பாவையின், |
||
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே. |
உரை | |
கழறிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது.-பரணர்
|
395. நெய்தல் |
யாரை, எலுவ? யாரே, நீ எமக்கு |
||
யாரையும் அல்லை; நொதுமலாளனை; |
||
அனைத்தால் கொண்க, நம்மிடையே நினைப்பின்; |
||
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் குட்டுவன் |
||
5 |
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்தன்ன, |
|
ஓங்கற் புணரி பாய்ந்து ஆடு மகளிர் |
||
அணிந்திடு பல் பூ மரீஇ, ஆர்ந்த |
||
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலைக் |
||
கடல் கெழு மாந்தை அன்ன, எம் |
||
10 |
வேட்டனை அல்லையால், நலம் தந்து சென்மே. |
உரை |
'நலம் தொலைந்தது' எனத் தலைவனைத் தோழி கூறி, வரைவு கடாயது.-அம்மூவனார்
|