முகப்பு |
அடும்பு |
145. நெய்தல் |
இருங் கழி பொருத ஈர வெண் மணல் |
||
மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி |
||
கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும் |
||
காமர் கொண்கன், நாம் வெங் கேண்மை |
||
5 |
ஐது ஏய்ந்தில்லா ஊங்கும், நம்மொடு |
|
புணர்ந்தனன் போல உணரக் கூறி, |
||
'தான் யாங்கு?' என்னும் அறன் இல் அன்னை; |
||
யான் எழில் அறிதலும் உரியள் நீயும்; நம் |
||
பராரைப் புன்னைச் சேரி, மெல்ல, |
||
10 |
நள்ளென் கங்குலும், வருமரோ- |
|
அம்ம வாழி!-தோழி அவர் தேர் மணிக் குரலே! | உரை | |
இரவுக்குறி வந்து தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி வரைவுகடாயது.-நம்பி குட்டுவன்
|
254. நெய்தல் |
வண்டல் தைஇயும், வரு திரை உதைத்தும், |
||
குன்று ஓங்கு வெண் மணற் கொடி அடும்பு கொய்தும், |
||
துனி இல் நல்மொழி இனிய கூறியும், |
||
சொல் எதிர் பெறாஅய் உயங்கி, மெல்லச் |
||
5 |
செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப! |
|
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் |
||
அயினி மா இன்று அருந்த, நீலக் |
||
கணம் நாறு பெருந் தொடை புரளும் மார்பின் |
||
துணை இலை தமியை சேக்குவை அல்லை- |
||
10 |
நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி, |
|
வானம் வேண்டா உழவின் எம் |
||
கானல்அம் சிறு குடிச் சேந்தனை செலினே | உரை | |
தோழி படைத்து மொழிந்தது.-உலோச்சனார்
|
272. நெய்தல் |
கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல், |
||
படிவ மகளிர் கொடி கொய்து அழித்த |
||
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை, |
||
கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு, |
||
5 |
இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப் |
|
பூஉடைக் குட்டம் துழவும் துறைவன் |
||
நல்காமையின், நசை பழுதாக, |
||
பெருங் கையற்ற என் சிறுமை, பலர் வாய் |
||
அம்பல் மூதூர் அலர்ந்து, |
||
10 |
நோய் ஆகின்று; அது நோயினும் பெரிதே. | உரை |
வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாய தலைமகள் சொல்லியது; தோழி தலைமகளுக்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்.-முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
|
349. நெய்தல் |
கடுந் தேர் ஏறியும், காலின் சென்றும், |
||
கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும், |
||
கைதை தூக்கியும், நெய்தல் குற்றும், |
||
புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடு |
||
5 |
வைகலும் இனையம் ஆகவும், செய் தார்ப் |
|
பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை, |
||
ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத |
||
பெரும் புண்ணுறுநர்க்குப் பேஎய் போல, |
||
பின்னிலை முனியா நம்வயின், |
||
10 |
என் என நினையும்கொல், பரதவர் மகளே? | உரை |
தலைமகன், தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.- மிளை கிழான் நல்வேட்டனார்
|