முகப்பு |
கொன்றை |
99. முல்லை |
'நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை, |
||
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின், |
||
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர் |
||
தாம் வரத் தெளித்த பருவம் காண்வர |
||
5 |
இதுவோ?' என்றிசின்-மடந்தை!-மதி இன்று, |
|
மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழை |
||
பொறுத்தல்செல்லாது இறுத்த வண் பெயல் |
||
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல- |
||
பிடவமும், கொன்றையும் கோடலும்- |
||
10 |
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே. | உரை |
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது.-இளந்திரையனார்
|
221. முல்லை |
மணி கண்டன்ன மா நிறக் கருவிளை |
||
ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய, |
||
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க் |
||
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க, |
||
5 |
வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில், |
|
நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ, |
||
செல்க-பாக!-நின் செய்வினை நெடுந் தேர்: |
||
விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள், |
||
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க, |
||
10 |
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப் |
|
பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி, |
||
'வந்தீக, எந்தை!' என்னும் |
||
அம் தீம் கிளவி கேட்கம் நாமே. | உரை | |
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் பாகற்குச் சொல்லியது.-இடைக்காடனார்
|
242. முல்லை |
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப, |
||
புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ, |
||
பொன் எனக் கொன்றை மலர, மணி எனப் |
||
பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல, |
||
5 |
கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து |
|
செல்க-பாக!-நின் தேரே: உவக்காண்- |
||
கழிப் பெயர் களரில் போகிய மட மான் |
||
விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓட, |
||
காமர் நெஞ்சமொடு அகலா, |
||
10 |
தேடூஉ நின்ற இரலை ஏறே. | உரை |
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் கார் கண்டு பாகற்குச் சொல்லியது.-விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்
|
246. பாலை |
இடூஉ ஊங்கண் இனிய படூஉம்; |
||
நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்; |
||
மனை மா நொச்சி மீமிசை மாச் சினை, |
||
வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்; |
||
5 |
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி, |
|
செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர், |
||
வருவர் வாழி-தோழி!-புறவின் |
||
பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ, |
||
இன் இசை வானம் இரங்கும்; அவர், |
||
10 |
'வருதும்' என்ற பருவமோ இதுவே? | உரை |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீஇயது.-காப்பியஞ் சேந்தனார்
|
302. பாலை |
இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த |
||
நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக் |
||
காடு கவின் பூத்தஆயினும், நன்றும் |
||
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல் |
||
5 |
நரை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ |
|
தாஅம் தேரலர்கொல்லோ-சேய் நாட்டு, |
||
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு |
||
வெளிறு இல் காழ வேலம் நீடிய |
||
பழங்கண் முது நெறி மறைக்கும், |
||
10 |
வழங்கு அருங் கானம் இறந்திசினோரே? | உரை |
பருவம் கழிந்தது கண்டு தலைமகள் சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்
|
371. முல்லை |
காயாங் குன்றத்துக் கொன்றை போல, |
||
மா மலை விடர் அகம் விளங்க மின்னி, |
||
மாயோள் இருந்த தேஎம் நோக்கி, |
||
வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய், |
||
5 |
பெயல் தொடங்கினவே, பெய்யா வானம்: |
|
நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி, |
||
அழல் தொடங்கினளே ஆயிழை; அதன் எதிர், |
||
குழல் தொடங்கினரே கோவலர்- |
||
தழங்கு குரல் உருமின் கங்குலானே. | உரை | |
வினை முற்றி மறுத்தராநின்றான் பாகற்குச் சொல்லியது.-ஒளவையார்
|