முகப்பு |
அன்றில் |
124. நெய்தல் |
ஒன்று இல் காலை அன்றில் போலப் |
||
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை |
||
யானும் ஆற்றேன்; அதுதானும் வந்தன்று- |
||
நீங்கல்; வாழியர்; ஐய!-ஈங்கை |
||
5 |
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர், |
|
நவ்வி நோன் குளம்பு அழுந்தென, வெள்ளி |
||
உருக்குறு கொள்கலம் கடுப்ப, விருப்புறத் |
||
தெண் நீர்க் குமிழி இழிதரும் |
||
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே. | உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவற்கு உரைத்தது.-மோசி கண்ணத்தனார்
|
152. நெய்தல் |
மடலே காமம் தந்தது; அலரே |
||
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே; |
||
இலங்கு கதிர் மழுங்கி, எல் விசும்பு படர, |
||
புலம்பு தந்தன்றே, புகன்று செய் மண்டிலம்; |
||
5 |
எல்லாம் தந்ததன்தலையும் பையென |
|
வடந்தை துவலை தூவ, குடம்பைப் |
||
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ, |
||
கங்குலும் கையறவு தந்தன்று; |
||
யாங்கு ஆகுவென்கொல்; அளியென் யானே? | உரை | |
மடல் வலித்த தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது.-ஆலம்பேரி சாத்தனார்
|
218. நெய்தல் |
ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே; |
||
எல்லியும், பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே; |
||
வாவலும் வயின்தொறும் பறக்கும்; சேவலும் |
||
நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்; |
||
5 |
ஆயாக் காதலொடு அதர்ப் படத் தெளித்தோர் |
|
கூறிய பருவம் கழிந்தன்று; பாரிய |
||
பராரை வேம்பின் படு சினை இருந்த |
||
குராஅற் கூகையும் இராஅ இசைக்கும்; |
||
ஆனா நோய் அட வருந்தி, இன்னும் |
||
10 |
தமியேன் கேட்குவென் கொல்லோ, |
|
பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே? | உரை | |
வரைவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.கிடங்கில் - காவிதிக் கீரங்கண்ணனார்
|
303. நெய்தல் |
ஒலி அவிந்து அடங்கி, யாமம் |
||
நள்ளென, |
||
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே; |
||
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை |
||
5 |
மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத் |
|
துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும், |
||
'துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய், |
||
நம்வயின் வருந்தும், நன்னுதல்' என்பது |
||
உண்டுகொல்?-வாழி, தோழி!-தெண் கடல் |
||
10 |
வன் கைப் பரதவர் இட்ட செங் கோல் |
|
கொடு முடி அவ் வலை பரியப் போக்கி, |
||
கடு முரண் எறி சுறா வழங்கும் |
||
நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தானே. | உரை | |
வேட்கை தாங்ககில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள் சொல்லியது;சிறைப்புறத்தான் என்பது மலிந்ததூஉம் ஆம்.-மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்
|
335. நெய்தல் |
திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப் |
||
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே; |
||
ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற் |
||
பல் பூங் கானல் முள் இலைத் தாழை |
||
5 |
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ, |
|
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு |
||
மை இரும் பனைமிசைப் பைதல உயவும் |
||
அன்றிலும் என்புற நரலும்; அன்றி, |
||
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ் |
||
10 |
யாமம் உய்யாமை நின்றன்று; |
|
காமம் பெரிதே; களைஞரோ இலரே! | உரை | |
காமம் மிக்க கழிபடர்கிளவி மிதூர்ந்து தலைமகள் சொல்லியது.- வெள்ளிவீதியார்
|