முகப்பு |
கயமனார் |
9. நெய்தல் |
யாய் ஆகியளே மாஅயோளே- |
||
மடை மாண் செப்பில் தமிய வைகிய |
||
பெய்யாப் பூவின் மெய் சாயினளே; |
||
பாசடை நிவந்த கணைக் கால் நெய்தல் |
||
இன மீன் இருங் கழி ஓதம் மல்குதொறும் |
||
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் |
||
தண்ணம் துறைவன் கொடுமை |
||
நம் முன் நாணிக் கரப்பாடும்மே. |
உரை | |
தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது. - கயமனார் |
356. பாலை |
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடைக் |
||
கழலோன் காப்பப் கடுகுபு போகி, |
||
அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த |
||
வெவ் வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய |
||
யாங்கு வல்லுநள்கொல் தானே-ஏந்திய |
||
செம் பொற் புனை கலத்து அம் பொரிக் கலந்த |
||
பாலும் பல என உண்ணாள், |
||
கோல் அமை குறுந் தொடித் தளிர் அன்னோளே? |
உரை | |
மகட்போக்கிய செவிலித்தாய் உரைத்தது. - கயமனார.் |
378. பாலை |
ஞாயிறு காணாத மாண் நிழற் படீஇய, |
||
மலைமுதல் சிறு நெறி மணல் மிகத் தாஅய், |
||
தண் மழை தலையவாகுக-நம் நீத்துச் |
||
சுடர் வாய் நெடு வேற் காளையொடு |
||
மட மா அரிவை போகிய சுரனே! |
உரை | |
மகள் போக்கிய செவிலி தெய்வத்திற்குப் பராயது. - கயமனார் |
396. நெய்தல் |
பாலும் உண்ணாள், பந்துடன் மேவாள், |
||
விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே, |
||
எளிது என உணர்ந்தனள்கொல்லோ-முளி சினை |
||
ஓமைக் குத்திய உயர் கோட்டு ஒருத்தல் |
||
வேனிற் குன்றத்து வெவ் அறைக் கவாஅன் |
||
மழை முழங்கு கடுங் குரல் ஓர்க்கும் |
||
கழை திரங்கு ஆர் இடை, அவனொடு செலவே? |
உரை | |
மகட் போக்கிய தாய் உரைத்தது, - கயமனார். |