4.8 தொகுப்புரை

சார்பு எழுத்துகளின் பத்து வகையையும் இப்பாடம் விளக்குகிறது. உயிர் எழுத்தும், மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய் எழுத்து உருவாவதை இப்பாடத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

ஆய்த எழுத்தின் வடிவம், மாத்திரை முதலியவற்றை இப்பாடம் தெரிவிக்கிறது. அளபெடையின் வகைகளையும் அவை பற்றிய விளக்கங்களையும் குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆகியவற்றையும் இப்பாடம் அறிவிக்கிறது.

ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் முதலியவை குறுகி வரும் தன்மையையும் அவற்றின் மாத்திரையையும் இப்பாடம் உணர்த்துகிறது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. குற்றியலுகரம் என்றால் என்ன? விடை
2. வன்றொடர், மென்றொடர்க் குற்றியலுகரங்களை விளக்குக. விடை
3. குற்றியலிகரம் என்றால் என்ன? விடை
4. ஐகாரக் குறுக்கம் என்றால் என்ன? விடை
5. மகரக் குறுக்கம் என்றால் என்ன? விடை
6. மகரக் குறுக்கம் எத்தனை வகைப்படும்? விடை
7. ஆய்தக் குறுக்கத்தை விளக்குக. விடை