பொருள்
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. பொருள் இலக்கணம் என்பது யாது?
செய்யுளில் பாடுபொருளாக அமையும் பொருள் பற்றிக் கூறுவது பொருள் இலக்கணம்.
2. பொருள் இலக்கணம் எத்தனை வகை பெறும்? அவை யாவை?
பொருள் இலக்கணம் இருவகை பெறும். அவை, அகப்பொருள், புறப்பொருள்.
3. அகப்பொருள் என்றால் என்ன?
ஒத்த அன்புடைய தலைவன் தலைவியின் காதல் வாழ்க்கை பற்றிக் கூறுவது அகப்பொருள்.
4. புறப்பொருள் என்றால் என்ன?
துன்பம்அறமும் பொருளும் அவற்றின் நிலையின்மையும் வீடுபேறும் பற்றிக் கூறுவது புறப்பொருள்.
5. குறிஞ்சி நிலத்திற்குரிய நிலம் யாது?
மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும்.
6. பொழுதின் வகைப்பாடு யாவை?
பெரும்பொழுது, சிறுபொழுது என பொழுது இரு வகை பெறும்.
7. எற்பாடு என்பதன் விளக்கம் யாது?
ஞாயிறு மறையும் நேரம் (எல்+படு) எற்பாடு எனப்பெறும்.
8. முல்லை நில மக்களுக்குரிய தொழில்கள் யாவை?
முல்லை நில மக்களுக்குரிய தொழில்கள் ஏறு தழுவலும், நிரை மேய்த்தலும்.
9. பொருத்தமற்ற காதலைப் புறத்திணை எவ்வாறு குறிப்பிடுகிறது?
பொருத்தமற்ற காதலைப் புறத்திணை பெருந்திணை எனக் குறிப்பிடுகிறது.
10. பாடாண் திணை என்றால் என்ன?
ஓர் அரசனின் புகழ், கொடை, வலிமை, வீரம் பற்றிப் புகழ்ந்து பாடுவது பாடாண் திணை எனப்பெறும்.