பொருள்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. செய்யுளின் பாடுபொருள் பற்றிக் கூறும் இலக்கணம் -------- எனப்பெறும்.
செய்யுளின் பாடுபொருள் பற்றிக் கூறும் இலக்கணம் பொருள் இலக்கணம் எனப்பெறும்
2. பொருள் இலக்கணம் ------------, ------------- என இருவகை பெறும்.
பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என இருவகைப் பெறும்.
3. முல்லைத் திணை என்பது ----------- பகுதியாகும்.
முல்லைத் திணை என்பது காடும் காடு சார்ந்த பகுதியாகும்.
4. தத்தம் இயல்பில் குறைந்த குறிஞ்சியும் முல்லையும் -------- எனப்பெறும்.
தத்தம் இயல்பில் குறைந்த குறிஞ்சியும் முல்லையும் பாலை நிலம் எனப்பெறும்.
5. மார்கழி, தை ஆகிய இரண்டு திங்களும் --------.
மார்கழி, தை ஆகிய இரண்டு திங்களும் முன்பனிக் காலம்.
6. குறிஞ்சி நிலக் கடவுள் -----------.
குறிஞ்சி நிலக் கடவுள் முருகன்.
7. அறமும் பொருளும் அவற்றின் நிலையின்மையும் வீடுபேறும் பற்றிக் கூறுவது ---------.
அறமும் பொருளும் அவற்றின் நிலையின்மையும் வீடுபேறும் பற்றிக் கூறுவது புறப்பொருள்.
8. வெட்சித்திணை என்பது -----------.
வெட்சித்திணை என்பது பசுக்கூட்டங்களைக் கவர்தல்.
9. பகைவரின் மதிலை வளைத்தல் -----------.
பகைவரின் மதிலை வளைத்தல் உழிஞைத் திணை.
10. அரசனின் புகழ், கொடை, வலிமை, வீரம் முதலானவற்றைப் பாடும் புறத்திணை ------------.
அரசனின் புகழ், கொடை, வலிமை, வீரம் முதலானவற்றைப் பாடும் புறத்திணை பாடாண் திணை ஆகும்.