நகரங்களில் சிறந்த பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரத்தில் பல்லவர் கால கற்றளியாக இறவாதீஸ்வரம் விளங்குகின்றது. இக்கோயில் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டுள்ளது. உபபீடம் சுட்ட செங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. தாங்குதளத்திலிருந்து (அதிட்டானம்) மணற்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மணற்கற்களிலேயே புடைப்புச் சிற்பங்களை எளிதாக வடிக்க இயலும். எனவே கருங்கல்லின்றி மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இக்கோயில் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. கோயிற் கட்டடக் கலைப் பாணிகளுள் ஒன்றான நாகரபாணியில் அமைந்துள்ளது. தளங்களில் சுதைச்சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை இந்தியத் தொல்லியல் துறையினரால் புனரமைக்கப்பட்டுள்ளன. தாங்குதளத்தில் கல்வெட்டுகளோ, கதைவிளக்கச் சிற்பங்களோ காணப்படவில்லை. இவ்வமைப்பு காலத்தால் முந்தையதாகும். மிகவும் எளிய அமைப்பாக தாங்குதளம் உபானம், ஜகதி, குமுதம், பாதகண்டம் பெற்று பாதபந்த அதிட்டானமாக விளங்குகின்றது. சுவர்ப்பகுதியில் சிவவடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாக பெரிய அளவில் இடம் பெற்றுள்ளன. சுவர்களின் மூலைப்பகுதியில் தூண்களைப் போன்று நின்றநிலையில் பெரிய யாளி உருவம் காட்டப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள குடைவரைகளில் யாளிகளின் தலைமேல் தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இக்கோயிலில் அதன் வளர்ச்சிக் கட்டமாக நின்ற நிலை யாளியே தூணின் சதுரம் மற்றும் கட்டுப்பகுதி போன்று அமைக்கப்பட்டுள்ளது இவ்வமைப்பு பல்லவர்களின் கட்டடக் கலைச் சிறப்பைக் காட்டுகிறது. யாளி பாயும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. சுவரில் காட்டப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்கள் அழகிய, எளிய வடிவினவாக அதிக அலங்காரமின்றி, இயல்பான நேர்த்தியோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. எழிலார்ந்த இச்சிற்பங்களின் உருவத் தன்மையை நோக்குங்கால் உண்மையான வடிவங்களாக அவை விளங்குவதைக் காணலாம். சுவர்க் கோட்டங்களில் அமைந்துள்ள சிவவடிவங்களின் மேல் அமைந்துள்ள அலங்கார மகரத் தோரணங்களின் நடுவே யோகபட்ட நிலையில் அமைந்த ஆண் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலிலும் காணப்படுகின்றது. கருவறை வெளிப்புற சுவரில் இடம்பெற்றுள்ள புடைப்புச்சிற்பங்களின் இருபுறமும் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் திசைக்கு இரண்டாக வாயிற்காவலர்கள் இரண்டு அரைத்தூண்களுக்கு நடுவில் நின்ற நிலையில் கதாயுதத்துடன் காட்டப்பட்டுள்ளனர். பல்லவர்களின் குடைவரைகளில் வாயிற்காவலர்கள் காட்டப்பட்டிருப்பது நாம் அறிந்ததே. அதன் வளர்ச்சி நிலையாக விமானச் சுவர்களில் அமைந்துள்ள கோட்ட புடைப்புச் சிற்பங்களுக்கு வாயிற்காவலர்கள் அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். விமானத்தின் கூரைப்பகுதியில் பூதவரிகள் இடம் பெற்றுள்ளன. கபோதத்தில் கூடுமுகங்களில் விநாயகர் வடிவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேலும் வள்ளிமண்டலமும், சந்திரமண்டலமும் காட்டப்பட்டுள்ளன. தளஉறுப்புகளாக கர்ணக்கூடு, பஞ்சரம், சாலா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதன் கோட்டங்களில் இறைவடிவங்கள் அமைந்துள்ளன. நாற்கரவடிவத்தில் அமைந்த இதன் சிகரமானது அதன் கலசமின்றி, கழுத்துப்பகுதியில் நான்குபுறமும் நந்தியைக் கொண்டுள்ளது.நகரங்களில் சிறந்த பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரத்தில் பல்லவர் கால கற்றளியாக இறவாதீஸ்வரம் விளங்குகின்றது. இக்கோயில் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டுள்ளது. உபபீடம் சுட்ட செங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. தாங்குதளத்திலிருந்து (அதிட்டானம்) மணற்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மணற்கற்களிலேயே புடைப்புச் சிற்பங்களை எளிதாக வடிக்க இயலும். எனவே கருங்கல்லின்றி மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இக்கோயில் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. கோயிற் கட்டடக் கலைப் பாணிகளுள் ஒன்றான நாகரபாணியில் அமைந்துள்ளது. தளங்களில் சுதைச்சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை இந்தியத் தொல்லியல் துறையினரால் புனரமைக்கப்பட்டுள்ளன. தாங்குதளத்தில் கல்வெட்டுகளோ, கதைவிளக்கச் சிற்பங்களோ காணப்படவில்லை. இவ்வமைப்பு காலத்தால் முந்தையதாகும். மிகவும் எளிய அமைப்பாக தாங்குதளம் உபானம், ஜகதி, குமுதம், பாதகண்டம் பெற்று பாதபந்த அதிட்டானமாக விளங்குகின்றது. சுவர்ப்பகுதியில் சிவவடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாக பெரிய அளவில் இடம் பெற்றுள்ளன. சுவர்களின் மூலைப்பகுதியில் தூண்களைப் போன்று நின்றநிலையில் பெரிய யாளி உருவம் காட்டப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள குடைவரைகளில் யாளிகளின் தலைமேல் தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இக்கோயிலில் அதன் வளர்ச்சிக் கட்டமாக நின்ற நிலை யாளியே தூணின் சதுரம் மற்றும் கட்டுப்பகுதி போன்று அமைக்கப்பட்டுள்ளது இவ்வமைப்பு பல்லவர்களின் கட்டடக் கலைச் சிறப்பைக் காட்டுகிறது. யாளி பாயும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. சுவரில் காட்டப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்கள் அழகிய, எளிய வடிவினவாக அதிக அலங்காரமின்றி, இயல்பான நேர்த்தியோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. எழிலார்ந்த இச்சிற்பங்களின் உருவத் தன்மையை நோக்குங்கால் உண்மையான வடிவங்களாக அவை விளங்குவதைக் காணலாம். சுவர்க் கோட்டங்களில் அமைந்துள்ள சிவவடிவங்களின் மேல் அமைந்துள்ள அலங்கார மகரத் தோரணங்களின் நடுவே யோகபட்ட நிலையில் அமைந்த ஆண் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலிலும் காணப்படுகின்றது. கருவறை வெளிப்புற சுவரில் இடம்பெற்றுள்ள புடைப்புச்சிற்பங்களின் இருபுறமும் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் திசைக்கு இரண்டாக வாயிற்காவலர்கள் இரண்டு அரைத்தூண்களுக்கு நடுவில் நின்ற நிலையில் கதாயுதத்துடன் காட்டப்பட்டுள்ளனர். பல்லவர்களின் குடைவரைகளில் வாயிற்காவலர்கள் காட்டப்பட்டிருப்பது நாம் அறிந்ததே. அதன் வளர்ச்சி நிலையாக விமானச் சுவர்களில் அமைந்துள்ள கோட்ட புடைப்புச் சிற்பங்களுக்கு வாயிற்காவலர்கள் அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். விமானத்தின் கூரைப்பகுதியில் பூதவரிகள் இடம் பெற்றுள்ளன. கபோதத்தில் கூடுமுகங்களில் விநாயகர் வடிவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேலும் வள்ளிமண்டலமும், சந்திரமண்டலமும் காட்டப்பட்டுள்ளன. தளஉறுப்புகளாக கர்ணக்கூடு, பஞ்சரம், சாலா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதன் கோட்டங்களில் இறைவடிவங்கள் அமைந்துள்ளன. நாற்கரவடிவத்தில் அமைந்த இதன் சிகரமானது அதன் கலசமின்றி, கழுத்துப்பகுதியில் நான்குபுறமும் நந்தியைக் கொண்டுள்ளது.நகரங்களில் சிறந்த பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரத்தில் பல்லவர் கால கற்றளியாக இறவாதீஸ்வரம் விளங்குகின்றது. இக்கோயில் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டுள்ளது. உபபீடம் சுட்ட செங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. தாங்குதளத்திலிருந்து (அதிட்டானம்) மணற்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மணற்கற்களிலேயே புடைப்புச் சிற்பங்களை எளிதாக வடிக்க இயலும். எனவே கருங்கல்லின்றி மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இக்கோயில் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. கோயிற் கட்டடக் கலைப் பாணிகளுள் ஒன்றான நாகரபாணியில் அமைந்துள்ளது. தளங்களில் சுதைச்சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை இந்தியத் தொல்லியல் துறையினரால் புனரமைக்கப்பட்டுள்ளன. தாங்குதளத்தில் கல்வெட்டுகளோ, கதைவிளக்கச் சிற்பங்களோ காணப்படவில்லை. இவ்வமைப்பு காலத்தால் முந்தையதாகும். மிகவும் எளிய அமைப்பாக தாங்குதளம் உபானம், ஜகதி, குமுதம், பாதகண்டம் பெற்று பாதபந்த அதிட்டானமாக விளங்குகின்றது. சுவர்ப்பகுதியில் சிவவடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாக பெரிய அளவில் இடம் பெற்றுள்ளன. சுவர்களின் மூலைப்பகுதியில் தூண்களைப் போன்று நின்றநிலையில் பெரிய யாளி உருவம் காட்டப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள குடைவரைகளில் யாளிகளின் தலைமேல் தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இக்கோயிலில் அதன் வளர்ச்சிக் கட்டமாக நின்ற நிலை யாளியே தூணின் சதுரம் மற்றும் கட்டுப்பகுதி போன்று அமைக்கப்பட்டுள்ளது இவ்வமைப்பு பல்லவர்களின் கட்டடக் கலைச் சிறப்பைக் காட்டுகிறது. யாளி பாயும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. சுவரில் காட்டப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்கள் அழகிய, எளிய வடிவினவாக அதிக அலங்காரமின்றி, இயல்பான நேர்த்தியோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. எழிலார்ந்த இச்சிற்பங்களின் உருவத் தன்மையை நோக்குங்கால் உண்மையான வடிவங்களாக அவை விளங்குவதைக் காணலாம். சுவர்க் கோட்டங்களில் அமைந்துள்ள சிவவடிவங்களின் மேல் அமைந்துள்ள அலங்கார மகரத் தோரணங்களின் நடுவே யோகபட்ட நிலையில் அமைந்த ஆண் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலிலும் காணப்படுகின்றது. கருவறை வெளிப்புற சுவரில் இடம்பெற்றுள்ள புடைப்புச்சிற்பங்களின் இருபுறமும் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் திசைக்கு இரண்டாக வாயிற்காவலர்கள் இரண்டு அரைத்தூண்களுக்கு நடுவில் நின்ற நிலையில் கதாயுதத்துடன் காட்டப்பட்டுள்ளனர். பல்லவர்களின் குடைவரைகளில் வாயிற்காவலர்கள் காட்டப்பட்டிருப்பது நாம் அறிந்ததே. அதன் வளர்ச்சி நிலையாக விமானச் சுவர்களில் அமைந்துள்ள கோட்ட புடைப்புச் சிற்பங்களுக்கு வாயிற்காவலர்கள் அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். விமானத்தின் கூரைப்பகுதியில் பூதவரிகள் இடம் பெற்றுள்ளன. கபோதத்தில் கூடுமுகங்களில் விநாயகர் வடிவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேலும் வள்ளிமண்டலமும், சந்திரமண்டலமும் காட்டப்பட்டுள்ளன. தளஉறுப்புகளாக கர்ணக்கூடு, பஞ்சரம், சாலா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதன் கோட்டங்களில் இறைவடிவங்கள் அமைந்துள்ளன. நாற்கரவடிவத்தில் அமைந்த இதன் சிகரமானது அதன் கலசமின்றி, கழுத்துப்பகுதியில் நான்குபுறமும் நந்தியைக் கொண்டுள்ளது.நகரங்களில் சிறந்த பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரத்தில் பல்லவர் கால கற்றளியாக இறவாதீஸ்வரம் விளங்குகின்றது. இக்கோயில் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டுள்ளது. உபபீடம் சுட்ட செங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. தாங்குதளத்திலிருந்து (அதிட்டானம்) மணற்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மணற்கற்களிலேயே புடைப்புச் சிற்பங்களை எளிதாக வடிக்க இயலும். எனவே கருங்கல்லின்றி மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இக்கோயில் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. கோயிற் கட்டடக் கலைப் பாணிகளுள் ஒன்றான நாகரபாணியில் அமைந்துள்ளது. தளங்களில் சுதைச்சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை இந்தியத் தொல்லியல் துறையினரால் புனரமைக்கப்பட்டுள்ளன. தாங்குதளத்தில் கல்வெட்டுகளோ, கதைவிளக்கச் சிற்பங்களோ காணப்படவில்லை. இவ்வமைப்பு காலத்தால் முந்தையதாகும். மிகவும் எளிய அமைப்பாக தாங்குதளம் உபானம், ஜகதி, குமுதம், பாதகண்டம் பெற்று பாதபந்த அதிட்டானமாக விளங்குகின்றது. சுவர்ப்பகுதியில் சிவவடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாக பெரிய அளவில் இடம் பெற்றுள்ளன. சுவர்களின் மூலைப்பகுதியில் தூண்களைப் போன்று நின்றநிலையில் பெரிய யாளி உருவம் காட்டப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள குடைவரைகளில் யாளிகளின் தலைமேல் தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இக்கோயிலில் அதன் வளர்ச்சிக் கட்டமாக நின்ற நிலை யாளியே தூணின் சதுரம் மற்றும் கட்டுப்பகுதி போன்று அமைக்கப்பட்டுள்ளது இவ்வமைப்பு பல்லவர்களின் கட்டடக் கலைச் சிறப்பைக் காட்டுகிறது. யாளி பாயும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. சுவரில் காட்டப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்கள் அழகிய, எளிய வடிவினவாக அதிக அலங்காரமின்றி, இயல்பான நேர்த்தியோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. எழிலார்ந்த இச்சிற்பங்களின் உருவத் தன்மையை நோக்குங்கால் உண்மையான வடிவங்களாக அவை விளங்குவதைக் காணலாம். சுவர்க் கோட்டங்களில் அமைந்துள்ள சிவவடிவங்களின் மேல் அமைந்துள்ள அலங்கார மகரத் தோரணங்களின் நடுவே யோகபட்ட நிலையில் அமைந்த ஆண் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலிலும் காணப்படுகின்றது. கருவறை வெளிப்புற சுவரில் இடம்பெற்றுள்ள புடைப்புச்சிற்பங்களின் இருபுறமும் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் திசைக்கு இரண்டாக வாயிற்காவலர்கள் இரண்டு அரைத்தூண்களுக்கு நடுவில் நின்ற நிலையில் கதாயுதத்துடன் காட்டப்பட்டுள்ளனர். பல்லவர்களின் குடைவரைகளில் வாயிற்காவலர்கள் காட்டப்பட்டிருப்பது நாம் அறிந்ததே. அதன் வளர்ச்சி நிலையாக விமானச் சுவர்களில் அமைந்துள்ள கோட்ட புடைப்புச் சிற்பங்களுக்கு வாயிற்காவலர்கள் அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். விமானத்தின் கூரைப்பகுதியில் பூதவரிகள் இடம் பெற்றுள்ளன. கபோதத்தில் கூடுமுகங்களில் விநாயகர் வடிவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேலும் வள்ளிமண்டலமும், சந்திரமண்டலமும் காட்டப்பட்டுள்ளன. தளஉறுப்புகளாக கர்ணக்கூடு, பஞ்சரம், சாலா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதன் கோட்டங்களில் இறைவடிவங்கள் அமைந்துள்ளன. நாற்கரவடிவத்தில் அமைந்த இதன் சிகரமானது அதன் கலசமின்றி, கழுத்துப்பகுதியில் நான்குபுறமும் நந்தியைக் கொண்டுள்ளது.நகரங்களில் சிறந்த பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரத்தில் பல்லவர் கால கற்றளியாக இறவாதீஸ்வரம் விளங்குகின்றது. இக்கோயில் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டுள்ளது. உபபீடம் சுட்ட செங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. தாங்குதளத்திலிருந்து (அதிட்டானம்) மணற்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மணற்கற்களிலேயே புடைப்புச் சிற்பங்களை எளிதாக வடிக்க இயலும். எனவே கருங்கல்லின்றி மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இக்கோயில் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. கோயிற் கட்டடக் கலைப் பாணிகளுள் ஒன்றான நாகரபாணியில் அமைந்துள்ளது. தளங்களில் சுதைச்சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை இந்தியத் தொல்லியல் துறையினரால் புனரமைக்கப்பட்டுள்ளன. தாங்குதளத்தில் கல்வெட்டுகளோ, கதைவிளக்கச் சிற்பங்களோ காணப்படவில்லை. இவ்வமைப்பு காலத்தால் முந்தையதாகும். மிகவும் எளிய அமைப்பாக தாங்குதளம் உபானம், ஜகதி, குமுதம், பாதகண்டம் பெற்று பாதபந்த அதிட்டானமாக விளங்குகின்றது. சுவர்ப்பகுதியில் சிவவடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாக பெரிய அளவில் இடம் பெற்றுள்ளன. சுவர்களின் மூலைப்பகுதியில் தூண்களைப் போன்று நின்றநிலையில் பெரிய யாளி உருவம் காட்டப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள குடைவரைகளில் யாளிகளின் தலைமேல் தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இக்கோயிலில் அதன் வளர்ச்சிக் கட்டமாக நின்ற நிலை யாளியே தூணின் சதுரம் மற்றும் கட்டுப்பகுதி போன்று அமைக்கப்பட்டுள்ளது இவ்வமைப்பு பல்லவர்களின் கட்டடக் கலைச் சிறப்பைக் காட்டுகிறது. யாளி பாயும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. சுவரில் காட்டப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்கள் அழகிய, எளிய வடிவினவாக அதிக அலங்காரமின்றி, இயல்பான நேர்த்தியோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. எழிலார்ந்த இச்சிற்பங்களின் உருவத் தன்மையை நோக்குங்கால் உண்மையான வடிவங்களாக அவை விளங்குவதைக் காணலாம். சுவர்க் கோட்டங்களில் அமைந்துள்ள சிவவடிவங்களின் மேல் அமைந்துள்ள அலங்கார மகரத் தோரணங்களின் நடுவே யோகபட்ட நிலையில் அமைந்த ஆண் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலிலும் காணப்படுகின்றது. கருவறை வெளிப்புற சுவரில் இடம்பெற்றுள்ள புடைப்புச்சிற்பங்களின் இருபுறமும் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் திசைக்கு இரண்டாக வாயிற்காவலர்கள் இரண்டு அரைத்தூண்களுக்கு நடுவில் நின்ற நிலையில் கதாயுதத்துடன் காட்டப்பட்டுள்ளனர். பல்லவர்களின் குடைவரைகளில் வாயிற்காவலர்கள் காட்டப்பட்டிருப்பது நாம் அறிந்ததே. அதன் வளர்ச்சி நிலையாக விமானச் சுவர்களில் அமைந்துள்ள கோட்ட புடைப்புச் சிற்பங்களுக்கு வாயிற்காவலர்கள் அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். விமானத்தின் கூரைப்பகுதியில் பூதவரிகள் இடம் பெற்றுள்ளன. கபோதத்தில் கூடுமுகங்களில் விநாயகர் வடிவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேலும் வள்ளிமண்டலமும், சந்திரமண்டலமும் காட்டப்பட்டுள்ளன. தளஉறுப்புகளாக கர்ணக்கூடு, பஞ்சரம், சாலா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதன் கோட்டங்களில் இறைவடிவங்கள் அமைந்துள்ளன. நாற்கரவடிவத்தில் அமைந்த இதன் சிகரமானது அதன் கலசமின்றி, கழுத்துப்பகுதியில் நான்குபுறமும் நந்தியைக் கொண்டுள்ளது.நகரங்களில் சிறந்த பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரத்தில் பல்லவர் கால கற்றளியாக இறவாதீஸ்வரம் விளங்குகின்றது. இக்கோயில் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டுள்ளது. உபபீடம் சுட்ட செங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. தாங்குதளத்திலிருந்து (அதிட்டானம்) மணற்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மணற்கற்களிலேயே புடைப்புச் சிற்பங்களை எளிதாக வடிக்க இயலும். எனவே கருங்கல்லின்றி மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இக்கோயில் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. கோயிற் கட்டடக் கலைப் பாணிகளுள் ஒன்றான நாகரபாணியில் அமைந்துள்ளது. தளங்களில் சுதைச்சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை இந்தியத் தொல்லியல் துறையினரால் புனரமைக்கப்பட்டுள்ளன. தாங்குதளத்தில் கல்வெட்டுகளோ, கதைவிளக்கச் சிற்பங்களோ காணப்படவில்லை. இவ்வமைப்பு காலத்தால் முந்தையதாகும். மிகவும் எளிய அமைப்பாக தாங்குதளம் உபானம், ஜகதி, குமுதம், பாதகண்டம் பெற்று பாதபந்த அதிட்டானமாக விளங்குகின்றது. சுவர்ப்பகுதியில் சிவவடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாக பெரிய அளவில் இடம் பெற்றுள்ளன. சுவர்களின் மூலைப்பகுதியில் தூண்களைப் போன்று நின்றநிலையில் பெரிய யாளி உருவம் காட்டப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள குடைவரைகளில் யாளிகளின் தலைமேல் தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இக்கோயிலில் அதன் வளர்ச்சிக் கட்டமாக நின்ற நிலை யாளியே தூணின் சதுரம் மற்றும் கட்டுப்பகுதி போன்று அமைக்கப்பட்டுள்ளது இவ்வமைப்பு பல்லவர்களின் கட்டடக் கலைச் சிறப்பைக் காட்டுகிறது. யாளி பாயும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. சுவரில் காட்டப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்கள் அழகிய, எளிய வடிவினவாக அதிக அலங்காரமின்றி, இயல்பான நேர்த்தியோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. எழிலார்ந்த இச்சிற்பங்களின் உருவத் தன்மையை நோக்குங்கால் உண்மையான வடிவங்களாக அவை விளங்குவதைக் காணலாம். சுவர்க் கோட்டங்களில் அமைந்துள்ள சிவவடிவங்களின் மேல் அமைந்துள்ள அலங்கார மகரத் தோரணங்களின் நடுவே யோகபட்ட நிலையில் அமைந்த ஆண் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலிலும் காணப்படுகின்றது. கருவறை வெளிப்புற சுவரில் இடம்பெற்றுள்ள புடைப்புச்சிற்பங்களின் இருபுறமும் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் திசைக்கு இரண்டாக வாயிற்காவலர்கள் இரண்டு அரைத்தூண்களுக்கு நடுவில் நின்ற நிலையில் கதாயுதத்துடன் காட்டப்பட்டுள்ளனர். பல்லவர்களின் குடைவரைகளில் வாயிற்காவலர்கள் காட்டப்பட்டிருப்பது நாம் அறிந்ததே. அதன் வளர்ச்சி நிலையாக விமானச் சுவர்களில் அமைந்துள்ள கோட்ட புடைப்புச் சிற்பங்களுக்கு வாயிற்காவலர்கள் அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். விமானத்தின் கூரைப்பகுதியில் பூதவரிகள் இடம் பெற்றுள்ளன. கபோதத்தில் கூடுமுகங்களில் விநாயகர் வடிவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேலும் வள்ளிமண்டலமும், சந்திரமண்டலமும் காட்டப்பட்டுள்ளன. தளஉறுப்புகளாக கர்ணக்கூடு, பஞ்சரம், சாலா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதன் கோட்டங்களில் இறைவடிவங்கள் அமைந்துள்ளன. நாற்கரவடிவத்தில் அமைந்த இதன் சிகரமானது அதன் கலசமின்றி, கழுத்துப்பகுதியில் நான்குபுறமும் நந்தியைக் கொண்டுள்ளது.நகரங்களில் சிறந்த பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரத்தில் பல்லவர் கால கற்றளியாக இறவாதீஸ்வரம் விளங்குகின்றது. இக்கோயில் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டுள்ளது. உபபீடம் சுட்ட செங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. தாங்குதளத்திலிருந்து (அதிட்டானம்) மணற்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மணற்கற்களிலேயே புடைப்புச் சிற்பங்களை எளிதாக வடிக்க இயலும். எனவே கருங்கல்லின்றி மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இக்கோயில் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. கோயிற் கட்டடக் கலைப் பாணிகளுள் ஒன்றான நாகரபாணியில் அமைந்துள்ளது. தளங்களில் சுதைச்சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை இந்தியத் தொல்லியல் துறையினரால் புனரமைக்கப்பட்டுள்ளன. தாங்குதளத்தில் கல்வெட்டுகளோ, கதைவிளக்கச் சிற்பங்களோ காணப்படவில்லை. இவ்வமைப்பு காலத்தால் முந்தையதாகும். மிகவும் எளிய அமைப்பாக தாங்குதளம் உபானம், ஜகதி, குமுதம், பாதகண்டம் பெற்று பாதபந்த அதிட்டானமாக விளங்குகின்றது. சுவர்ப்பகுதியில் சிவவடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாக பெரிய அளவில் இடம் பெற்றுள்ளன. சுவர்களின் மூலைப்பகுதியில் தூண்களைப் போன்று நின்றநிலையில் பெரிய யாளி உுவம் காட்டப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள குடைவரைகளில் யாளிகளின் தலைமேல் தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இக்கோயிலில் அதன் வளர்ச்சிக் கட்டமாக நின்ற நிலை யாளியே தூணின் சதுரம் மற்றும் கட்டுப்பகுதி போன்று அமைக்கப்பட்டுள்ளது இவ்வமைப்பு பல்லவர்களின் கட்டடக் கலைச் சிறப்பைக் காட்டுகிறது. யாளி பாயும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. சுவரில் காட்டப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்கள் அழகிய, எளிய வடிவினவாக அதிக அலங்காரமின்றி, இயல்பான நேர்த்தியோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. எழிலார்ந்த இச்சிற்பங்களின் உருவத் தன்மையை நோக்குங்கால் உண்மையான வடிவங்களாக அவை விளங்குவதைக் காணலாம். சுவர்க் கோட்டங்களில் அமைந்துள்ள சிவவடிவங்களின் மேல் அமைந்துள்ள அலங்கார மகரத் தோரணங்களின் நடுவே யோகபட்ட நிலையில் அமைந்த ஆண் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலிலும் காணப்படுகின்றது. கருவறை வெளிப்புற சுவரில் இடம்பெற்றுள்ள புடைப்புச்சிற்பங்களின் இருபுறமும் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் திசைக்கு இரண்டாக வாயிற்காவலர்கள் இரண்டு அரைத்தூண்களுக்கு நடுவில் நின்ற நிலையில் கதாயுதத்துடன் காட்டப்பட்டுள்ளனர். பல்லவர்களின் குடைவரைகளில் வாயிற்காவலர்கள் காட்டப்பட்டிருப்பது நாம் அறிந்ததே. அதன் வளர்ச்சி நிலையாக விமானச் சுவர்களில் அமைந்துள்ள கோட்ட புடைப்புச் சிற்பங்களுக்கு வாயிற்காவலர்கள் அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். விமானத்தின் கூரைப்பகுதியில் பூதவரிகள் இடம் பெற்றுள்ளன. கபோதத்தில் கூடுமுகங்களில் விநாயகர் வடிவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேலும் வள்ளிமண்டலமும், சந்திரமண்டலமும் காட்டப்பட்டுள்ளன. தளஉறுப்புகளாக கர்ணக்கூடு, பஞ்சரம், சாலா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதன் கோட்டங்களில் இறைவடிவங்கள் அமைந்துள்ளன. நாற்கரவடிவத்தில் அமைந்த இதன் சிகரமானது அதன் கலசமின்றி, கழுத்துப்பகுதியில் நான்குபுறமும் நந்தியைக் கொண்டுள்ளது.