Tamil Virtual Academy

TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Languages

tamilnadu_temples_new

அருள்மிகு உலகாபுரம் விஷ்ணு திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

Other Names :

அரிஞ்சய விண்ணகரம்

Place :

உலகாபுரம்

Taluk :

வானூர்

District :

விழுப்புரம்

Religious Type :

வைணவம்-பெருமாள்

Lord Name :

அரிஞ்சய விண்ணகர் வீற்றிருந்த ஆழ்வார்

Procession On God :

Mother / Goddess Name :

Temple Tree :

Tirukkulam / River :

Agamam :

Worship Time :

Festivals :

History :

Protecting Company :

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.

Nearest Temples Arc :

பெருமுக்கல் சீதாகுகை, உலகாபுரம் சிவன் கோயில், கண்டராதித்தப் பேரேரி, காலகண்ட பேரேரி, ஷகாளி கோயில், அய்யனார் கோயில்

Summary :

சென்னையிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள திண்டிவனத்தில் இருந்து உப்புவேலூர் செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் வானூர் வட்டத்தில் உலகாபுரம் அமைந்துள்ளது. ட்டுகள் தெரிவிக்கின்றன. அமைக்கப்பட்டுள்ளனர். சோழர்கால உருளைத்தூண்கள் முகமண்டபத்தில் இடம் பெற்றுள்ளன.இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை தேவகோட்டங்களில் பிற்கால சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கருவறை சதுர வடிவில் அமைந்துள்ளது.

Period / Ruler :

கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜராஜ சோழன்

Inscription / Copper :

இக்கோயிலில் உள்ள முதலாம் இராஜேந்திர சோழனின் கல்வெட்டு ஒன்று இறைவனின் பெயரை அரிஞ்சய விண்ணகர் வீற்றிருந்த ஆழ்வார் என்று கூறுகிறது. மேலும் காலகண்ட பேரேரி, கண்டராதித்த பேரேரி போன்ற ஏரிகளின் பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. மேலும் இவ்வூரில் தெற்கில் வாசல் மகாசாத்தானார் அய்யனார் கோயில் கோகர்ணீசுவரம் உடைய மகாதேவர் கோயில் போன்ற கோயில்கள் இருந்ததாகவும் கல்வெட்டுகளின் வாயிலாக அறியமுடிகிறது.

Murals :

இல்லை

Sculptures :

கருவறை தேவகோட்டங்களில் ப்ரத்யும்னன், அனிருத்தன், வாசுதேவன் போன்ற சிற்பங்கள் காணப்படுகின்றன.

Temple Structure :

இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை தேவகோட்டங்களில் பிற்கால சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கருவறை சதுர வடிவில் அமைந்துள்ளது. விமானம் தளப்பகுதி தற்போது காணப்படவில்லை. கருவறையில் விஜயநகர காலத்திய விஷ்ணு வடிவம் அமைந்துள்ளது. இக்கோயில் சோழர்களுக்குப் பின் விஜயநகர கலைப்பாணியையும் கொண்டு அமைந்துள்ளது.

Location :

விஷ்ணுகோயில் கோயில், வானூர் தாலுகா, உலகாபுரம்-604 154, விழுப்புரம்

Phone :

Website :

Email :

Temple Opening Time :

காலை 8.00 முதல் மாலை 5.00 வரை

Way :

சென்னையிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள திண்டிவனத்தில் இருந்து உப்புவேலூர் செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் வானூர் வட்டத்தில் உலகாபுரம் அமைந்துள்ளது.

Nearby Bus Station :

உப்புவேலூர்

Nearby Railway Station :

திண்டிவனம், விழுப்புரம்

Nearby Airport :

சென்னை மீனம்பாக்கம்

Accommodation :

திண்டிவனம் விடுதிகள்
சாலை வரைபடம்
Updated Date : 07-12-2016 18:19:35 IST