அருள்மிகு பனஞ்சாடி திருநீலகண்டர் திருக்கோயில்
- கோவில் விவரங்கள்
- சிறப்புகள்
- செல்லும் வழி மற்றும் வரைபடம்
- காட்சிக்கூடம்
Protecting Company :
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
Nearest Temples Arc :
அம்பாசமுத்திரம் கோயில்கள், தென்காசி சிவன் கோயில்
Summary :
பனஞ்சாடி என்னும் ஊரின் மொட்டையாண்டவர் குளத்தின் கிழக்குக் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் “மொட்டையாண்டவர் கோயில்“ என்றும், “திருநீலகண்டர் கோயில்“ என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது. இது முற்காலப் பாண்டியர் கட்டடடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கோயிலின் அடிப்பகுதி முதல் கூரைப்பகுதி வரை கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கூரைப்பகுதிக்கு மேல் சுதையாலான விமானம் அமைந்துள்ளது. இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை மட்டும் கொண்டதாக தற்போது விளங்குகிறது. எளிய அமைப்புடைய இக்கோயில் கோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் இடம்பெறவில்லை. கோட்டங்களில் தெய்வங்களை அமைக்காதிருப்பது பாண்டியர்களின் கலைப்பாணியாகும். கருவறை சதுர வடிவமுடையது. தாங்குதளத்தில் யானைவரி செல்கிறது. எனவே பிரதிபந்த அதிட்டானமாக திகழ்கிறது. கருவறை விமானம் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் உள்ளன. முழுவதும் சிதிலமடைந்த இக்கோயில் பழமைத் தன்மையாக அதன் எச்சங்களைக் காட்டி நிற்கிறது. கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் உள்ள யானைவரியும், பூமிதேசத்தில் உள்ள யாளிவரியும் குறிப்பிடத்தக்கவை. விமானத்தின் கழுத்துப்பகுதியில் நான்முகன், யோக நரசிம்மன், ஆலமர்ச்செல்வன் போன்ற கற்சிலைகள் இருந்துள்ளன. கோயிலுக்கு முன்பாக பல கல் நந்திகள் உள்ளன.
Period / Ruler :
கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டு / முற்காலப் பாண்டியர்
Sculptures :
கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் உள்ள யானைவரியும், பூமிதேசத்தில் உள்ள யாளிவரியும் குறிப்பிடத்தக்கவை. விமானத்தின் கழுத்துப்பகுதியில் நான்முகன், யோக நரசிம்மன், ஆலமர்ச்செல்வன் போன்ற கற்சிலைகள் இருந்துள்ளன. கோயிலுக்கு முன்பாக பல கல் நந்திகள் உள்ளன.
Temple Structure :
இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை மட்டும் கொண்டதாக தற்போது விளங்குகிறது. எளிய அமைப்புடைய இக்கோயில் கோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் இடம்பெறவில்லை. கோட்டங்களில் தெய்வங்களை அமைக்காதிருப்பது பாண்டியர்களின் கலைப்பாணியாகும். கருவறை சதுர வடிவமுடையது. தாங்குதளத்தில் யானைவரி செல்கிறது. எனவே பிரதிபந்த அதிட்டானமாக திகழ்கிறது. கருவறை விமானம் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் உள்ளன. முழுவதும் சிதிலமடைந்த இக்கோயில் பழமைத் தன்மையாக அதன் எச்சங்களைக் காட்டி நிற்கிறது.
Location :
திருநீலகண்டர் கோயில், பனஞ்சாடி, திருநெல்வேலி
Temple Opening Time :
காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
Way :
அம்பாசமுத்திரம்- தென்காசி சாலையில் பனஞ்சாடி என்னும் ஊர் அமைந்துள்ளது. தென்காசியிலிருந்தும், அம்பாசமுத்திரத்திலிருந்தும் பனஞ்சாடி செல்லலாம்.
Nearby Bus Station :
தென்காசி, அம்பாசமுத்திரம்
சாலை வரைபடம்
Temple Gallery
-
திருநீலகண்டர் கோயில் செல்லும் ஒற்றையடிப் பாதை, பனஞ்சாடி, திருநெல்வேலி, கி.பி.8-9 ஆம் நூற்றாண்டு
-
திருநீலகண்டர் கோயில் முழுத்தோற்றமும் அமைப்பும், பனஞ்சாடி, திருநெல்வேலி, கி.பி.8-9 ஆம் நூற்றாண்டு
-
திருநீலகண்டர் கோயில் கிழக்கு நோக்கிய நுழைவுவாயில், பனஞ்சாடி, திருநெல்வேலி, கி.பி.8-9 ஆம் நூற்றாண்டு
-
திருநீலகண்டர் கோயில் கருவறை விமான சுவர் அமைப்பு, பனஞ்சாடி, திருநெல்வேலி, கி.பி.8-9 ஆம் நூற்றாண்டு
-
திருநீலகண்டர் கோயில் கருவறை விமான சுவர் மற்றும் புனரமைக்கப்பட்டுள்ள தலைப்பகுதி (சிகரம்), பனஞ்சாடி, திருநெல்வேலி, கி.பி.8-9 ஆம் நூற்றாண்டு
-
திருநீலகண்டர் கோயில் கருவறை விமான கூரைப்பகுதி, பனஞ்சாடி, திருநெல்வேலி, கி.பி.8-9 ஆம் நூற்றாண்டு
-
திருநீலகண்டர் கோயில் கருவறை விமான தாங்குதளமும், சுவர்ப்பகுதியில் காணப்படும் அரைத்தூண்களின் தோற்றம், பனஞ்சாடி, திருநெல்வேலி, கி.பி.8-9 ஆம் நூற்றாண்டு