Tamil Virtual Academy

TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Languages

tamilnadu_temples_new

அருள்மிகு பேரங்கியூர் திருமூலநாதர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

Other Names :

மூலஸ்தானமுடையார் கோயில்

Place :

பேரங்கியூர்

Taluk :

திருவெண்ணெய்நல்லூர்

District :

விழுப்புரம்

Religious Type :

சைவம்-சிவபெருமான்

Lord Name :

மூலஸ்தானமுடைய மகாதேவர்

Procession On God :

Mother / Goddess Name :

Temple Tree :

Tirukkulam / River :

Agamam :

Worship Time :

Festivals :

History :

Protecting Company :

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.

Nearest Temples Arc :

திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோயில், திருக்கோவிலூர் திரிவிக்கிரமர் கோயில்

Summary :

கல்வெட்டுகளில் பேரங்கூர் என்று குறிக்கப்பட்டுள்ள பேரங்கியூரில் முதலாம் பராந்தகன் கால சிவன் கோயில் ஒன்று உள்ளது. திருமுனைப்பாடி நாட்டில் பேரங்கூர் பிரம்மதேயமாக இருந்துள்ளது. நான்குவேதங்கள் தெரிந்த பிராமணர்களுக்கு தானமளிக்கப்பட்ட ஊராக இருந்துள்ளது. கல்வெட்டுகளில் கோயில் பெயர் மூலஸ்தானமுடையார் கோயில் என்றும், இறைவன் மூலஸ்தானமுடைய மகாதேவர் என்றும் குறிக்கப்படுகின்றன. பராந்தகன் தொடங்கி பல்வேறு அரசர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. திருமூலநாதர் கோயிலில் முற்காலச் சோழர்களின் எழில்மிகு சிற்பங்கள் அமைந்துள்ளன. அவை தனிச்சிறப்புடையவை. அர்த்தமண்டப தென்புறக் கோட்டத்தில் மானேந்திய விநாயகர் சிற்பம் காணப்படுகிறது. இவரின் தலைக்கு மேல் குடையும், இருபுறமும் சாமரங்களும் காட்டப்பட்டுள்ளன. விநாயகரின் நான்கு தோள்களில் முன்கையிரண்டில் மானும் அம்பும் ஏந்தியுள்ளார். இவ்வமைப்பு தனித்தன்மையுடையதாகும். விநாயகர் வேட்டுவக்கடவுள் என்பதை இது காட்டுகிறது. தென்புற தேவக்கோட்டத்தில் ஆலமர்ச்செல்வன் சிற்பம், வழக்கத்திற்கு மாறாக இடது காலை மடித்து வலது தொடையின் மீது வைத்தும், வலது காலைத் தொங்கவிட்டும் உடலை ஒருக்களித்தவாறு ஒருவாறு சாய்ந்த நிலையில் அமர்ந்துள்ளார். அர்த்தமண்டப வடபுறக் கோட்டத்தில் விஷ்ணு துர்க்கை உள்ளார். கருவறையின் மேற்குப்புற தேவகோட்டத்தில் திருமால் நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி காட்சியளிக்கிறார். கோயிலின் தென்புறத்தில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏழுகன்னியர், மூத்ததேவி (ஜ்யேஷ்டா தேவி), சண்டிகேஸ்வரர், விநாயகர் சிற்பங்களும் முற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த எழில்மிகு சிற்பங்களாகும். திருமூலநாதர் கோயில் கருவறை, அர்த்தமண்டபம் இரண்டும் கோயில் கட்டப்பட்டக் காலத்தவையாகும். முகமண்டபம் தற்காலத்தியது. இக்கோயில் தாங்குதளம் முதல் கொடுங்கை வரை கற்றளியாகும். விமானம் செங்கல்லும் சுதையும் கொண்டு கட்டப்பட்டதால் தற்போது விமானம் காணப்படவில்லை. தாங்குதளம் ஜகதி, குமுதம், கண்டம், பட்டிகை என உபானம் தவிர்த்து அனைத்து உறுப்புகளையும் பெற்று விளங்குகிறது. இக்கோயில் முழுவதும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை வெளிப்புறச் சுவரில் அரைத்தூண்கள் நிற்கின்றன. கூரைப்பகுதியில் கொடுங்கைக்குக் கீழே பூதவரி செல்கின்றது. பூதகணங்கள் ஆடல்பாடலுடன் காட்டப்பட்டுள்ளன. கொடுங்கையில் கூடுமுகங்கள் காட்டப்பட்டுள்ளன. தேவகோட்டங்களின் மேற்புறம் மகரத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கருவறை மேற்குச் சுவரில் தாங்குதளப் பகுதியில் அளவு கோல் ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோல் 365 செ.மீ. நீளம் கொண்டது. சோழர்கள் காலத்தில் இந்த அளவுகோல் நிலம் அளப்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

Period / Ruler :

கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் பராந்தகச் சோழன்

Inscription / Copper :

கல்வெட்டுகளில் பேரங்கூர் என்று குறிக்கப்பட்டுள்ள பேரங்கியூரில் முதலாம் பராந்தகன் கால சிவன் கோயில் ஒன்று உள்ளது. திருமுனைப்பாடி நாட்டில் பேரங்கூர் பிரம்மதேயமாக இருந்துள்ளது. நான்குவேதங்கள் தெரிந்த பிராமணர்களுக்கு தானமளிக்கப்பட்ட ஊராக இருந்துள்ளது. கல்வெட்டுகளில் கோயில் பெயர் மூலஸ்தானமுடையார் கோயில் என்றும், இறைவன் மூலஸ்தானமுடைய மகாதேவர் என்றும் குறிக்கப்படுகின்றன. பராந்தகன் தொடங்கி பல்வேறு அரசர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

Murals :

இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் முதலில் வண்ணந்தீட்டப்பட்டிருக்கலாம். அதற்கான எச்சங்கள் கருவறை விமானத்தின் கூரைப்பகுதியில் காணப்படுகின்றன.

Sculptures :

திருமூலநாதர் கோயிலில் முற்காலச் சோழர்களின் எழில்மிகு சிற்பங்கள் அமைந்துள்ளன. அவை தனிச்சிறப்புடையவை. அர்த்தமண்டப தென்புறக் கோட்டத்தில் மானேந்திய விநாயகர் சிற்பம் காணப்படுகிறது. பக்கவாட்டில் ஒருக்களித்து தன்னுடைய இயல்பான லளிதாசனத்தை விட சற்று இடப்பக்கம் சாய்ந்தவாறு அமர்ந்துள்ளார். அவருடைய தோள்கள் மனிதனுடைய இயல்பான தோற்றத்தை ஒத்திருக்கிறது காணத்தக்கது. இவரின் தலைக்கு மேல் குடையும், இருபுறமும் சாமரங்களும் காட்டப்பட்டுள்ளன. விநாயகரின் நான்கு தோள்களில் முன்கையிரண்டில் மானும் அம்பும் ஏந்தியுள்ளார். இவ்வமைப்பு தனித்தன்மையுடையதாகும். விநாயகர் வேட்டுவக்கடவுள் என்பதை இது காட்டுகிறது. தென்புற தேவக்கோட்டத்தில் ஆலமர்ச்செல்வன் சிற்பம், வழக்கத்திற்கு மாறாக இடது காலை மடித்து வலது தொடையின் மீது வைத்தும், வலது காலைத் தொங்கவிட்டும் உடலை ஒருக்களித்தவாறு ஒருவாறு சாய்ந்த நிலையில் அமர்ந்துள்ளார். அர்த்தமண்டப வடபுறக் கோட்டத்தில் விஷ்ணு துர்க்கை உள்ளார். கருவறையின் மேற்குப்புற தேவகோட்டத்தில் திருமால் நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி காட்சியளிக்கிறார். கோயிலின் தென்புறத்தில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏழுகன்னியர், மூத்ததேவி (ஜ்யேஷ்டா தேவி), சண்டிகேஸ்வரர், விநாயகர் சிற்பங்களும் முற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த எழில்மிகு சிற்பங்களாகும்.

Temple Structure :

திருமூலநாதர் கோயில் கருவறை, அர்த்தமண்டபம் இரண்டும் கோயில் கட்டப்பட்டக் காலத்தவையாகும். முகமண்டபம் தற்காலத்தியது. இக்கோயில் தாங்குதளம் முதல் கொடுங்கை வரை கற்றளியாகும். விமானம் செங்கல்லும் சுதையும் கொண்டு கட்டப்பட்டதால் தற்போது விமானம் காணப்படவில்லை. தாங்குதளம் ஜகதி, குமுதம், கண்டம், பட்டிகை என உபானம் தவிர்த்து அனைத்து உறுப்புகளையும் பெற்று விளங்குகிறது. இக்கோயில் முழுவதும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை வெளிப்புறச் சுவரில் அரைத்தூண்கள் நிற்கின்றன. கூரைப்பகுதியில் கொடுங்கைக்குக் கீழே பூதவரி செல்கின்றது. பூதகணங்கள் ஆடல்பாடலுடன் காட்டப்பட்டுள்ளன. கொடுங்கையில் கூடுமுகங்கள் காட்டப்பட்டுள்ளன. தேவகோட்டங்களின் மேற்புறம் மகரத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கருவறை மேற்குச் சுவரில் தாங்குதளப் பகுதியில் அளவு கோல் ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோல் 365 செ.மீ. நீளம் கொண்டது. சோழர்கள் காலத்தில் இந்த அளவுகோல் நிலம் அளப்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

Location :

திருமூலநாதர் கோயில், பேரங்கியூர்-607107, விழுப்புரம்

Phone :

Website :

Email :

Temple Opening Time :

காலை 8.00 முதல் மாலை 5.00 வரை

Way :

சென்னையிலிருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ள விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் 10 கி.மீ. தொலைவில் பேரங்கியூர் அமைந்துள்ளது. திருவெண்ணெய்நல்லூர் வழியாகவும், உளுந்தூர் பேட்டை வழியாகவும் பேரங்கியூர் செல்லலாம்.

Nearby Bus Station :

பண்ருட்டி, திருக்கோவிலூர், திருவெண்ணெய்நல்லூர்

Nearby Railway Station :

திருவெண்ணெய்நல்லூர் ரோடு, கண்டம்பாக்கம், விழுப்புரம்

Nearby Airport :

சென்னை மீனம்பாக்கம், திருச்சி

Accommodation :

விழுப்புரம் விடுதிகள்
சாலை வரைபடம்
Updated Date : 07-12-2016 18:19:42 IST