Tamil Virtual Academy

TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Languages

tamilnadu_temples_new

அருள்மிகு திருக்கோகர்ணம் கோகர்ணீசுவரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

Other Names :

கோகர்ணீசுவரர் கோயில், மகிழவனேஸ்வரர்

Place :

திருக்கோகர்ணம்

Taluk :

புதுக்கோட்டை

District :

புதுக்கோட்டை

Religious Type :

சைவம்-சிவபெருமான்

Lord Name :

கோகர்ணீசுவரர், மகிழவனேஸ்வரர்

Procession On God :

Mother / Goddess Name :

ஸ்ரீபிரகதாம்பாள், ஸ்ரீபெரியநாயகி, ஸ்ரீமங்கலநாயகி

Temple Tree :

மகிழ மரம்

Tirukkulam / River :

கங்கா தீர்த்தம், மங்கள தீர்த்தம்

Agamam :

Worship Time :

உஷைக்காலம், காலை சந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தசாமம்

Festivals :

History :

இந்திரலோகத்திற்கு தாமதமாக வந்த காமதேனு பசு பூமியில் பசுவாக பிறக்க இந்திரனால் சபிக்கப்பட்டது. பூமியில் மகிழமரத்தடியில் இருந்த சிவலிங்கத்திற்கு தன் காதுகளில் புனித நீரை கொண்டு வந்து வழிபட்டு வந்த அந்த பசுவிற்கு இளங்கன்று ஒன்று இருந்தது. அக்கன்றை வேங்கை ஒன்று வேட்டையாட முயற்சி செய்தது. அப்போது தன் கன்றை காப்பாற்ற விழைந்த அப்பசு சிவபூஜை முடிந்த பின்பு தானே அந்த வேங்கைக்கு உணவாக வருவதாகக் கூறி தன் கன்றை விடுவித்தது. தன் சொன்ன சொல் தவறாதபடி அவ்வாறே பசுவும் செய்தது. இதனால் மகிழ்ந்த வேங்கையாக வந்து பசுவினை சோதித்த சிவபெருமான் பசுவுக்கு காட்சியளித்து முக்தியருளினார். கோ என்றால் பசு. கர்ணம் என்றால் காது. பசு தன் காதுகளில் நீரை கொண்டு வந்து அபிஷேகம் செய்த இடமாதலால் திருக்கோகர்ணம் என்றாயிற்று.

Protecting Company :

இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது.

Nearest Temples Arc :

புதுக்கோட்டை அருங்காட்சியகம், திருக்கட்டளைக் கோயில், நார்த்தாமலை, குன்னாண்டார் கோயில், மலையடிப்பட்டு

Summary :

முதலாம் மகேந்திரவர்மனால் எடுப்பிக்கப்பட்ட புதுக்கோட்டை குடைவரைக் கோயில் திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ளது. கி.பி.7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலக் குடைவரைக் கோயிலாகும். இக்கோயில் முதலாம் மகேந்திரவர்மனால் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டது. தாய்ப்பாறையிலேயே இலிங்கம் வெட்டப்பட்டுள்ளது. மண்டபங்கள், திருச்சுற்று முதலிய சோழர்கள் மற்றும் பாண்டியர்களால் 11 மற்றும் 13-ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டுள்ளது. புதுக்கோட்டை தொண்டைமான் அரசர்களின் குலதெய்வமாக இக்கோயில் பெரியநாயகி அம்மன் விளங்கினாள். தொண்டைமான்கள் இக்கோயிலுக்கு கொடையளித்துள்ளனர். இக்கோயிலில் அம்மன் திருமுன்னுக்கு பிற்காலத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ராய கோபுரம் அமைந்துள்ளது. அனுப்ப மண்டபத்தில் ஏழு தூண்கள் இரண்டு வரிசைகளாக மொத்தம் 14 தூண்கள் கொண்டதாக அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் கூரைப்பகுதியின் விதானத்தில் இராமாயண ஓவியங்கள் விஜயநகர ஆட்சிக்காலத்தில் வரையப்பட்டன. கிளி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், சுக்கிரவார மண்டபம், மங்கலதீர்த்த மண்டபம் ஆகிய மண்டபங்கள் பெரியநாயகி அம்மனுக்கா எடுப்பிக்கப்பட்டவைகளாகும். அம்மன் திருமுன்னின் கிழக்குப் பகுதியில் கோபுரம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர், அப்பர் ஆகியோர் தமது தேவாரப்பாடல்களால் இத்தலத்தைப் பாடியுள்ளனர். அப்பர் தன்னுடையப் பாடலில் கங்கையை சடையில் ஏற்கும் பெருமானை வர்ணிக்கும் வகையில் இங்குள்ள கங்காதரர் சிற்பம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சோழர்கள், பாண்டியர்கள், தொண்டைமான்கள், விஜயநகரர் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுகள் இங்குள்ளன. இவைகள் அனைத்தும் இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட கொடைகளைக் குறிப்பிடுகின்றன. இக்கோயிலில் அமைந்துள்ள அனுப்ப மண்டபத்தில் இராமாயண ஓவியங்கள் விஜயநகரர் ஆட்சிக்காலத்தில் தீட்டப்பட்டுள்ளன.

Period / Ruler :

கி.பி.7-ஆம் நூற்றாண்டு / முதலாம் மகேந்திர வர்மன்

Inscription / Copper :

இக்கோயிலில் மிக அதிகமாக சோழர்காலக் கல்வெட்டுகளே காணப்படுகின்றன. முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட்டொன்று பங்குனி உத்திர திருநாளுக்கு அளிக்கப்பட்ட கொடையைக் குறிப்பிடுகிறது. மூன்றாம் இராஜராஜன் காலத்துக் கல்வெட்டொன்று நொந்தா விளக்கெரிக்க பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட கொடையைக் குறிப்பிடுகிறது. குடைவரையின் தூண் ஒன்றில் இருக்கும் சோழர்காலக் கல்வெட்டு இக்கோயில் இறைவனை கோகர்நாட்டு மகாதேவர் என்றும், இவ்வூர் காவிர நாட்டில் உள்ள ஒரு தேவதானம் என்றும் குறிப்பிடுகிறது. பாண்டியர் காலத்துக் கல்வெட்டில் மாறஞ்சடையன் ஆட்சிக்காலத்தில் நக்கன்செட்டி என்பவனால் ஒரு நொந்தா விளக்கெரிக்க கொடையளிக்கப்பட்டுள்ளது. கோனேரின்மை கொண்டான், குலசேகர பாண்டியர் ஆகியோர் அளித்த கொடைகளில் வைகாசித் திருநாளுக்கு அளிக்கப்பட்டது முக்கியமானது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இறையிலி நிலமாக கோயிலுக்கு தானம் வழங்கப்பட்டது. விஜயநகர ஆட்சிக் காலத்தில் கம்பணன் திருநாமக்காணியாக நிலத்தை கோயிலுக்கு அளித்துள்ளான்.

Murals :

இராமாயண ஓவியங்கள் விதானத்தில் அமைந்துள்ளன.

Sculptures :

திருக்கோகர்ணம் கோயில் ஒரு குடைவரைக் கோயிலாகும். இக்கோயிலின் கருவறையில் மூலப்பாறையிலேயே இலிங்கம் வெட்டப்பட்டுள்ளது. புடைப்புச் சிற்பங்களாக கணபதி மற்றும் கங்காதரர் சிற்பங்கள் அமைந்துள்ளன. ஏழுகன்னியர், பைரவர், முருகன், ஜுரஹரேஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகிய திருவுருவங்கள் தனிச்சிற்பங்களாக உள்ளன. தூண்களில் உள்ள சிற்பங்களாக மன்மதன், ஆலிங்கனமூர்த்தி, அடியவர்கள், பெண்கள், வீரபத்திரர், ஊர்த்துவதாண்டவர் ஆகிய சிற்பங்கள் அமைந்துள்ளன. அம்மன் திருமுன்னில் நின்ற நிலையில் மங்கள நாயகி சிற்பம் உள்ளது. தூண் சிற்பங்கள் பலவற்றில் வணங்கிய நிலையில் அரச, அரசியர் உருவங்கள் காட்டப்பட்டுள்ளன.

Temple Structure :

கி.பி.7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலக் குடைவரைக் கோயிலாகும். இக்கோயில் முதலாம் மகேந்திரவர்மனால் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டது. தாய்ப்பாறையிலேயே இலிங்கம் வெட்டப்பட்டுள்ளது. மண்டபங்கள், திருச்சுற்று முதலிய சோழர்கள் மற்றும் பாண்டியர்களால் 11 மற்றும் 13-ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டுள்ளது. புதுக்கோட்டை தொண்டைமான் அரசர்களின் குலதெய்வமாக இக்கோயில் பெரியநாயகி அம்மன் விளங்கினாள். தொண்டைமான்கள் இக்கோயிலுக்கு கொடையளித்துள்ளனர். இக்கோயிலில் அம்மன் திருமுன்னுக்கு பிற்காலத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ராய கோபுரம் அமைந்துள்ளது. அனுப்ப மண்டபத்தில் ஏழு தூண்கள் இரண்டு வரிசைகளாக மொத்தம் 14 தூண்கள் கொண்டதாக அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் கூரைப்பகுதியின் விதானத்தில் இராமாயண ஓவியங்கள் விஜயநகர ஆட்சிக்காலத்தில் வரையப்பட்டன. கிளி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், சுக்கிரவார மண்டபம், மங்கலதீர்த்த மண்டபம் ஆகிய மண்டபங்கள் பெரியநாயகி அம்மனுக்கா எடுப்பிக்கப்பட்டவைகளாகும். அம்மன் திருமுன்னின் கிழக்குப் பகுதியில் கோபுரம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

Location :

ஸ்ரீபிரகதாம்பாள் கோயில், திருக்கோகர்ணம் - 622 002, புதுக்கோட்டை

Phone :

04322-221084

Website :

Email :

Temple Opening Time :

காலை 6.00 -12.30முதல் மாலை 4.30-8.30 வரை

Way :

சென்னையிலிருந்து 340 கி.மீ. தொலைவில் உள்ள புதுக்கோட்டையில் திருக்கோகர்ணம் அமைந்துள்ளது.

Nearby Bus Station :

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம்

Nearby Railway Station :

திருச்சி

Nearby Airport :

திருச்சி

Accommodation :

புதுக்கோட்டை விடுதிகள்
சாலை வரைபடம்
Updated Date : 07-12-2016 18:19:43 IST