Tamil Virtual Academy

TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Languages

tamilnadu_temples_new

அருள்மிகு அம்பை காசிபநாதர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

Other Names :

திருப்போத்துடைய நாயனார், திருப்போத்துடைய தேவர், திருப்போத்துடைய ஆழ்வார்

Place :

அம்பாசமுத்திரம்

Taluk :

அம்பாசமுத்திரம்

District :

திருநெல்வேலி

Religious Type :

சைவம்-சிவபெருமான்

Lord Name :

காசிபநாதர்

Procession On God :

Mother / Goddess Name :

ஸ்ரீமரகதாம்பிகை

Temple Tree :

Tirukkulam / River :

தேவி தீர்த்தம், சலா தீர்த்தம், காசிப தீர்த்தம், ருத்ர தீர்த்தம், புழுமாறி தீர்த்தம், கோகில தீர்த்தம்

Agamam :

Worship Time :

உஷைக்காலம், காலை சந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தசாமம்

Festivals :

பங்குனிப் பெருந்திருவிழா, மார்கழி திருவாதிரை, தைப்பூசம், கந்தசஷ்டி

History :

தண்பொருநை ஆற்றில் கங்கையாறும் கலந்து வருவதாக நம்பிக்கை உள்ளது. அக்கங்கையையும் காசியையும் நினைத்து இவ்வூர் இறைவனுக்கு காசிநாதர் எனப் பெயர் வழங்கலாயிற்று என்பர். காசிபர் என்னும் முனிவர் வழிபட்டதால் இறைவன் காசியபநாதர் ஆனார் என்கிறது தலவரலாறு. மேலும் இவ்வூர் இறைவனுக்கு திருப்போத்துடைய ஆழ்வார், திருப்போத்துடையநாயனார், திருப்போத்துடையதேவர், திருப்போத்துடையபட்டாரகர் எனப் பல பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. போத்து என்றால் காளையைக் குறிக்கும். எனவே காளை-எருது எருத்தாளுடையார் என்பது நாளடைவில் மருவி எரிச்சாளுடையார் எனவும் வழங்கலாயிற்று. மன்னனின் கொடிய நோயைத் தீர்த்து பெற்ற பொன்னை பாதுகாக்கச் சொல்லி கொடுத்திருந்த ஒருவனை ஏமாற்றிய அர்ச்சகர் ஒருவரை புளியமரத்தோடு கட்டி எரித்து தண்டித்ததால் இறைவன் எரித்தாட்கொண்டார் எனவும் வழங்கப்படுவதாக அம்பை தலவரலாறு கூறுகிறது.

Protecting Company :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

Nearest Temples Arc :

கிருஷ்ணசுவாமி கோயில், பாபநாசம் சிவன் கோயில்

Summary :

திருநெல்வேலி-பாபநாசம் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட புனுகு சபாபதியின் நடனக்காட்சி, திருவாட்சி, வசந்த மண்டபத் தூண் சிற்பங்கள், பள்ளியறை மணியடி மண்டபத் தூண் சிற்பங்கள், ஆறுமுகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்திருக்கும் சிற்பம், மரக்கதவில் திருவிளையாடற் புராணக் காட்சிகள் ஆகிய சிற்பங்கள் எழில் வாய்ந்தவை. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. இறைவனுக்கும் அம்மனுக்கும் தனித்தனி கருவறைகள் அமைந்துள்ளன. இராஜகோபுர பணி நடைபெற்று வருகிறது. இறைவன் சதுரமான கருவறையில் இலிங்க வடிவில் உள்ளார். அர்த்தமண்டம், முகமண்டபம் மற்றும் மகா மண்டபம் அமைந்துள்ளது. முகமண்டபத்தூண்கள் உருளைத்தூண்களாக அமைந்துள்ளன. முகமண்டபத்தின் நுழைவாயிலின் இருபுறமும் மேடை போன்ற அமைப்பு உள்ளது. இது அமர்ந்து வேலை செய்பவர்களுக்காக இருக்கலாம். மகாமண்டபத்தில் உள்ள தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. சுற்றுப்பிரகாரம், நந்தவனம் அமைந்துள்ளது. கோயில் மிகப்பெரிய வளாகத்தில் அமைந்துள்ளது. இறைவனது கருவறை விமானம் திராவிட பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. தாங்குதள உறுப்புகள் அனைத்தும் அமைந்துள்ளன. கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. கோட்டங்களில் சிற்பங்கள் இடம் பெறவில்லை. இது பாண்டிய நாட்டின் முறைமையாகும்.

Period / Ruler :

கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்

Inscription / Copper :

கருவறை விமானத்தின் தென்புறச் சுவர்களிலும், வடபுறச் சுவர்களிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகளில் இவ்வூர் முள்ளிநாடு ராஜராஜ சதுர்வேதி மங்கலத்து இளங்கோக்குடி என்று குறிப்பிடப்படுகிறது. இங்குள்ள இறைவன் திருப்போத்துடைய மாதேவர், திருப்போத்துடைய பட்டாரகர், திருப்போத்துடைய நாயனார், திருப்போத்துடைய ஆழ்வார், திருப்போத்துடைய தேவர் எனக் குறிப்பிடப்படுகிறார். இக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு விளக்குக் கொடைகளைப் பற்றி இக்கல்வெட்டுகள் பேசுகின்றன.

Murals :

இல்லை

Sculptures :

ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட புனுகு சபாபதியின் நடனக்காட்சி, திருவாட்சி, வசந்த மண்டபத் தூண் சிற்பங்கள், பள்ளியறை மணியடி மண்டபத் தூண் சிற்பங்கள், ஆறுமுகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்திருக்கும் சிற்பம், மரக்கதவில் திருவிளையாடற் புராணக் காட்சிகள் ஆகிய சிற்பங்கள் எழில் வாய்ந்தவை.

Temple Structure :

இறைவனுக்கும் அம்மனுக்கும் தனித்தனி கருவறைகள் அமைந்துள்ளன. இராஜகோபுர பணி நடைபெற்று வருகிறது. இறைவன் சதுரமான கருவறையில் இலிங்க வடிவில் உள்ளார். அர்த்தமண்டம், முகமண்டபம் மற்றும் மகா மண்டபம் அமைந்துள்ளது. முகமண்டபத்தூண்கள் உருளைத்தூண்களாக அமைந்துள்ளன. முகமண்டபத்தின் நுழைவாயிலின் இருபுறமும் மேடை போன்ற அமைப்பு உள்ளது. இது அமர்ந்து வேலை செய்பவர்களுக்காக இருக்கலாம். மகாமண்டபத்தில் உள்ள தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. சுற்றுப்பிரகாரம், நந்தவனம் அமைந்துள்ளது. கோயில் மிகப்பெரிய வளாகத்தில் அமைந்துள்ளது. இறைவனது கருவறை விமானம் திராவிட பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. தாங்குதள உறுப்புகள் அனைத்தும் அமைந்துள்ளன. கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. கோட்டங்களில் சிற்பங்கள் இடம் பெறவில்லை. இது பாண்டிய நாட்டின் முறைமையாகும்.

Location :

அருள்மிகு காசிபநாத சுவாமி கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி-627401

Phone :

04634-253921

Website :

Email :

Temple Opening Time :

காலை 6.00 -12.30முதல் மாலை 4.30-8.30 வரை

Way :

திருநெல்வேலி-பாபநாசம் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது.

Nearby Bus Station :

திருநெல்வேலி, தென்காசி

Nearby Railway Station :

திருநெல்வேலி, தென்காசி

Nearby Airport :

மதுரை

Accommodation :

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி
சாலை வரைபடம்
Updated Date : 07-12-2016 18:19:43 IST