Tamil Virtual Academy

TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Languages

tamilnadu_temples_new

அருள்மிகு மாங்காடு வைகுண்டப் பெருமாள் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

Other Names :

வைகுண்டப் பெருமாள், சீர் பெருமாள்

Place :

மாங்காடு

Taluk :

காஞ்சிபுரம்

District :

காஞ்சிபுரம்

Religious Type :

வைணவம்-பெருமாள்

Lord Name :

வைகுண்டப் பெருமாள்

Procession On God :

Mother / Goddess Name :

Temple Tree :

Tirukkulam / River :

Agamam :

Worship Time :

காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

Festivals :

வைகுண்ட ஏகாதசி

History :

மாங்காடு காமாட்சி அம்மன் மாங்காட்டில் தவம் இருந்த போது, சிவன் அம்மனுக்கு அருள் புரிய வந்தார். திருமாலும் தன் தங்கையான காமாட்சிக்கு சீர் கொண்டு வந்தார். ஆனால் சிவன் காமாட்சியை காஞ்சிபுரம் செல்ல வேண்டவே, திருமாலும் காஞ்சிபுரம் கிளம்பினார். அப்போது அவரது பக்தரான மார்க்கண்டேய மகரிஷி அவரை இங்கேயே தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் படி வேண்டினார். அவரின் வேண்டுகோளுக்கிணங்கி திருமாலும் வைகுண்டப் பெருமாளாக இங்கேயே தங்கினார். கையில் பிரயோகச் சக்கரத்துடன் காட்சியளிக்கும் திருமால் தன் வலது முன்கையில் கணையாழி ஒன்றை உள்ளங்கையில் வைத்துள்ளார். இதுவே அவர் தன் தங்கைக்கு கொண்டு வந்த சீராகும். எனவே இவரை சீர் பெருமாள் என்று அழைக்கிறார்கள்.

Protecting Company :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

Nearest Temples Arc :

வெள்ளீசுவரர் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், வேம்புலியம்மன் கோயில்

Summary :

பண்டையக் காலத்தில் இத்தலம் முழுவதும் மாமரக்காடாகக் காட்சியளித்ததால் மாங்காடு என்று பெயர் பெற்றது. சூதவனம் என்று இத்தலத்திற்கு மற்றொரு பெயர் உண்டு. மாங்காடு காமாட்சியம்மன் கோயிலின் அருகே வைகுண்டப் பெருமாள் கோயில் உள்ளது. உள்ளது. சீர் கொண்டு வந்த பெருமாளாக தன் வலது உள்ளங்கையில் கணையாழி (மோதிரம்) ஒன்றை வைத்துள்ளார். மார்க்கண்டேய மகரிஷியின் திருவுருவமும் இக்கோயிலில் உள்ளது. அவரே பெருமாளை இத்தலத்தில் தங்குமாறு வேண்டினார். இக்கோயிலில் கல்வெட்டுகள் ஏதும் இல்லை. மாங்காடு காமாட்சி அம்மனின் உபகோயிலாக இக்கோயில் திகழ்கிறது. சைவம், வைணவம், சாக்தம், சமணம் ஆகிய மதங்கள் செழித்திருந்த பகுதியாக பண்டு இருந்திருப்பதை அறியமுடிகிறது.

Period / Ruler :

கி.பி.14-15-ஆம் நூற்றாண்டு / விசயநகரர்

Inscription / Copper :

இல்லை

Murals :

இல்லை

Sculptures :

கருவறையில் பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். நான்கு திருக்கைகளில் பின் வலதில் பிரயோகச் சக்கரமும், பின் இடதில் சங்கும் ஏந்தியுள்ளார். வலது முன்கை கணையாழியை வைத்துள்ளது. திருமாலின் வடிவம் பல்லவர்-சோழர் கால இடைக்காலத்தில் அமைக்கப்பட்டதாக அதன் உருவமைப்பை நோக்குகையில் தெரிகிறது. மேலும் வாயிலில் மூன்று கால் உடைய முனிவர் ஒருவர் அமர்ந்துள்ளார். கோட்டங்கள் வெற்றுக் கோட்டங்களாகவே உள்ளன. தளங்களில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. மிகப்பெரிய கோயில் வளாகம் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றிலும் சிறு கோயில்கள் அமைந்துள்ளன. முகமண்டபத்தில் ஆழ்வார் சிற்பங்கள் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றன. இக்கோயிலில் பெருமாளுக்குரிய எட்டுதிக்கு காவலர்கள் சிற்பம் இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது ஒரே ஒரு சிற்பம் மட்டுமே உள்ளது. அது வருணனாய் இருக்கலாம். சிம்மத் தூண் ஒன்று இக்கோயிலில் உடைந்த நிலையில் கிடைக்கிறது. எனவே இக்கோயில் பல்லவர் காலத்திலோ, சோழர்கள் காலத்திலோ கற்றளியாய் இருந்திருக்க வேண்டும்.

Temple Structure :

இக்கோயில் விஜயநகரக் கட்டடப்பாணியின் இறுதி வடிவில் கட்டப்பட்டு, கருவறையும், அர்த்தமண்டபமும் அதனுடன் ஒருமித்த மகாமண்டபமும் கூடியது. மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலின் உபகோயிலாக இக்கோயில் திகழ்கிறது. கருவறையில் பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். நான்கு திருக்கைகளில் பின் வலதில் பிரயோகச் சக்கரமும், பின் இடதில் சங்கும் ஏந்தியுள்ளார். வலது முன்கை கணையாழியை வைத்துள்ளது. திருமாலின் வடிவம் பல்லவர்-சோழர் கால இடைக்காலத்தில் அமைக்கப்பட்டதாக அதன் உருவமைப்பை நோக்குகையில் தெரிகிறது. மேலும் வாயிலில் மூன்று கால் உடைய முனிவர் ஒருவர் அமர்ந்துள்ளார். கருவறை விமானம் மூன்று தளங்களை உடையதாக விளங்குகிறது. இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. தாங்குதளம் முதல் கலசம் வரை முழுவதும் செங்கல் தளியாகவே தற்போது உள்ளது. விமானத்தின் சுவர்ப்பகுதிகளில் தூண்களுடன் கூடிய கோட்டங்கள் உள்ளன. கோட்டங்கள் வெற்றுக் கோட்டங்களாகவே உள்ளன. தளங்களில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. மிகப்பெரிய கோயில் வளாகம் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றிலும் சிறு கோயில்கள் அமைந்துள்ளன.

Location :

அருள்மிகு வைகுண்டப்பெருமாள் கோயில், மாங்காடு-602 101, காஞ்சிபுரம்

Phone :

044-26272053, 26495883

Website :

Email :

Temple Opening Time :

காலை6.00-12.30 முதல் மாலை 4.00-8.30 வரை

Way :

சென்னை கோயம்பேட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில் மாங்காடு அமைந்துள்ளது.

Nearby Bus Station :

குன்றத்தூர், குமணன் சாவடி, கோயம்பேடு

Nearby Railway Station :

தாம்பரம், சென்னை

Nearby Airport :

சென்னை மீனம்பாக்கம்

Accommodation :

சென்னை மாநகர விடுதிகள்
சாலை வரைபடம்
Updated Date : 07-12-2016 18:19:47 IST