Tamil Virtual Academy

TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Languages

tamilnadu_temples_new

அருள்மிகு திருக்கண்டியூர் பிரம்மசிரக்கண்டீஸ்வரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

Other Names :

பிரம்மசிரக்கண்டீசர், வீரட்டேசர், பிரமநாதர், ஆதிவில்வநாதர், திருவீரட்டானத்து மகாதேவர், திருக்கண்டியூருடைய மகாதேவர்

Place :

திருக்கண்டியூர்

Taluk :

திருவையாறு

District :

தஞ்சாவூர்

Religious Type :

சைவம்-சிவபெருமான்

Lord Name :

பிரம்மசிரக்கண்டீஸ்வரர்

Procession On God :

சோமாஸ்கந்தர்

Mother / Goddess Name :

மங்களநாயகி, மங்களாம்பிகை

Temple Tree :

வில்வம்

Tirukkulam / River :

நந்தி தீர்த்தம், குடமுருட்டி, பிரம்மதீர்த்தம், தட்ச தீர்த்தம்

Agamam :

Worship Time :

காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

Festivals :

சப்தஸ்தானம் (சித்திரை மாதம்), பிரம்மோற்சவம் (வைகாசி மாதம்), அன்னாபிஷேகம் (ஐப்பசி மாதம்), ஆருத்ரா தரிசனம் (மார்கழி மாதம்)

History :

சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாசுதேவம், ஸத்யோஜாதம் என ஐந்து முகங்கள் இருப்பது போன்று முற்காலத்தில் நான்முகனும் ஐந்து திருமுகங்களைப் பெற்றிருந்தார். அதனால் தானே படைப்புக் கடவுள் என்ற கர்வமும் அவரிடம் இருந்தது. அவரது கர்வத்தை அடக்க சிவபெருமான் பைரவரைப் படைத்து அவரை பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒரு தலையைக் கொய்து அவரது கர்வத்தை அடக்கப் பணித்தார். பைரவரும் தமது இடக்கை நக நுனியால் பிரம்மனது ஐந்தாவது தலையைக் கொய்தார். அத்தலை அப்படியே அவரது கையில் ஒட்டிக்கொண்டு பிரம்மஹத்தி தோஷமானது. இத்தோஷம் நீங்க ஊர்தோறும் சென்று பிச்சையெடுக்க வேண்டும் என்று சிவபெருமான் கூறியதால் பைரவரும் பல இடங்களுக்கு சென்று பிச்சையேற்றுத் திரிந்தார். இறுதியாக இத்தலத்திற்கு வந்தபோது பிரம்மனின் தலை பைரவரன் கையை விட்டகன்றது. பிரம்மனும் தனது கர்வம் நீங்கி தம் மனைவி சரஸ்வதிதேவியுடன் இத்தல இறைவனை வழிபட்டு மீண்டும் தமது படைப்புத் தொழிலை திரும்ப பெற்றதாக தலபுராணம் குறிப்பிடுகிறது. துரோணர் தமக்கு மகப்பேறில்லாக் குறையை போக்க இங்குள்ள இறைவனை தும்பை மலரால் அர்ச்சித்து புத்திரப்பேறு பெற்றார். சதாதபமுனிவர் ஒரு சிறந்த சிவபக்தர் ஆவார். நாள்தோறும் பல சிவத்தலங்களை வணங்குவதோடு பிரதோஷ காலத்தில் திருக்காளத்தி சென்று காளத்திநாதரை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இம்முனிவர் ஒரு முறை திருக்கண்டியூர் வந்த போது காளத்தி செல்லமுடியாமல் போனது. இதனால் வருந்தி அக்னிப்பிரவேசம் செய்து தன் உயிரை விட இவர் முற்பட காளத்திநாதர் உமையோடு காட்சியளித்து முனிவரை தடுத்தாட்கொண்டார். தக்கன் சிவபெருமானை அவமதித்த பாவம் தீர இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றான். பகீரதன் கண்டியூர் வீரட்டேசுவரை வணங்கி அருள்பெற்று கங்கையை பூமிக்கு கொண்டு வந்தான். சித்ரவஜன் எனும் கந்தர்வன் தன் மனைவி குணவதியுடன் ஒரு சோலையில் மகிழ்ந்திருந்தான். அச்சமயம் அவ்வழியே சென்ற தேவலர் என்ற முனிவரை அவன் கவனியாது போக அதனால் கோபமடைந்த அம்முனிவர் சாபமிடுகின்றார். இதனால் சித்ரவஜன் அசுரனாகவும் குணவதி பலாச மரமாகவும் மாறினர். சித்ரவஜன் சாபத்திற்கு விமோசனம் வேண்ட அகத்தியரின் சீடரான சதாதபரால் தான் அச்சாபம் நீங்கும் என்றார் தேவலர். பின்னர் ஒரு சமயம் திருக்காளத்திநாதரை வழிபடும் பொருட்டு கண்டியூர் வழியே சென்ற சதாதபர் செல்லும் வழியில் மழை குறுக்கிட்டதால் அங்கிருந்த பலாச மரத்தின் கீழ் நின்றார். இதனால் குணவதி மீண்டும பெண் உருவடைந்தாள். பின் சித்ரவஜனின் மீது கமண்டல நீரைத் தெளித்து அவனை மீண்டும் கந்தர்வனாக்கினார்.சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாசுதேவம், ஸத்யோஜாதம் என ஐந்து முகங்கள் இருப்பது போன்று முற்காலத்தில் நான்முகனும் ஐந்து திருமுகங்களைப் பெற்றிருந்தார். அதனால் தானே படைப்புக் கடவுள் என்ற கர்வமும் அவரிடம் இருந்தது. அவரது கர்வத்தை அடக்க சிவபெருமான் பைரவரைப் படைத்து அவரை பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒரு தலையைக் கொய்து அவரது கர்வத்தை அடக்கப் பணித்தார். பைரவரும் தமது இடக்கை நக நுனியால் பிரம்மனது ஐந்தாவது தலையைக் கொய்தார். அத்தலை அப்படியே அவரது கையில் ஒட்டிக்கொண்டு பிரம்மஹத்தி தோஷமானது. இத்தோஷம் நீங்க ஊர்தோறும் சென்று பிச்சையெடுக்க வேண்டும் என்று சிவபெருமான் கூறியதால் பைரவரும் பல இடங்களுக்கு சென்று பிச்சையேற்றுத் திரிந்தார். இறுதியாக இத்தலத்திற்கு வந்தபோது பிரம்மனின் தலை பைரவரன் கையை விட்டகன்றது. பிரம்மனும் தனது கர்வம் நீங்கி தம் மனைவி சரஸ்வதிதேவியுடன் இத்தல இறைவனை வழிபட்டு மீண்டும் தமது படைப்புத் தொழிலை திரும்ப பெற்றதாக தலபுராணம் குறிப்பிடுகிறது. துரோணர் தமக்கு மகப்பேறில்லாக் குறையை போக்க இங்குள்ள இறைவனை தும்பை மலரால் அர்ச்சித்து புத்திரப்பேறு பெற்றார். சதாதபமுனிவர் ஒரு சிறந்த சிவபக்தர் ஆவார். நாள்தோறும் பல சிவத்தலங்களை வணங்குவதோடு பிரதோஷ காலத்தில் திருக்காளத்தி சென்று காளத்திநாதரை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இம்முனிவர் ஒரு முறை திருக்கண்டியூர் வந்த போது காளத்தி செல்லமுடியாமல் போனது. இதனால் வருந்தி அக்னிப்பிரவேசம் செய்து தன் உயிரை விட இவர் முற்பட காளத்திநாதர் உமையோடு காட்சியளித்து முனிவரை தடுத்தாட்கொண்டார். தக்கன் சிவபெருமானை அவமதித்த பாவம் தீர இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றான். பகீரதன் கண்டியூர் வீரட்டேசுவரை வணங்கி அருள்பெற்று கங்கையை பூமிக்கு கொண்டு வந்தான். சித்ரவஜன் எனும் கந்தர்வன் தன் மனைவி குணவதியுடன் ஒரு சோலையில் மகிழ்ந்திருந்தான். அச்சமயம் அவ்வழியே சென்ற தேவலர் என்ற முனிவரை அவன் கவனியாது போக அதனால் கோபமடைந்த அம்முனிவர் சாபமிடுகின்றார். இதனால் சித்ரவஜன் அசுரனாகவும் குணவதி பலாச மரமாகவும் மாறினர். சித்ரவஜன் சாபத்திற்கு விமோசனம் வேண்ட அகத்தியரின் சீடரான சதாதபரால் தான் அச்சாபம் நீங்கும் என்றார் தேவலர். பின்னர் ஒரு சமயம் திருக்காளத்திநாதரை வழிபடும் பொருட்டு கண்டியூர் வழியே சென்ற சதாதபர் செல்லும் வழியில் மழை குறுக்கிட்டதால் அங்கிருந்த பலாச மரத்தின் கீழ் நின்றார். இதனால் குணவதி மீண்டும பெண் உருவடைந்தாள். பின் சித்ரவஜனின் மீது கமண்டல நீரைத் தெளித்து அவனை மீண்டும் கந்தர்வனாக்கினார்.சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாசுதேவம், ஸத்யோஜாதம் என ஐந்து முகங்கள் இருப்பது போன்று முற்காலத்தில் நான்முகனும் ஐந்து திருமுகங்களைப் பெற்றிருந்தார். அதனால் தானே படைப்புக் கடவுள் என்ற கர்வமும் அவரிடம் இருந்தது. அவரது கர்வத்தை அடக்க சிவபெருமான் பைரவரைப் படைத்து அவரை பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒரு தலையைக் கொய்து அவரது கர்வத்தை அடக்கப் பணித்தார். பைரவரும் தமது இடக்கை நக நுனியால் பிரம்மனது ஐந்தாவது தலையைக் கொய்தார். அத்தலை அப்படியே அவரது கையில் ஒட்டிக்கொண்டு பிரம்மஹத்தி தோஷமானது. இத்தோஷம் நீங்க ஊர்தோறும் சென்று பிச்சையெடுக்க வேண்டும் என்று சிவபெருமான் கூறியதால் பைரவரும் பல இடங்களுக்கு சென்று பிச்சையேற்றுத் திரிந்தார். இறுதியாக இத்தலத்திற்கு வந்தபோது பிரம்மனின் தலை பைரவரன் கையை விட்டகன்றது. பிரம்மனும் தனது கர்வம் நீங்கி தம் மனைவி சரஸ்வதிதேவியுடன் இத்தல இறைவனை வழிபட்டு மீண்டும் தமது படைப்புத் தொழிலை திரும்ப பெற்றதாக தலபுராணம் குறிப்பிடுகிறது. துரோணர் தமக்கு மகப்பேறில்லாக் குறையை போக்க இங்குள்ள இறைவனை தும்பை மலரால் அர்ச்சித்து புத்திரப்பேறு பெற்றார். சதாதபமுனிவர் ஒரு சிறந்த சிவபக்தர் ஆவார். நாள்தோறும் பல சிவத்தலங்களை வணங்குவதோடு பிரதோஷ காலத்தில் திருக்காளத்தி சென்று காளத்திநாதரை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இம்முனிவர் ஒரு முறை திருக்கண்டியூர் வந்த போது காளத்தி செல்லமுடியாமல் போனது. இதனால் வருந்தி அக்னிப்பிரவேசம் செய்து தன் உயிரை விட இவர் முற்பட காளத்திநாதர் உமையோடு காட்சியளித்து முனிவரை தடுத்தாட்கொண்டார். தக்கன் சிவபெருமானை அவமதித்த பாவம் தீர இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றான். பகீரதன் கண்டியூர் வீரட்டேசுவரை வணங்கி அருள்பெற்று கங்கையை பூமிக்கு கொண்டு வந்தான். சித்ரவஜன் எனும் கந்தர்வன் தன் மனைவி குணவதியுடன் ஒரு சோலையில் மகிழ்ந்திருந்தான். அச்சமயம் அவ்வழியே சென்ற தேவலர் என்ற முனிவரை அவன் கவனியாது போக அதனால் கோபமடைந்த அம்முனிவர் சாபமிடுகின்றார். இதனால் சித்ரவஜன் அசுரனாகவும் குணவதி பலாச மரமாகவும் மாறினர். சித்ரவஜன் சாபத்திற்கு விமோசனம் வேண்ட அகத்தியரின் சீடரான சதாதபரால் தான் அச்சாபம் நீங்கும் என்றார் தேவலர். பின்னர் ஒரு சமயம் திருக்காளத்திநாதரை வழிபடும் பொருட்டு கண்டியூர் வழியே சென்ற சதாதபர் செல்லும் வழியில் மழை குறுக்கிட்டதால் அங்கிருந்த பலாச மரத்தின் கீழ் நின்றார். இதனால் குணவதி மீண்டும பெண் உருவடைந்தாள். பின் சித்ரவஜனின் மீது கமண்டல நீரைத் தெளித்து அவனை மீண்டும் கந்தர்வனாக்கினார்.

Protecting Company :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

Nearest Temples Arc :

திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதியகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம்

Summary :

தற்போது கண்டியூர் என இவ்வூர் வழங்கப்பட்டாலும் இவ்வூர் பாடல்பெற்றத் தலமாகையால் திரு என்ற முன்னொட்டினைப் பெற்று திருக்கண்டியூர் எனவும் சிவபெருமானின் எட்டு வீரச்செயல்கள் நிகழ்ந்த தலங்களுள் ஒரு தலமாதலால் திருக்கண்டியூர் வீரட்டானம் என்றும் வழங்கப்பட்டுள்ளது. கண்டனபுரம், ஆதிவில்வாரண்யம், பிரமபுரி என்ற சில புராணப்பெயர்கள் கொண்டும் இவ்வூர் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தினமும் மாலை 5.45 மணி முதல் 6.10 மணி வரை சூரிய ஒளி மூலவர் மீது படுகிறது. இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனின் கல்வெட்டே காலத்தால் முற்பட்டதாகும். இதன் மூலம் இக்கோயில் பல்லவர்காலம் அல்லது முற்கால சோழர் காலத்தைச் சேர்ந்ததாயிருக்கலாம். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றையும் அதை சுற்றியுள்ள திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதியகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய தலங்கள் சப்தஸ்தான தலங்களாகும். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் ஆகியோரால் இத்தலங்கள் பாடப்பெற்றுள்ளன. மேலும் இந்த ஏழு தலங்களும் ஏழு முனிவர்களின் ஆசிரமங்களாகக் கருதப்படுகின்றன. திருவையாற்று ஐயாறப்பர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா சுற்றிலுமுள்ள ஆறு தலங்களிலுள்ள கோயில்களையும் இணைத்துப் பெருவிழாவாக நடக்கிறது. இவ்விழாவின் 12 ஆம் நாள் விழா சப்தஸ்தானத் தலங்களில் இறைவன் வலம் வரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

Period / Ruler :

கி.பி.8-11-ஆம் நூற்றாண்டு / நிருபதுங்க வர்மன், முதலாம் பராந்தகசோழன், சுந்தரசோழன், உத்தமசோழன்

Inscription / Copper :

இக்கோயிலில் பல்லவ மன்னன் நிருபதுங்க விக்ரமவர்மன், சோழ மன்னர்களான முதலாம் பராந்தகன், சுந்தரசோழன் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகளில் இறைவனின் பெயர் திருவீரட்டானத்து மகாதேவர், திருக்கண்டியூருடைய மகாதேவர் என்று குறிப்பிடப்படுகின்றார்.

Murals :

இல்லை

Sculptures :

திருச்சுற்று மாளிகையின் கிழக்குப் புறத்தில் மட்டும் வடகிழக்கு மூலையில் தென்திசை நோக்கியவாறு பைரவர், மேற்கு நோக்கிய நிலையில் சப்த விநாயகர் எனும் ஏழு விநாயகர்கள், சூரியன், அமர்ந்த நிலையில் அர்த்தநாரீஸ்வரர், சந்திரன் சிற்பங்கள் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் நின்ற நிலையில் அல்லாது அமர்ந்த நிலையில் பின்புறம் ரிஷபத்தோடு காணப்படுகிறது. இத்திருச்சுற்று மாளிகையின் தூண்கள் சிமெண்ட்டால் ஆனவை. ஆகவே இது அண்மைக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாக இருக்கக்கூடும். மூலவர் சன்னதி கிழக்கு நோக்கிய நிலையில் கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றோடு காணப்படுகிறது. அர்த்தமண்டபத்தின் நுழைவாயிலின் இருபுறமும் துவார பாலகர்களுக்கு பதிலாக அக்கமாலை ஏந்திய ஞானஸ்கந்தரும் தாமரை மொட்டு ஏந்திய வீரஸ்கந்தரும் வீற்றுள்ளனர். முக மண்டபத்திலேயே மூலவரின் வலப்புறத்தில் நவகிரக சன்னதியும் அமைந்துள்ளது. அம்மன் சன்னதி தெற்கு நோக்கிய நிலையில் இரண்டாம் திருச்சுற்றில் தேவகோட்ட மூர்த்தங்களுடன் காணப்படுகிறது. நான்கு கரங்களுடன் சமபாத ஸ்தானகத்தில் அம்மன் திருவுருவம் அமைந்துள்ளது. பிரம்மா மற்றும் சரஸ்வதி திருமுன் முதல் திருச்சுற்றில் விஷ்ணு துர்க்கைக்கு அருகில் கிழக்கு நோக்கிக் காணப்படுகிறது. நான்கு சிரங்கொண்ட பிரம்மா அமர்ந்த நிலையில் இருகரங்களோடு புன்னகை புரிவது போன்ற தோற்றத்துடன் சரஸ்வதிதேவியுடன் காணப்படுகிறார். சரஸ்வதி நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். பொற்காளியம்மன் திருமுன் இரண்டாம் திருச்சுற்றில் தென்திசையில் வடக்கு நோக்கிய நிலையில் சுதையினால் ஆன இரு துவாரபாலிகைச் சிற்பங்களோடு சிறு சிற்பமாகக் காணப்படுகிறது. தேவகோஷ்டத்தின் வடக்கே நான்முகன் மற்றும் சரஸ்வதி, விஷ்ணு துர்க்கை, பிரம்மா, கிழக்கே அண்ணாமலையார் (இலிங்கோத்பவர்), தெற்கே தென்முகக்கடவுள் (தக்ஷ்ணாமூர்த்தி) அதற்கு சற்று தள்ளி பைரவரும் வீற்றுள்ளனர்.

Temple Structure :

பெரும்பாலும் கிழக்கு திசை நோக்கியே கோயில்கள் அமைந்திருக்க விதிவிலக்காக இக்கோயில் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இரு புறமும் கல்லினால் ஆன துவாரபாலகர்கள் அணி செய்ய 5 நிலைகளுடன் அமைந்துள்ளது இக்கோயிலின் ராஜகோபுரம். மேலும் இக்கோபுரத்தின் கோஷ்டங்களில் தெய்வ மூர்த்தங்கள் காணப்படுகின்றன. இரண்டாம் கோபுரம் மொட்டைக்கோபுரமாக தளங்கள் ஏதுமின்றி உள்ளது. இக்கோபுர வாயில் அணுக்கன் திருவாயில் என அழைக்கப்படுகிறது. இதன் மேல் அம்மையப்பர் திருக்கயிலாயத்தில் அமர்ந்து காட்சி தர பிரம்மா, சரஸ்வதி இருவரும் வணங்கி நிற்பது போன்று சுதை உருவங்கள் உள்ளன. மூலவர் திருமுன் விமானம் 18 அடி உயரமுள்ள இரு தள விமானம் ஆகும். விமானத்தின் தாங்குதளப்பகுதி தற்காலக் கட்டுமானங்கள் காரணமாக பெருமளவு புதைந்துள்ளது. வேதிகண்ட பகுதியில் கலபாதங்களில் புராண, இதிகாசச் சிற்பங்களை விளக்கும் சிறுபுடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கர்ணபாதங்கள் பிரம்மகாந்த வகையைச் சேர்ந்தவை. வழக்கம் போல பாதப் பகுதியின் மேற்பகுதியில் பூதமண்டலம் அணிசெய்கிறது. கர்ணகூடு மற்றும் சாலை சோழர் கலைப்பாணியைப் பிரதிபலிக்கும் வண்ணம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அம்மன் சன்னதி விமானமும் இருதளங்களை உடைய விமானம் ஆகும். இதன் மேற்கு மற்றும் கிழக்கு தேவகோஷ்டங்களில் மட்டும் தெய்வ மூர்த்தங்கள் காணப்படுகின்றன. அர்த்தமண்டபத்தில் 4 அழகிய விஷ்ணுகாந்தத் தூண்கள் உள்ளன. கோயிலின் பிற பகுதிகளில் காணப்படும் பெரும்பான்மையான தூண்கள் வெட்டுப்போதிகையோடு கூடிய எண்பட்டைத் தூண்கள் ஆகும். அர்த்தமண்டபம் மற்றும் மகாமண்டபத்தின் வெளிப்புறச் சுவர்களில் எளிய அலங்காரங்களோடு பலகையோடு கூடிய அரைத்தூண்கள் காணப்படுகின்றன. நடராஜர் மண்பத்தில் ஒரே ஒரு சிம்மத் தூண் காணப்படுகிறது. முதல் திருச்சுற்றில் மதில் சுவரையொட்டி தெற்கு, கிழக்கு, மற்றும் மேற்கு திசைகளில் திருச்சுற்று மாளிகைக் காணப்படுகிறது.

Location :

அருள்மிகு பிரம்மசிரக்கண்டீஸ்வரர் கோயில், திருக்கண்டியூர்-613 202, தஞ்சாவூர்

Phone :

04362-261100, 262 222

Website :

Email :

Temple Opening Time :

காலை 6.00-12.00 முதல் மாலை 5.00-8.30 வரை

Way :

இக்கோயில் தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டத்தில் உள்ள திருக்கண்டியூரில் பிரதான சாலையின் ஓரத்திலேயே அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் தஞ்சையிலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவிலும் திருவையாறிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள இவ்வூருக்குச் செல்ல தஞ்சையிலிருந்தும் திருவையாறிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

Nearby Bus Station :

தஞ்சாவூர், திருவையாறு

Nearby Railway Station :

தஞ்சாவூர்

Nearby Airport :

திருச்சி, சென்னை மீனம்பாக்கம்

Accommodation :

தஞ்சாவூர் விடுதிகள்
சாலை வரைபடம்
Updated Date : 07-12-2016 18:19:50 IST