Tamil Virtual Academy

TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Languages

tamilnadu_temples_new

அருள்மிகு வடுவூர் கோதண்டராமஸ்வாமி கோவில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

Other Names :

ஸ்ரீகோதண்டராமஸ்வாமி

Place :

வடுவூர்

Taluk :

மன்னார்குடி

District :

திருவாரூர்

Religious Type :

வைணவம்-பெருமாள்

Lord Name :

ஸ்ரீகோதண்டராமஸ்வாமி

Procession On God :

இராமர்

Mother / Goddess Name :

சீதை

Temple Tree :

வகுளமரம் (மகிழமரம்)

Tirukkulam / River :

ஸரயூபுஷ்கரணி

Agamam :

பஞ்சராத்திர ஆகமம்

Worship Time :

விச்வரூபம், திருவனந்தல், காலசந்தி, உச்சிக்காலம், திருமாலை(தோசைத்தளிகை), இராக்காலம், அர்த்தஜாமம்

Festivals :

பிரம்மோத்ஸவத்தில் தேர்த்திருவிழா

History :

ஒரு காலத்தில் தஞ்சை அரசர்களால் ஓர் ஏகாதசி தினத்தன்று வித்வான்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட வடுவூரை ‘ஏகாதசி கிராமம்’ எனவும் அழைப்பர். இத்தலத்து ஆதி மூலவரான ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத கோபாலன் இருந்த இடத்தில் ஸ்ரீகோதண்டராமர் மூலவராக எழுந்தருளி கோபாலன் கோயில் ஸ்ரீகோதண்டராமர் கோயிலாக மாறியது. தந்தையின் வாக்குறுதியை காப்பாற்ற தனயன் ராமன் தண்ட காரண்யத்தில் பதினான்கு ஆண்டு காலம் நெடிய வனவாசம் கொண்டபின் தனது மானுடக்கடமையின் அடுத்த கட்டத்திற்கு வர அயோத்தி நோக்கிப் பயணிக்க ஆயத்தமாகிறார். ஆனால் ரிஷிகள் ராம்பிரானைப் பிரிய மனமின்றி தம்முடனே அவர் இருக்க வேண்டுமென நெஞ்சுருகி வேண்டினர். அன்புக்கும் கடமைக்கும் இடையில் நின்று சிந்தித்த அண்ணல் அவர்களை அனுப்பிவிட்டு தமது ஆசிரமத்தில் அமர்ந்து யோசித்தார். அதையடுத்து ராமர் தமது சுந்தரவடிவை தம் கையாலேயே விக்ரக ரூபமாக ஸ்தாபித்து தமது ஆசிரம வாயிலில் வைத்து விட்டு உள்ளே பிராட்டியுடன் இருந்தார். வனத்துறை ரிஷிகளும் முனிபுங்கர்களும் மறுநாள் பிரானையும் அப்போது ஆசிரம வாயிலில் இருந்த ராமரின் சுந்தரச்சிலையில் அவர்கள் அனைவரும் இதயத்தைப் பறிக்கொடுத்து மயங்கி நின்றனர். பின்னர் உள்ளே சென்று ராமரை தங்களுடனே தங்கியருள வேண்டினர். அப்பொழுது அந்த சீலர்களிடம் ராமர் சிலையை கொடுத்து விட்டு லக்ஷ்மனர், சீதையுடன் நாட்டை நோக்கி புறப்பட்டனர். வெகு காலம் கழித்து திருக்கண்ணபுரம் வாசிகள் ஸௌந்தர்ய ஸாரமான ஸ்ரீராமரின் அர்ச்சா பிம்பமான மேற்படி சிலையை தங்கள் ஊருக்கு கொணந்து பிரதிஷ்டை செய்து ஆராதித்து வரலாயினர். நெடுங்காலம் கடந்து ஒரு கலாபகாலத்தில் திருக்கண்ணபுரம் வாசிகள் இந்த சிலையையும் அத்துடன் தாங்களே செய்து வைத்திருந்த சீதை, லக்ஷ்மணர், பரதர், ஹனுமன், சிலைகளையும் அகற்றி , திருத்துறைப்பூண்டியை அடுத்த தலைஞாயிறு எனும் கிராமத்தில் ஒர் அரச மரத்தடியில் புதைத்து வைத்தனர். பல ஆண்டுகள் கடந்த பின் தஞ்சாவூரில் சரபோஜி வம்சம் ஆண்டு வந்தது. மன்னரின் கனவில் ராமரே காட்சியளித்து தாம் தலைஞாயிறு எனும் இடத்தில் புதையுண்டிருப்பதாவும் தம்மை எடுத்து பிரதிஷ்டை செய்ய ஆக்ஞையிட்டார். இதனால் மன்னர் தலைஞாயிறு சிலையை தோண்டி எடுத்து மன்னர் புறப்பட்டார். தஞ்சை நோக்கித் திரும்பும் மன்னர் நடுநிசி ஆகிவிட்டதால் வடுவூரிலே தங்கினார். இதனையறிந்த வடுவூர் மக்கள் வடுவூரிலேயே முன்பிருந்த ருக்மணி – சத்யபாமா சமேத கோபாலன் கோயிலில் பிரதான மூர்த்தியாக ராமரை பிரதிஷ்டை செய்து விட வேண்டுமென மன்றாடி நின்றனர். முதலில் மன்னர் மறுக்கவும். ஆனால் ஆலயத்திலிருந்த மொட்டைக் கோபுரத்தில் யாவரும் ஏறிநின்று குதித்து உயிர்விட்டு பிராண தியாகம் செய்ய வடுவூர் மக்கள் உறுதிக்கும் ராமபக்திக்கும் வியந்து அச்சிலைகளை வடுவூரிலே பிரதிஷ்டை செய்ய சம்மதித்தார். அது முதல் கோபாலன் கோயிலின் பிராதன மூர்த்தியாக ராமர் எழுந்தருளினார். இன்று ஜெகன் மோகனரான ஸ்ரீகோதண்டராமர் ஸ்ரீசீதா, லக்ஷ்மணர், ஹனுமன் சமேதராய் அற்புத ஸேவை ஸாதிக்கிறார்.

Protecting Company :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

Nearest Temples Arc :

மன்னார்குடி இராஜகோபாலசுவாமி கோயில், மன்னார்குடி கைலாசநாதர் கோயில், திருவாரூர் சிவன் கோயில்

Summary :

தஞ்சை மாவட்டத்திலேயே 316-15 ஏக்கர் பரப்புள்ள மிகப்பெரிய ஏரியான ஸ்ரீகோதண்டராமர் ஏரி இவ்வூரில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான இந்த ஏரி 1911 ஆம் ஆண்டு பராமரிக்க முடியாமல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அழகிய ஊர் , இளமையான ஊர் எனும் பொருளில் வடுவூர் எனப்படும் இத்தலத்திற்கு வகுளாரண்யம் (மகிழங்காடு), பாஸ்கர க்ஷேத்திரம், தக்ஷண அயோத்தி எனும் திருப்பெயர்களும் உண்டு. பல்லக்கு, திருச்சிவிகை, 3 திருநாமங்களுடன் சூரியப்பிரபை, சேக்ஷவாகனம், கருடவாகனம், ஹனுமன்வாகனம், யானை வாகனம், ஹம்சவாகனம், குதிரை வாகனம். ஸ்ரீராமாயணக்காட்சிகளை சித்தரிக்கும் பழைய திருத்தேர் ஒன்று உண்டு. கண்வமகரிஷி, குலசேகரப்பெருமாள் இத்தல இறைவனை வழிபட்டு பேறுபேற்றோர் ஆவர்.

Period / Ruler :

கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு / தஞ்சை சரபோஜி வம்சத்தினர்

Inscription / Copper :

இல்லை

Murals :

இல்லை

Sculptures :

மூலவர் ஸ்ரீ கோதண்டராமர் (ஸ்ரீ சீதா பிராட்டி, லட்சுமணர் , ஹனுமன் சமேதராய் திருக்கல்யாண கோலத்தில்) திருவீதியுலா நாயகர் (உற்சவர்) – மேற்கண்ட அதே கோலத்தில் விளங்குகிறார். நாச்சியாரான சீராபிராட்டிக்குத் தனிசந்நதி இல்லை. இத்தலத்தில் ஆதிபெருமாள் ருக்மிணி- சத்தியபாமா உடனுறை கோபாலனே. (கருவறையில் ராமன் எழுந்தருளிய பின் மகாமண்டபத்தின் வடக்குப்பக்கம் உள்ள திருப்பள்ளி அறையில் கோபாலன் சிறுகோயில் அமைந்துள்ளது.

Temple Structure :

கருவறை விமானம் இரு தளங்களை உடையது. தாங்குதளம் முதல் கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், அதற்கு மேல் உள்ள பகுதி சுதையாலும் அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் தளத்தில் சுதைச் சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், மகாமண்டபம், இராஜகோபுரம், நுழைவுவாயில் மண்டபம் ஆகியன இக்கோயிலில் அமைந்துள்ளன. கருவறை விமானம் புஷ்பவிமானமாக அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் வெற்றுக் கோட்டங்கள் அமைந்துள்ளன. எளிய அமைப்புடைய கருவறை விமானமாகவே இக்கோயில் விமானம் அமைந்துள்ளது.

Location :

அருள்மிகு கோதண்டராமஸ்வாமி, வடுவூர்-614019, திருவாரூர்

Phone :

04367 -267110

Website :

Temple Opening Time :

காலை 6.00-12.30 முதல் மாலை 5.00-9.30 வரை

Way :

மன்னார்குடி வட்டத்தில் மன்னார்குடி பேருந்து நிலையத்திலிருந்து வடுவூர் சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது.

Nearby Bus Station :

தஞ்சாவூர், மன்னார்குடி

Nearby Railway Station :

தஞ்சாவூர், மன்னார்குடி

Nearby Airport :

திருச்சி, சென்னை மீனம்பாக்கம்

Accommodation :

திருவாரூர் விடுதிகள்
சாலை வரைபடம்
Updated Date : 07-12-2016 18:19:51 IST