Tamil Virtual Academy

TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Languages

tamilnadu_temples_new

அருள்மிகு மருதவனம் ஸ்ரீ மத்தியார்ஜுனேஸ்வரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

Other Names :

மத்தியார்ஜுனேஸ்வரர்

Place :

மருதவனம்

Taluk :

திருத்துறைப்பூண்டி

District :

திருவாரூர்

Religious Type :

சைவம்-சிவபெருமான்

Lord Name :

மத்தியார்ஜுனேஸ்வரர்

Procession On God :

Mother / Goddess Name :

பாலாம்பிகை

Temple Tree :

வில்வம்

Tirukkulam / River :

Agamam :

Worship Time :

Festivals :

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை

History :

Protecting Company :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

Nearest Temples Arc :

திருத்துறைப்பூண்டி, திருவலஞ்சுழி

Summary :

திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் மருதவனம் எனும் கிராமம் அமைந்துள்ளது. திருத்துறைப்பூண்டியிலிருந்து சுமார் 8 கி.மீ. மேற்காகவும் மன்னார்குடியிலிருந்து சுமார் 30 கி.மீ. தென்-கிழக்காகவும் இவ்வூர் அமைந்துள்ளது. மகாமண்டபத்தினுள் பாலாம்பிகை திருமுன் கருவறை மற்றும் இடைநாழிகையுடன் காணப்படுகிறது. கருவறையின் வெளிப்புறம் வடக்கே 4.96 அடி நீளமும் அதே அளவு அகலமும் கொண்டு சண்டீகேஸ்வரர் திருமுன் காணப்படுகிறது. இக்கோயிலின் தென்கிழக்கு மூலையில் துர்க்கா காளியம்மன் திருமுன் 5.83 அடி நீளமும் 6.68 அடி அகலமும் கொண்டு காணப்படுகிறது. மேலும் இக்கோயிலின் தென்-மேற்கு பகுதியில் 5.53 அடி அகலமும் 7.80 அடி நீளமும் கொண்ட விநாயகர் சன்னிதியும், கருவரையின் பின்புறம் மேற்கே 6.79 அடி நீளமும் 7.82 அடி அகலமும் கொண்ட தியாகராஜர் சன்னிதியும் வட-மேற்கு திசையில் 8.20 அடி நீளமும் 8.47 அடி அகலமும் கொண்ட பாலசுப்பிரமணியர் சன்னிதியும் காணப்படுகிறது

Period / Ruler :

கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு

Inscription / Copper :

இல்லை

Murals :

இல்லை

Sculptures :

தேவகோட்டங்களில் தென்புறத்தைத் தவிர பிற கோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெற வில்லை. பைரவர் நின்ற நிலையில் நான்கு கைகளுடன் காணப்படுகிறார். வலது முன்கையில் சூலமும் பின்கையில் தமருகம் இடது முன்கையில் கபாலமும் பின்கையில் பாசமும் காணப்படுகிறது. தலையின் ஜடாமகுடத்துடனும் இதன் பின்புறம் தீப்பிழம்பும் உள்ளது. கருவறையின் தென் திசை வெளிப்புறச் சுவரில் உள்ள தேவகோட்டத்தில் தென்முகக் கடவுள் சிற்பம் அமைந்துள்ளது. இங்கு தென்முகக்கடவுள் தலையில் ஜடாமகுடத்துடன் அமர்ந்த நிலையில் வலது காலை கீழே தொங்கவிட்டும் மடித்து வலதுகாலை தொட்டவாறும் உள்ளது. நாங்கு கைகளை கொண்ட இச்சிற்பம் வலது முன்கை சின் முத்திரையிலும் பின்கை உடுக்கையையும் இடது முன்கையில் புத்தகத்துடன் இடது தொடையில் வைத்தவாறும் உள்ளது.தேவகோட்டங்களில் தென்புறத்தைத் தவிர பிற கோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெற வில்லை. பைரவர் நின்ற நிலையில் நான்கு கைகளுடன் காணப்படுகிறார். வலது முன்கையில் சூலமும் பின்கையில் தமருகம் இடது முன்கையில் கபாலமும் பின்கையில் பாசமும் காணப்படுகிறது. தலையின் ஜடாமகுடத்துடனும் இதன் பின்புறம் தீப்பிழம்பும் உள்ளது. கருவறையின் தென் திசை வெளிப்புறச் சுவரில் உள்ள தேவகோட்டத்தில் தென்முகக் கடவுள் சிற்பம் அமைந்துள்ளது. இங்கு தென்முகக்கடவுள் தலையில் ஜடாமகுடத்துடன் அமர்ந்த நிலையில் வலது காலை கீழே தொங்கவிட்டும் மடித்து வலதுகாலை தொட்டவாறும் உள்ளது. நாங்கு கைகளை கொண்ட இச்சிற்பம் வலது முன்கை சின் முத்திரையிலும் பின்கை உடுக்கையையும் இடது முன்கையில் புத்தகத்துடன் இடது தொடையில் வைத்தவாறும் உள்ளது.தேவகோட்டங்களில் தென்புறத்தைத் தவிர பிற கோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெற வில்லை. பைரவர் நின்ற நிலையில் நான்கு கைகளுடன் காணப்படுகிறார். வலது முன்கையில் சூலமும் பின்கையில் தமருகம் இடது முன்கையில் கபாலமும் பின்கையில் பாசமும் காணப்படுகிறது. தலையின் ஜடாமகுடத்துடனும் இதன் பின்புறம் தீப்பிழம்பும் உள்ளது. கருவறையின் தென் திசை வெளிப்புறச் சுவரில் உள்ள தேவகோட்டத்தில் தென்முகக் கடவுள் சிற்பம் அமைந்துள்ளது. இங்கு தென்முகக்கடவுள் தலையில் ஜடாமகுடத்துடன் அமர்ந்த நிலையில் வலது காலை கீழே தொங்கவிட்டும் மடித்து வலதுகாலை தொட்டவாறும் உள்ளது. நாங்கு கைகளை கொண்ட இச்சிற்பம் வலது முன்கை சின் முத்திரையிலும் பின்கை உடுக்கையையும் இடது முன்கையில் புத்தகத்துடன் இடது தொடையில் வைத்தவாறும் உள்ளது.

Temple Structure :

கிழக்கு முகம் நோக்கிய இக்கோயில் கருவறை, இடை நாழிகை, மகாமண்டபம், நந்திமண்டபம் மற்றும் மொட்டைகோபுரம் போன்ற தரை அமைப்பினையும் வெளிப் பிரகாரத்தையும் பெற்றுள்ளது. மேலும் இக்கோயிலில் பாலாம்பிகை, விநாயகர், தியாகராஜர், பாலசுப்பிரமணியர், துர்க்கா காளியம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் போன்ற தெய்வங்களுக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. 8.20 அடி. நீளம் 10.12 அடி. அகலமும் கொண்ட கருவறையில் மூலவர் சுயம்புலிங்க வடிவில் உள்ளார். கருவறையின் வெளிபுறம் தென்-திசை தேவகோட்டத்தில் தக்ஷினாமூர்த்தியும் வடக்கு மற்றும் மேற்கு திசையில் உள்ள தேவ கோட்டங்களில் தெய்வங்கள் ஏதுமின்றி காணப்படுகிறது. கருவறையைத் தொடர்ந்து இடைநாழிகை 5.70 அடி நீளமும் 6.56 அடி. அகலமும் கொண்டுள்ளது. இடைநாழிகையைத் தொடர்ந்து 20.26 அடி நீளமும் 17.22 அடி அகலமும் கொண்டு அர்த்தமண்டபம் இரண்டு வரிசையில் நான்கு தூண்களையும் இரண்டு அரைத்தூண்களையும் கொண்டு காணப்படுகிறது. மேலும் இம்மண்டபத்தின் உட்புறம் பாலாம்பிகை திருமுன்னும் வீதியுலா இறையுருவங்களுக்கு தனித் திருமுன்களும் காணப்படுகின்றன. மகாமண்டபத்தினைத் தொடர்ந்து 7.67 அடி தொலைவில் 3.74 அடி நீளமும் 3.74 அடி கலமும் கொண்ட நந்திமண்டபம் ஒன்று காணப்படுகிறது. நந்திமண்டபத்தினைத் தொடர்ந்து கோபுரம் தலங்கள் ஏதுமின்றி (மொட்டைகோபுரம்) 12.79 அடி நீளத்திலும் 6.85 அடி அகலத்திலும் நுழைவாயிலாக உள்ளது. இக்கோயிலின் வடக்கு திசையில் 95.80 அடி நீளத்திலும் தெற்ககு திசையில் 95.80 அடி நீளத்திலும் மற்றும் மேற்கு 60.57 அடி நீளத்திலும், கிழக்கு 60.57 அடி நீளத்திலும் திருச்சுற்று வீதிகள் காணப்படுகிறது. பாலாம்பிகை, விநாயகர், தியாகராஜர், பாலசுப்பிரமணியர், துர்க்கா காளியம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் போன்ற தெய்வங்களுக்கு தனித்தனி திருமுன்கள் உள்ளன.

Location :

அருள்மிகு மத்தியார்ஜுனேஸ்வரர் கோயில், களப்பால் சாலை, மருதவனம்-638 352, திருவாரூர்

Phone :

Website :

Email :

Temple Opening Time :

காலை 6.00-12.00 முதல் மாலை 5.00-8.30 வரை

Way :

திருத்துறைப்பூண்டியிலிருந்து சுமார் 8 கி.மீ. மேற்காகவும் மன்னார்குடியிலிருந்து சுமார் 30 கி.மீ. தென்-கிழக்காகவும் இவ்வூர் அமைந்துள்ளது.

Nearby Bus Station :

திருத்துறைப்பூண்டி,

Nearby Railway Station :

தஞ்சாவூர்

Nearby Airport :

திருச்சி, சென்னை மீனம்பாக்கம்

Accommodation :

திருவாரூர் விடுதிகள்
சாலை வரைபடம்
Updated Date : 07-12-2016 18:19:51 IST