Tamil Virtual Academy

TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Languages

tamilnadu_temples_new

அருள்மிகு திருஆலம் பொழில் வடமுலேசுவரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

Other Names :

வடமுலேசுவரர், திருஆலம் பொழிலான், ஆத்மநாத ஈசுவர்

Place :

திருவையாறு

Taluk :

திருவையாறு

District :

தஞ்சாவூர்

Religious Type :

சைவம்-சிவபெருமான்

Lord Name :

ஸ்ரீவடமுலேசுவரர்

Procession On God :

ஆத்மநாத ஈசுவர்

Mother / Goddess Name :

ஞானாம்பிகை

Temple Tree :

ஆலமரம்

Tirukkulam / River :

குடமுருட்டியாறு

Agamam :

Worship Time :

காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

Festivals :

ஆவணி மூலத்திருவிழா, கார்த்திகை சோமவாரம், மகாசிவராத்திரி

History :

அனலன், அணிலன், ஆபத்சைவன், சோமன், தரன், துருவன், பிரத்தியூஷன், பிபாசன் ஆகிய எட்டு வசுக்களும் தட்சனின் 13 மகள்களில் வசு என்பவளுக்கு பிறந்தவர்கள். இவர்கள் வசிஷ்ட முனிவரின் தேனு என்னும் பசுவைத் திருடிக் கொண்டு போக அவரால் சபிக்கப்பட்டு மனிதர்களாய் பூமியில் பிறந்தவன். இவர்களில் பிபாசன் என்பவனே கங்கை மைந்தன் பீஷ்மன். இவர்கள் அனைவரும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு தங்கள் சாபம் நீங்கப்பெற்றனர். எனவே இத்தலம் சாபதோஷ நிவர்த்தித் தலமாகும். காசியப முனிவரும் இத்தலத்தை வழிபட்டுள்ளார்.

Protecting Company :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

Nearest Temples Arc :

திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதியகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம்

Summary :

இத்திருத்தலம் திருநாவுக்கரசரால் பாடல் பெற்றத் தலம். தென்பரம்பைக்குடி என பண்டு இத்தலம் பெயர் பெற்றுள்ளது. கி.பி.6-7-ஆம் நூற்றாண்டுகளில் இத்தலம் பரம்பைக்குடி என்ற பெயர்பெற்றுள்ளது எனத் தெரிய வருகிறது. தோஷ பரிகாரத்தலமாக விளங்குகின்றது. ஆத்மநாத ஈசுவரர் என்று இறைவன் திருப்பெயர்ப் பெற்றுள்ளார். சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாகக் கருதப்படுகிறார்.

Period / Ruler :

கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு / சோழர்கள்

Inscription / Copper :

இல்லை

Murals :

இல்லை

Sculptures :

இறைவன் கருவறை விமானத்தின் தென்புறக்கோட்டத்தில் பிற்காலத்திய தென்முகக் கடவுள் உள்ளார். மேலும் அதனையடுத்து உள்ள பஞ்சரக் கோட்டத்திலும் ஒரு தென்முகக் கடவுள் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. நான்முகன், விஷ்ணுதுர்க்கை, சண்டேசர், நவக்கிரகம், நால்வர், அப்பர் ஆகிய பிற்கால சிற்பங்களும் உள்ளன. கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகியவற்றின் கூரைப்பகுதியில் யாளிவரி செல்கிறது. இறைவன் கருவறை விமானத்திலும், அம்மன் கருவறை விமானத்திலும் சுதைச்சிற்பங்கள் உள்ளன. இராஜகோபுரத்தில் சுதைச்சிற்பங்கள் காணப்படுகின்றன.

Temple Structure :

மேற்கு நோக்கிய திருத்தலமாக இக்கோயில் விளங்குகிறது. இக்கோயில் இறைவன் கருவறை தாங்குதளத்திலிருந்து சுவர் வரை கற்றளியாகவும், கூரையிலிருந்து விமானத்தின் மேற்பகுதி சுதையாலும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் சோழர்காலத்தில் கற்றளியாக்கப்பட்டிருக்க வேண்டும். இக்கோயிலை அப்பர் தனது திருமுறையில் பாடியுள்ளதால் கி.பி.6-ஆம் நூற்றாண்டிலேயே இக்கோயில் இருந்திருக்க வேண்டும். பின்பு இக்கோயில் சோழர்காலத்தில் கற்றளியாக்கப்பட்டிருக்க வேண்டும். கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கட்டடக்கலைப் பாணியில் ஆங்காங்கே சோழர்கால எச்சம் தெரிகிறது. தாங்குதளத்தின் உபானம், ஜகதி ஆகிய உறுப்புகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. உருளைக் குமுதம் வெளியேத் தெரிகின்றது. சுவர்களில் உள்ள கோட்டங்களில் சோழர்கால சிற்பங்கள் காணப்படவில்லை. அரைத்தூண்களுக்கு நடுவே கோட்டங்கள் அமைந்துள்ளன. பஞ்சரப்பத்தியிலும் கோட்டங்கள் உள்ளன. அவையும் வெற்றுக் கோட்டங்களாகவே உள்ளன. கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், இராஜகோபுரம் ஆகியன இடம் பெற்றுள்ளன. அர்த்தமண்டபம் மற்றும் முகமண்டபத்தின் கூரைப்பகுதியில் யாளிவரி செல்கிறது. இராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. கோபுரத்தில் சுதைச் சிற்பங்கள் அழகு செய்கின்றன. அம்மனுக்கு தனி சிறுகோயில் அமைந்துள்ளது. அம்மன் கருவறை விமானம் ஒரு தளத்தைப் பெற்றுள்ளது. இது பிற்காலக் கட்டடக்கலைப் பாணியாகும். இக்கருவறைக் கோட்டங்களும் வெற்றிடமாகவே உள்ளன.

Location :

அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை வடமுலேசுவரர் கோயில், திருவையாறு, தஞ்சாவூர்-613 001.

Phone :

Website :

Email :

Temple Opening Time :

காலை 7.00-12.00 முதல் மாலை 4.00-8.00 வரை

Way :

திருச்சியிலிருந்து பூதலூர் வழியாக திருவையாறு செல்லும் பேருந்துகள் இத்தலத்தைக் கடந்து செல்கின்றன. திருவையாறுக்கு தென்மேற்கே 5கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. கண்டியூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் பேருந்துகள் இவ்வழியே செல்கின்றன.

Nearby Bus Station :

தஞ்சாவூர்

Nearby Railway Station :

தஞ்சாவூர்

Nearby Airport :

திருச்சி, சென்னை மீனம்பாக்கம்

Accommodation :

தஞ்சாவூர் விடுதிகள்
சாலை வரைபடம்
Updated Date : 07-12-2016 18:19:51 IST