Tamil Virtual Academy

TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Languages

tamilnadu_temples_new

அருள்மிகு திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

Other Names :

திரிவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்)

Place :

திருக்கோவிலூர்

Taluk :

திருக்கோவிலூர்

District :

விழுப்புரம்

Religious Type :

வைணவம்-பெருமாள்

Lord Name :

திரிவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்)

Procession On God :

ஆயனார், கோவலன்

Mother / Goddess Name :

பூங்கோவல் நாச்சியார்

Temple Tree :

புன்னை

Tirukkulam / River :

பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம், ஸ்ரீசக்ர தீர்த்தம்

Agamam :

Worship Time :

விச்வரூபம், திருவனந்தல், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

Festivals :

பங்குனி மாதம் பிரம்மோற்சவம் 15 நாட்கள், மாசிமகம் - இவ்விழாவின் போது கடலூருக்கு தோளிலேயே செல்வார் என்பது தனிச்சிறப்பு. புரட்டாசி பவித்திர விழா, நவராத்திரி விழா, சித்திரை-ஸ்ரீராமர் ஜெயந்தி, ஸ்ரீஇராமானுஜர் ஜெயந்தி, வசந்த விழா, வைகாசி-வைகாசி விசாக கருட சேவை, நம்மாழ்வார் சாற்றுமுறை, ஆனி-பெரியாழ்வார் சாற்றுமுறை, ஆடி-திருவாடிப்பூரம், ஆண்டாள் உற்சவம், ஆவணி-ஸ்ரீஜெயந்தி, உறியடி விழா, ஐப்பசி-முதலாழ்வார்கள் சாற்றுமுறை, கார்த்திகை-கைசிக ஏகாதசி உற்சவம், மார்கழி-இராப்பத்து, பகல்பத்து

History :

மகாபலி சக்கரவர்த்தி நடத்திய வேள்விக்கு மூன்றடி குள்ள உருவமுள்ள வாமனராக திருமால் அவதாரம் எடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். அசுர குலகுரு சுக்கிராச்சாரியார் வந்திருப்பவர் திருமால் என்று சொல்லி தடுத்தும் கேளாமல் திருமாலுக்கு நீரிட்டு கொடையளித்தான் மாவலி. மூன்றடியை அளக்க இறைவன் வானுக்கும் பூமிக்குமாய் இரண்டியை வைத்தவாறு மூன்றாவது அடி எங்கே என கேட்க, அசுர வேந்தன் மலைத்துப் போனான். ஆணவம் நீங்கினான். தன் தலையைத் தாழ்த்தி அதில் வைக்குமாறு கூறினான். இறைவனும் அவ்வாறே செய்து மாவலி சக்கரவர்த்தியை பாதாளலோகத்திற்கு அனுப்பினார். வாமனராய் வந்து விசுவரூபம் எடுத்த காட்சியைக் காண மிருகண்டு என்னும் முனிவருக்கு ஆவல் ஏற்பட்டது. அவர் பிரம்மாவிடம் கேட்கவே, பிரம்மன் கிருஷ்ணபத்ரா நதிக்கரையில் திருமாலை வழிபடச் சொன்னார். அவ்வாறே செய்து வந்த மிருகண்டு முனிவரும் அவர் மனைவி மித்ராபதியும் அன்னதானமும் செய்துவந்தனர். ஒருநாள் வயோதிக வேடத்தில் திருமால் அவர்கள் வீட்டிற்கு சென்று அன்னம் கேட்டார். வீட்டில் ஒன்றுமில்லாத நிலையில் மித்ராபதி தனது பதிபக்தியால் பாத்திரம் நிரம்பச் செய்தார். அப்போது திருமால் அவர்களுக்கு விசுவரூபதரிசனத்தைக் கொடுத்தார். அத்தலமே திருக்கோவிலூர் தலமாகும்.

Protecting Company :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

Nearest Temples Arc :

ஆதிதிருவரங்கம் பெருமாள் கோயில், சிவலோக நாதர் கோயில்

Summary :

திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம் ஆகிய பஞ்சசேத்திரங்களுள் திருக்கோவிலூர் முதலாவது தலமாகும். இக்கோயிலில் உள்ள திரிவிக்கிரமர் உலகளந்த பெருமாள் சிற்பம் போல் உயரமான நின்ற நிலை சிற்பம் வேறு எங்கும் இல்லை எனலாம். புராண காலத்தில் கிருஷ்ணபத்ரா ஆறு தான் இப்பொழுது தென்பெண்ணையாறு எனப் பெயர் பெற்றுள்ளது. வைணவத்தலத்தில் துர்க்கையை காணுதல் அரிது. இத்தலத்தில் விஷ்ணு துர்க்கையை மூலவருக்கு அருகிலேயே காணலாம். திருமங்கையாழ்வார் இந்த துர்க்கையை சேர்த்தே தனது பாடலில் பாடியுள்ளார். இக்கோயிலில் திருமாலின் வடிவம் வலது கையில் சங்கையும் இடது கையில் சக்கரத்தையும் ஏந்தியுள்ளது தனிச்சிறப்பு. வழக்கத்திற்கு மாறாக இது அமைந்துள்ளது நோக்கத்தக்கது. முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் முதலில் இத்தலத்தையே பாடினர். இத்தலத்தில் தான் மூவரும் முக்தியடைந்தனர். இக்கோயிலின் இராஜகோபுரம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய இராஜகோபுரமாகும். 5 ஏக்கர் பரப்பளவில் இந்த இராஜகோபுரம் 11 நிலைகள் கொண்டு 192 அடி உயரம் கொண்டுள்ளது. இத்தலம் நடுநாட்டு திருப்பதி எனப்படும். கேரளாவின் திருக்காக்கரையில் வாமனருக்கு ஒரு பெரிய கோயில் உள்ளது. தமிழகத்தில் உலகளந்த பெருமாள் கோயிலே வாமனருக்கு எழுப்பப்பட்ட தனிப்பட்ட கோயிலாகும்.

Period / Ruler :

கி.பி.15-16-ஆம் நூற்றாண்டு / விஜயநகரர்

Inscription / Copper :

Murals :

இல்லை

Sculptures :

ஓங்கி உலகளந்த பெருமாள் ஸ்ரீசக்கர விமானத்தின் கீழ் நின்ற நிலையில் ஓங்கி உலகளந்தவாறு காட்சியளிக்கிறார். கோயில் திருச்சுற்றில் வேணுகோபாலன், லட்சுமி நாராயணன், வீரஆஞ்சநேயர், லட்சுமி இராகவன், லட்சுமி நரசிம்மர், இராமர், ஆண்டாள், அசுரகுல குரு சுக்கிராச்சாரியார் ஆகியோரது சிற்பங்கள் உள்ளன.

Temple Structure :

192 அடி உயரமுள்ள இராஜகோபுரம், மகாமண்டபம், முகமண்டபம், அர்த்த மண்டபம் பெற்று விளங்குகிறது. கருவறையில் உலகளந்த பெருமாள் மரத்தால் செய்யப்பட்டவராக உள்ளார். கருவறைச் சுற்றில் பல சிறுகோயில்கள் அமைந்துள்ளன. உற்சவராக வேணுகோபாலன் அருள்பாலிக்கிறார்.

Location :

அருள்மிகு திரிவிக்கிரமசுவாமி திருக்கோயில், திருக்கோவிலூர்-605 757, விழுப்புரம்.

Phone :

9486279990

Website :

Email :

Temple Opening Time :

காலை 6.30-12.00 முதல் மாலை 4.00-8.30 வரை

Way :

விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ. தூரத்தில் திருக்கோவிலூர் உள்ளது. பண்ருட்டி-வேலூர் வழியில் திருக்கோவிலூர் அமைந்துள்ளது.

Nearby Bus Station :

விழுப்புரம்

Nearby Railway Station :

விழுப்புரம்

Nearby Airport :

திருச்சி, சென்னை மீனம்பாக்கம்

Accommodation :

விழுப்புரம் விடுதிகள்
சாலை வரைபடம்
Updated Date : 07-12-2016 18:19:52 IST