Tamil Virtual Academy

TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Languages

tamilnadu_temples_new

அருள்மிகு சிதறால் சமணக் குகைக் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

Other Names :

24 தீர்த்தங்கரர்

Place :

சிதறால்

Taluk :

தோவாளை

District :

கன்னியாகுமரி

Religious Type :

சமணம்-தீர்த்தங்கரர்

Lord Name :

சமணத் தீர்த்தங்கரர்கள்

Procession On God :

Mother / Goddess Name :

பகவதி, அம்பிகா

Temple Tree :

Tirukkulam / River :

Agamam :

Worship Time :

Festivals :

History :

Protecting Company :

இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது.

Nearest Temples Arc :

மாத்தூர் தொட்டிப் பாலம், திருநந்திக்கரை குகைக் கோயில்

Summary :

 கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ‘சிதறால்’ என்ற ஊரில் ‘திருச்சாணத்து மலையில்’ இருக்கும் மிகப் பெரிய குகைக்கோவிலாகும்.நாகர்கோவிலிலிருந்து 45 கட்டை (கிலோமீட்டர்) தொலைவில் இது அமைந்துள்ளது. இந்த கோயிலின் உள்ளும், புறமும் சமணச் சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. இந்த குகைக் கோயில் 13 ஆம் நூற்றாண்டில் பகவதி கோயிலாக மாற்றப்பட்டது. எனினும், கோயிலுக்குள் இருக்கும் தீர்த்தங்கரர்கள் மற்றும் உப தேவதைகளின் சிற்பங்கள் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நூற்றாண்டுப் பழைமை வாய்ந்த இந்த சமண மதக் கோவிலில் மகாவீரர், மற்றும் 23 தீர்த்தங்கர்களின் சிலைகள் பாறைகளில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த கோவில் தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. உலகப் புகழ்பெற்ற இந்த திருச்சாணத்து மலையைப் பற்றி நமது முன்னாள் பிரதமர் திரு. பண்டித நேரு, சீனா பயணம் மேற்கொண்டிருந்த போது திரு. சுவன்லாய், நேருவிடம் விசாரித்தார்.[1]அந்த அளவுக்கு புகழ்வாய்ந்த சமணக் கோயிலாக விளங்கியது சிதறால் கோயில். நேருவின் வேண்டுகோளின்படி இன்று அக்கோயில் தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கீழ் இருந்து வருகிறது ‘சிதறால் அம்மா’ என்ற பேரில் இந்துக் கோயிலாக இவை இருந்து வருகிறது. திருவிதாங்கூர் ஆண்டு வந்து ஸ்ரீமூலம் திருநாள் (இவருடைய காலம் 1885-1924) காலத்தில் இக்கோயிலில் ‘சிதறாலம்மா’ என்ற பகவதி பிரதிஷ்டை செய்யப்பட்டது

Period / Ruler :

கி.பி.9-ஆம் நூற்றாண்டு

Inscription / Copper :

கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப்பல்கலைகழகம் ஒன்று இங்கே இருந்ததாகவும், அவர்களுக்குக் குறத்தியறையார் என்ற அரசி நிபந்தமாக சொத்துக்களை அளித்தது பற்றிய ஒரு கல்வெட்டு அங்கே உள்ளது. அந்த கல்வெட்டு தமிழ்-பிராமி மொழியில் உள்ளது.க்கிரமாதித்திய வரகுணனின் 28 ஆவது ஆட்சியாண்டினை இக்கல்வெட்டு குறிக்கிறது. பேராயிற்குடி அரிட்டநேமி பட்டாரகரின் சீடர் குணந்தாங்கி சூரத்திகள் இப்பகவதி கோயிலுக்குச் சில பொன் அணிகலன்களைக் கொடுத்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. மண்டபத்தில் வெட்டப்பட்டுள்ள கி.பி.1300 ஆம் ஆண்டைச் சேர்ந்த (கொல்லம் ஆண்டு 475) தமிழ்க்கல்வெட்டு பகவதி கோயிலின் செலவுகளுக்காக கீழ் வேம்பநாட்டு ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த நாராயணன் தமிழ்ப் பல்லவரையன் வழங்கிய கொடையைத் தெரிவிக்கிறது.

Murals :

இல்லை

Sculptures :

இயற்கையான குகையில் உள்ள தீர்த்தங்கரர்கள் மற்றும் இயக்கியர் சிற்பங்கள் இப்பகுதியின் முக்கிய சமணத்தலமாக இதைக் கருத இடமளிக்கின்றன. இச்சிற்பத் தொகுதிகளில் ஐந்து தலை நாகம் காக்கும் பார்சுவநாதர் மற்றும் பத்மாவதி இயக்கியின் உருவங்கள் கருணை பொழியும் வகையில் வடிக்கப்பட்டுள்ளன.மற்ற சிறு உருவங்கள் அர்த்த பரியங்க ஆசனத்தில் அமர்ந்து முக்குடைகள் தலைக்கு மேல் விளங்கும் வகையில் உள்ளவை. மகாவீரர் உருவம் முக்குடைகள் அலங்கரிக்க, சைத்யமரத்துடன் (பிண்டி) இரண்டு உதவியர் சூழக் காணப்படுகிறது. அம்பிகா இயக்கி உருவம் இரண்டு குழந்தைகளுடன் யானை முத்திரை அருகில் இருக்க, திரிபங்க வளைவுகளுடன் மிக எழிலாகவும் நேர்த்தியாகவும் வடிக்கப்பட்டுள்ளது. அனைத்து முக்கியச் சிற்பங்களும் பறக்கும் வித்யாதாரர் மற்றும் அடியவர் உருவங்களுடன் காணப்படுகின்றன. ஒவ்வொரு உருவத்தின் கீழும் அதை செய்தளித்தவர்களின் பெயர், ஊர் பற்றிய விபரங்கள் வட்டெழுத்தில் வெட்டப்பட்டுள்ளன. இங்கு கி.பி.13ஆம் நூற்றாண்டு வரை சமண சமயம் செழிப்புடன் இருந்தது என்பதற்கு இக்கல்வெட்டுகள் சான்றாக அமைகின்றன.

Temple Structure :

பகவதி கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. பிற்காலத்தில் இக்குகை ஒரு முன் மண்டபம், கூடம், பலிபீடம், மடைப்பள்ளி ஆகிய கட்டுமானங்களுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இக்கோயில் மூன்று அறைகளாகப் பிரிக்கப்பட்டு நடுவில் தீர்த்தங்கரர் சிற்பமும் வலப்பக்கம் தேவி, இடப்பக்கம் பார்சுவநாதர் உருவங்களும் வைக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் விமானம் ஒன்றும் இக்கோயிலில் இருந்தது. தெற்குப்பகுதியில் உள்ள கல்வெட்டு தமிழ்மொழியில் வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளது. 

Location :

சிதறால் சமணக் குகைக் கோயில், சிதறால்-629 151, கன்னியாகுமரி

Phone :

Website :

Email :

Temple Opening Time :

காலை 8.00 முதல் மாலை 5.00 வரை

Way :

குழித்துறைக்கு வடகிழக்கில் சுமார் 4கி.மீ. தொலைவில் சிதறால் அமைந்துள்ளது.

Nearby Bus Station :

குழித்துறை, நாகர்கோயில்

Nearby Railway Station :

தோவாளை, குழித்துறை

Nearby Airport :

மதுரை, திருவனந்தபுரம்

Accommodation :

குழித்துறை, நாகர்கோயில் விடுதிகள்
சாலை வரைபடம்
Updated Date : 07-12-2016 18:19:54 IST