Tamil Virtual Academy

TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Languages

tamilnadu_temples_new

அருள்மிகு வேளச்சேரி தண்டீஸ்வரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

Other Names :

வேதஸ்ரேணி

Place :

வேளச்சேரி

Taluk :

வேளச்சேரி

District :

சென்னை

Religious Type :

சைவம்-சிவபெருமான்

Lord Name :

தண்டீஸ்வரர்

Procession On God :

சோமாஸ்கந்தர்

Mother / Goddess Name :

கருணாம்பிகை

Temple Tree :

வில்வமரம்

Tirukkulam / River :

எமதீர்த்தம்

Agamam :

காமீகம்

Worship Time :

காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

Festivals :

சித்திரை பௌர்ணமி, ஆடி ஞாயிறு, மகாசிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம்

History :

16 வயதே ஆயுள் பெற்றிருந்த சிவ பக்தன் மார்க்கண்டேயனின் ஆயுளை எடுக்கச் சென்ற காலனை சிவபெருமான் காலால் எட்டி உதைத்து தண்டித்தார். காலனின் பதவியையும் பறித்தார். இழந்த பதவியைப் பெற எமன், பூலோகத்தில் சிவத்தல யாத்திரை மேற்கொண்டான். இத்தலத்தில் தீர்த்தம் உருவாக்கி, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்தான். அப்போது எமனுக்கு காட்சி தந்த சிவன், தண்டம் கொடுத்து பணி செய்யும்படி அறிவுறுத்தி அருளினார். எனவே இத்தலத்து சிவன், "தண்டீஸ்வரர்' என்று பெயர் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. சோமாசுரன் என்னும் அசுரன், நான்கு வேதங்களையும் பிரம்மாவிடமிருந்து பறித்துச்சென்றான். அதனை திருமால் மீட்டு வந்தார். அசுரனிடம் தாங்கள் இருந்த தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை வேண்டி தவமிருந்தன. வேதங்களின் சிவ வழிபாட்டிற்கிரங்கி காட்சி தந்த சிவபெருமான் வேதங்களுக்கு ஏற்பட்ட தோஷம் நீக்கி அருளினார். வேதங்கள் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டதால் "வேதச்சேரி' என்றழைக்கப்பட்டு, பின்பு "வேளச்சேரி' என்று மருவியது. வேதஸ்ரேணி என்பது இத்தலத்தின் புராணப்பெயராகும்.

Protecting Company :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

Nearest Temples Arc :

செல்லியம்மன் கோயில், யோகநரசிம்மர் கோயில், அஷ்டலெட்சுமி கோயில், திருவல்லீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்

Summary :

சென்னையின் வேளச்சேரி வட்டத்தில் வேளச்சேரியின் மையப்பகுதியில் அமைந்துள்ள தண்டீஸ்வரர் கோயில் முற்காலச் சோழர் கலைப்பாணியை இன்றும் தன்னகத்தேக் கொண்டுள்ளது. வேள் சேரி என்றிருந்ததே வேளச்சேரி ஆகியிருக்க வேண்டும். இப்பகுதி குறுநில மன்னனாகிய வேள் ஒருவனால் ஆட்சி செய்யப்பட்டிருக்க வேண்டும். இப்பகுதியில் சோழர்கள் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்த இக்கோயிலை கட்டி அதற்கு நிவந்தங்களையும் அளித்துள்ளனர். முதலாம் இராஜராஜசோழனின் தந்தையாகிய சுந்தரசோழனால் இக்கோயில் கட்டப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டொன்று குறிப்பிடுகின்றது. இக்கோயிலில் உள்ள சப்தமாதர்களின் தொகுதியில் உள்ள சாமுண்டி தேவியே தற்பொழுது செல்லியம்மன் கோயில் என்று தனிக்கோயிலாக விளங்குகிறது. இக்கோயிலின் தலவரலாற்றின் படி எமதர்மன் மீண்டும் தண்டம் பெற்ற திருத்தலம் என்பதால், இங்கு மக்கள் அறுபது, எண்பதாம் திருமணம் மற்றும் ஆயுள் விருத்தி ஹோமங்கள் செய்து கொள்கிறார்கள். வேளச்சேரியில் சிவத்தலம் மற்றும் வைணவத் தலங்களை சோழர்கள் கட்டியுள்ளனர். யோக நரசிம்ம பெருமாள் கோயில் வேளச்சேரியில் தற்போது வழிபாட்டில் உள்ளது. இக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட வைணவத் தலமாயிருக்க வேண்டும். பல முனிவர்கள் ஒன்றிணைந்து இத்தலத்தில் தொடர்ந்து யாகம் செய்ததன் பலனாக அவர்களுக்குத் திருமால் யோக நரசிம்மராக்க் காட்சி தந்ததாகவும், அதனால் வேள்விகள் நடந்த இத்தலம் வேள்விச்சேரி என்றும் பின்னர் வேளச்சேரி என அழைக்கப்பட்டதாகவும் கருதப்படுகின்றது.

Period / Ruler :

கி.பி.9-ஆம் நூற்றாண்டு / சுந்தரசோழன்

Inscription / Copper :

ஜின சிந்தாமணி சதுர்வேதி மங்கலம் என்று கல்வெட்டுகளால் அறியப்படும் வெளிச்சேரி (ஊருக்கு வெளிப்புறம் உள்ள சேரி) இன்று வேளச்சேரியாக மருவியுள்ளது. இங்குள்ள தண்டீஸ்வர்ர் கோயிலின் கருவறை சோழர் கால கட்டிடப் பாணியில் கல்வெட்டுகளுடன் அமைந்துள்ளது. இராசராச சோழனின் தந்தை சுந்தர சோழன் தண்டீஸ்வரருக்கு 10-ம் நூற்றாண்டில்  எடுப்பித்த கோவில் என்று கருவறை சுவர்களில் உள்ள கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன.கருவறையில் உள்ள இலிங்க வடிவில் உள்ள மூலவர் கல்வெட்டுக்களில் திருத்தண்டீஸ்ச்சுரம் உடைய நாயனார் என அழைக்கப்படுகிறார்.

Murals :

இல்லை

Sculptures :

கருவறைத் திருச்சுற்றின் தெற்குக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் இலிங்கோத்பவர், வடக்கில் நான்முகன் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை சோழர்கால கலைப்பாணியை காட்டி நிற்கின்றன. அர்த்த மண்டபத்தின் தென்புற கோட்டத்தில் கணபதியும், வடபுற கோட்டத்தில் துர்க்கையும் உள்ளனர். கருவறைத் திருச்சுற்றில் சண்டிகேசுவரர், சப்தகன்னியர், வீரபத்திரர் ஆகிய சோழர் கால சிற்பங்கள் உள்ளன. காசி விஸ்வநாதர் தனிக் கருவறை, சொக்கநாதர் தனிக் கருவறை ஆகிய சிறு சுற்றுக் கோயில்களில் இலிங்கம் மற்றும் நந்தி உருவங்கள் அமைந்துள்ளன. திருமதிலின் மேல் காவல் பூதங்கள், நந்தி ஆகிய சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மரத்தாலான வாகனங்களாக அன்னம், கருடன் ஆகியவை உள்ளன. கருணாம்பிகை என்னும் தேவியின் சிற்பம் தனிக் கருவறையில் காணப்படுகின்றது. திருச்சுற்றின் ஈசான்ய மூலையில் சூரியனும், தென் மேற்கு மூலையில் சோமாஸ்கந்தரும், ஶ்ரீ சந்திரசேகரும், மகாலட்சுமியும், சரஸ்வதியும் அடுத்தடுத்து உள்ளனர்.

Temple Structure :

Location :

அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில், வேளச்சேரி-600 042, சென்னை.

Phone :

044-22264337

Website :

Email :

Temple Opening Time :

காலை 5.30-11.00 முதல் மாலை 4.30-8.30 வரை

Way :

சென்னை எழும்பூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் வேளச்சேரியில் இக்கோயில் அமைந்துள்ளது.

Nearby Bus Station :

வேளச்சேரி

Nearby Railway Station :

சென்னை எழும்பூர், வேளச்சேரி

Nearby Airport :

சென்னை மீனம்பாக்கம்

Accommodation :

சென்னை மாநகர விடுதிகள்
சாலை வரைபடம்
Updated Date : 07-12-2016 18:19:58 IST