ஆழி - சக்கரப்படை | 7-35 | |
ஆழி - மோதிரம் | 7-46 | |
ஆழிமுதல்வ - திருமாலே | 2-19 | |
ஆளி - ஆள்பவன் | 8-64 | |
ஆறிருகை - பன்னிரண்டு கையிடத்தும் | 5-68 | |
ஆறு - செவிதோல் கண் நாமூக்கு மனம் ஆகிய ஞானேந்திரியம் | 3-78 | |
ஆறுசெல்வளி - இயங்குங் காற்று | 8-98 | |
ஆற்ற - மிகுதியாக | 12-13 | |
ஆற்றணி - ஆற்றின் அழகு | 11-50 | |
ஆற்றல் - வலியுடையோனே | 3-40 | |
ஆற்றிசின் - ஆற்றுக | 8-79 | |
ஆற்றுப்படுத்த - வழிப்படுத்தின | 5-10 | |
ஆனாது - அமையாது | 17-40 | |
ஆன்மஞ்ஞை - ஆடுமயில் | 18-7 | |
ஆன்றவர் - அமரர் | 19-3 | |
இகந்தாளை - நீங்கிய தேவசேனையை | 9-36 | |
இகந்து - கடந்து | 5-52 | |
இகலின் - ஊடலாலே | 9-36 | |
இகல் - மாறுபாடு | 1-58;
6-28 | |
இகா - அசை | 11-104 | |
இசை - ஐம்புலத்தொன்று | 2-5 | |
இசைமை - ஒலி | 13-14 | |
இச்சம் - இச்சை; அவா | 7-37 | |
இடவல - இடமும் வலமும் ஆயினோய் | 3-83 | |
இடிஎதிர் - இடிபோல | 2-37 | |
இடுக்கண் - துன்பம் | 3-16 | |
இடுபு - இட்டு | 13-59 | |
இடைநெறி - நடுவழி | 11-48 | |
இடைமுறை - இடைக்காலம் | 3-71 | |
இட்டார்க்கு - பொருள்கொடுப்பார்க்கு | 20-57 | |
இணர் - செறும்பு | 11-57 | |
இணர் - பூங்கொத்து | 5-81 | |
இணர் - பொருந்திய | 9-81 | |
இணைப்பிணையல் - இரண்டனைப் பிணைத்தது | 2-53 | |
இது - இத்தன்மைத்து | 6-77 | |
இதுவோ - இத்தன்மைத்தோ | 8-63 | |
இதை - பாய் | 10-53 | |
இந்திரன் - வானவர் அரசன் | 8-33; 19-50 | |
இமயக்குன்றம் - இமயமலை | 8-11 | |
இமயத்து - இமயமலையில் | 5-48 | |
இமிர் - முரலுகின்ற | 14-4 | |
இமிழ்பு - முழங்கி | 15-21 | |
இம்முறை - இப்பிறப்பு | 11-138 | |
இயங்க - அசைய | 6-14 | |
இயங்குமாறு - செல்லும்வழி | 17-27 | |
இயம் - இசைக்கருவி | 10-25 | |
இயலா - தோன்றாத | 3-91 | |
இயல்பிற்று - தன்மையுடையது | 7-48 | |
இயற்புலவ - இயலறிந்த புலவனே | 3-86 | |
இயைநர் - பொருந்துவோர் | 17-7 | |
இயங்கும் - முழங்கும் | 7-6 | |
இரண்டு - ஊறு | 3-78 | |
இரண்டு - ஓசையும் ஊறும் | 13-19 | |
இரதி - காமன் மனைவி | 19-48 | |
இரத்தல் - வாயில் வேண்டல் | 1-17 | |
இரவிருள் பகலாக - இரவினும் பகலினும் | 7-5 | |
இரிய - கெட | 10-53 | |
இருக்கை - இருப்பிடம் | 4-57 | |
இருங்குன்றம் - திருமாலிருஞ் சோலைமலை | 15-11 | |
இருசுடர் - | 19-46 | |
இருஞ்சோலை - இருண்டபொழில் | 7-11 | |
இருஞ்சூல் - கரிய சூல் | 4-7 | |
இருஞ்சூள் - கொடிய ஆணை | 8-89 | |
இருண்மை - இருண்டமை | 8-59 | |
இருத்தல்இல் - புக்கவீடு | 11-43 | |
இருநிலம் - பெரிய பூமி | 2-55;
9-1 | |
இருநிழல் - இரண்டு குடைநிழல் | 3-75 | |
இருந்துகில் - பெரிய ஆடை | 16-23 | |
இருந்தையூர் - வையைக்கரையிலுள்ள ஒரு திருமால் திருப்பதி (ப.தி.) | 1-5 | |
இருபிறப்பு - நூலணிதற்கு முன்னொரு பிறப்பும் பின்னொரு பிறப்புமாகிய இருபிறப்பு | 14-27 | |
இருமுரும் - பெரிய இடி | 8-33 |