பக்கம் எண் :


685

அருஞ்சொல்பொருள் அகரவரிசை


அருஞ்சொல்
பாட்டு
அகஇறை - உள்ளிறைப்பு
அகப்பா - மதில்
அகலுளாங்கண் - அகன்ற
அகைத்தல் - தோன்றுதல்
அகைத்தல் - உயர்ந்துபடுதல்
அசாஅம் - வருத்துகின்ற
அசை - செயலறவு
அசைதல் - தங்குதல்
அசையின - வருந்தின
அஞர் - இடுக்கண், நடுக்கம்
அஞர் - வருத்தம்
அஞர் உறுவி - மயக்கம் உற்றவள்
அடார் - கருங்கற் பலகையை ஒருபால் சாய்வாக நிமிர்த்திக் கீழே முட்டுக் கொடுத்து உள்ளால் உணவு வைத்து விலங்குகளை அகப்படுத்தும் பொறி
அடுக்கம் - பக்கமலை
அடுக்கம் - மலைப்பக்கம்
அணங்கியாங்கு - வருத்தினாற் போலும்
அணங்கு - தெய்வம்
அணங்கு - வருத்தம்
அணங்கு உறுநரை - வருத்த முற்றவரை
அணங்குதல் - வருந்துதல்
அணங்கும்போலும் - வருத்தும் போலும்
அணத்தல் - அண்ணாத்தல், நிமிர்தல்
அணல் - மோவாயின் கீழுள்ள தாடி
அணல் - மோவாய்
அணித்தகை - அழகைத் தடுப்பது
அணிந்து இடுபூ - அணிந்து கழித்துப்போகட்ட மலர்
அண்ணாத்தல் - நிமிர்தல்
அதர் - வழி, நெறி
அதர் - பரலும், முள்ளும் பயின்றவழி