அருஞ்சொல்பொருள் அகரவரிசை
அருஞ்சொல் | பாட்டு |
பரத்தமை - அயலாந்தன்மை | |
பரவினம் - பரவுக்கடன் கொடுத்து இறைஞ்சினேம் | |
பராரை - பருத்த அடி | |
பரி - செலவு | |
பரியல் - வருந்தாதேகொள் | |
பரியல் - வருந்துதல் | |
பருமம் - யானை முதுகிலிடும் தவிசு | |
பருவரல் - துன்பம் | |
பலகை - கிடுகு, கேடயம் | |
பலி - பலிச்சோறு | |
பல்கண்இறாஅல் - பலவாய கண்களையுடைய இறாஅல் ( தேன் கூடு) | |
பல்குடைக்கள்ளின் - பலவாகிய பனங்குடையில் இட்டுண்ணுங் கள்ளினாலாகிய | |
பழவிறல் - பழைய தன்மை | |
பழவிறல் - பழைய வெற்றி | |
பழனம் - நீர்நிலை வயல் | |
பறழ் - குட்டி | |
பறி - பனையோலைப்பாய் | |
பனி - நடுக்கம் | |
பனிப்ப - நடுங்க | |
பனுவல் - பறித்தபஞ்சு | |
பாகல் - பலாமரம் | |
பாக்கம் - கடற்கரையில் உள்ள ஊர் | |
பாசடை - பசிய இலை | |
பாசறை - பசிய கல் | |
பாசு - கிளி பண்பாகுபெயர் | |
பாடல்சான்ற - பாடுதற்கமைந்த | |
பாடறிந்ததொழுகல் - உலக ஒழுக்கம் அறிந்து ஒழுகுதல் | |
பாடுஇமிழ் - பக்கத்தில் ஒலிக்கின்ற | |
பாடுஓவாது - ஒலி அடங்கியதில்லை | |
பாட்டம் - மேகம் | |
பாணி - ஓசை | |
பாணி - கை | |
பாணி - தாளம் | |
பாண்டில் - வட்டில | |