பக்கம் எண் :


707

அருஞ்சொல்பொருள் அகரவரிசை


அருஞ்சொல்
பாட்டு
நோகோ - நோவாநின்றேன்
நோயாகின்றது - நோயுடையதாகாநின்றது
நோனாமை - பொறுக்க முடியாமை
நோன் - வலிமை
நோன்காழ் எஃகு - வலிய காம்பு செருகிய வேற்படை
நோன்மை - வலிமை
நௌவி - மான்
பகன்றை - சிவதை
பசப்ப - பசலையூறுமாறு
பசுவீ - பசியமலர்
படப்பை - கொல்லை
படர் - துன்பம்
படர்த்ல் - கருதுதல்
படர்தல் - நினைத்தல்
படு - மடு
படு - நீர்நிலையாகிய பள்ளம்
படுசினை - தாழ்ந்த கிளை
படுதல் - ஒலித்தல்
படுமலைப்பாலை - பெரும்பாலை ஏழனுள் ஒரு பண்
படை - கலனை, சேணம்
பணிமொழி - மெல்லிய மொழி
பணீஇயர் - அடக்கும்பொருட்டு
பண்ணீயம் - பண்டம்
பதம் - கொந்தளிப்பு
பத்தல் - கிணற்றின் நீரை எடுத்து ஊற்றி ஆனிரையை உண்பித்தற்குத் தோண்டப்படுவது
பம்பை - ஒருவகை வாச்சியம்
பயநிரைக்கு - பயனைத்தருகின்ற ஆனிரைக்கு
பயிரிடுதல் - அழைத்தல்
பயிர்தல் - புணர்ச்சிக்கழைத்தல்
பயிர்தல் - அழைத்தல்
பயிலல் - நெருங்கல்
பயிற்றாதீமே - எடுத்துக்குழறி எம்மை வருத்தாதேகொள்