அருஞ்சொல்பொருள் அகரவரிசை
அருஞ்சொல் | பாட்டு |
நாடி - ஆராய்ந்து | |
நாமம் - அச்சம் | |
நாம்பு - மெல்லிய கொடி, மெல்லிய நாருமாம் | |
நார் - அன்பு | |
நாலும் - தொங்கும் | |
நாளவை - நாளோலக்கம் | |
நிகர் - ஒளி | |
நிணம் - நெய்த்தலை நிணத்தையுருக்க நெய்யாம் ஆதலின் | |
நிதி - செல்வம் | |
நிவத்தல் - ஓடுதல் | |
நிவப்பு - உயர்ச்சி | |
நிறைஅடு -நிறையை அழிக்கின்ற | |
நீத்தம் - வெள்ளம் | |
நீர - ஈரப்பண்பு | |
நீரல்லாநீர் - மூத்திரம் | |
நீவுதல் - கையாலே தடவுதல், பூசுதல் | |
நீளிடையத்தம் - நீண்டநெறி | |
நீறு - புழுதி | |
நுவ்வை - நும் தங்கை | |
நூழை - துவாரம் | |
நூறி - இடித்து ஒழித்து | |
நெகிழினும் - நழுவினாலும் | |
நெடுமொழி - மீக்கூற்று | |
நெடுவீழ் - நெடியவீழ் | |
நெருநல் - நேற்று | |
நெய் - வாலாமை நீங்க ஆடும்நெய் | |
நெய்கனிகாய் - புன்னைக்காய் | |
நெய்த்தோர் - இரத்தம் | |
நெறி - நெறிப்பு, புரியின் முடக்கம் | |
நேர்கட்சேறு - கண்ணுக் இனிய சேறு | |
நேர்வு - உடன்படுதல் | |
நொடிவிடல் - நெரித்துவிடல் | |
நொடை - விலை | |
நொதுமலாட்டி - ஏதிலாட்டி யாகிய பூவிலைமடந்தை | |
நொதுமல் - வேறுபட்ட, அயல் | |
நொவ்விது - நுண்ணியது | |