நரலுதல் - ஒலித்தல் (கடவுள் வாழ்த்து) நல்கூர்தல் பல்காற் புணர்தற்கின்றிச் சேவல் நாரையைப் பிரித்து தனியிருத்தல் | |
நல்கூர் நுசுப்பு - நுணுகிய இடை | |
நல்கூர்பெண்டு - பெண்தன்மையில்லாள் | |
நல்மா - நல்ல குதிரை | |
நவிலுதல் - பயிலுதல் | |
நள்என் கங்குல் - இடையாமத் திருள் | |
நள்என் கங்குல் - செறிந்த இருளை யுடைய நடுயாமம் | |
நறுமோரோடம் - செங்கருங்காலி | |
நறுவடிமாஅத்து - நறிய வடுக்களையுடைய மாமரம் | |
நறுவீ - நறியமலர் | |
நறைப்பவர் - வாசனைக்கொடி | |
நனந்தலை - அகன்ற இடம் | |
நளி - செறிவு | |
நனிபுலம்புடைத்து - மிக வருத்தம் உடையதாயிராநின்றது | |
நனை - அரும்பு | |
நன்றிசான்ற கற்பு - நன்மை அமைந்த கற்பு | |
நா - நீர்வடியவிடுதற்கு நாக்குப்போலச் செய்துவைத்திருப்பது | |
நாகரிகர் - கண்ணோட்டம் உடையவர் | |