பக்கம் எண் :


704

அருஞ்சொல்பொருள் அகரவரிசை


அருஞ்சொல்
பாட்டு
துனைஇ - விரைந்து
தூ - வன்மை
தூக்குதல் - அசைத்தல்
தூங்கல் - தொங்குதல்
தூங்கல்வங்கம் - அசைகின்ற தோணி
தூங்குதல் - அடங்குதல்
தூணி - மரக்கால்
தூநீர் - அலையாலே தூவப்படும் நீர் - தூயநீர் (கடவுள் வாழ்த்து)
தூவி - சிறகு
தெண்கழி - தெளிந்த கழி
தெண்மணி - தெளிந்த ஓசை
தெய்ய - அசைநிலை
தெய்வம் - வருடம்
தெளித்தல் - சூளுறுதல்
தெற்றி - திண்ணை
தேம் - அகிலின் நெய்
தேம் - இடம்
தேம்படு - தேன் உண்டாகின்ற
தேம்பெய் பால் - கண்டசருக்கரையொடு கலந்த பால்
தேயர் - தேயும்பொருட்டு
தேறல் - கள்
தேறுநீர் - தெளிந்த நீர்
தேன் - தேன் வண்டு
தைஇ - உடுத்து
தையூண் இருக்கை - தைத்திங்கள் பிறப்பில் நீராடி அன்றுஆக்கப்படும் மாட்சிமை பொருந் திய உணவுண்ண இருத்தல்
தொடலை - மாலை
தொடி - வளை
தொண்டகம் - குறிஞ்சி நிலத்துக்கு உரிய சிறிய பறை
தொய்யில் - கரும்பு வடிவாகமுலையில் எழுதுங் கோலம்
தொழுதி - கூட்டம்
தொழுவர் - உழவர்
தோடு - கூட்டம்
தோடு - தொகுதி
தோல் - கடகு, கிடுகு, கேடயம்
தோன்றி - செங்காந்தள்