| 50. 
 குறிஞ்சிநிலங் கடந்தது
 
 | 
 
 | இதன்கண்: உதயணகுமரன் செல்லும் 
 வழியிலே எதிர்ப்பட்ட குறிஞ்சி நிலத்தைக் கடந்தது கூறப்படும். | 
 
 |  | 
 
 |  | விரைந்தனன் ஆகிய விறல்கெழு 
 வீரியன் முகைந்த புறவின் முல்லைஅம் 
 பெருந்திணை
 இகந்த பின்றை இருபால் பக்கமும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | அளப்பரும் 
 படிவத்து ஆன்றோர் போலத் 5   துளக்கம் இல்லாத் திருத்தகு 
 நிலைமைய
 மதுரம் பொதிந்த மழலைஅம் 
 கிளவிச்
 சதுரச் சந்திச் சமழ்ப்பில் 
 கலாபத்துத்
 தொட்டிமை கலந்த தூசுவிரி 
 அல்குல்
 பட்டிமை ஒழுக்கில் பலர்தோய் 
 சாயல்
 10   அரம்போழ் 
 அவ்வளை மகளிர் 
 மனத்தின்
 நிரம்பா நெறியின ஆகி 
 அரும்பொருள்
 கல்லா மாந்தர் உள்ளம் 
 போல
 நொய்ந்நுரை சுமந்து மெய்ந்நயம் 
 தெரிந்த
 மேலோர் நண்பிற்று ஆழ 
 இழிதரும்
 15   அருவி அறாஅ 
 ஆகலின் அயல
 பருவி வித்திய பைந்தாள் 
 புனந்தோறு
 ஈரமில் குறவர் ரிதன்மிசைப் 
 பொத்திய
 ஆரத் துணியொடு கார்அகில் 
 கழுமிய
 கொள்ளிக் கூர்எரி வெள்ளி 
 விளக்கில்
 20   கவரிமான் 
 ஏறு கண்படை கொள்ளும்
 தகரம் கவினிய தண்வரைச் சாரல்
 | உரை | 
 
 |  | 
 
 |  | நறையும் நாகமும் முறைஇரு 
 வேரியும் வருக்கையும் மாவும் வழையும் 
 வாழையும்
 அருப்பிடை நிவந்த ஆசினி 
 மரமும்
 25   பெரும்செண் 
 பகமும் பிண்டியும் 
 பிரம்பும்
 கருங்கோல் குறிஞ்சியும் கடிநாள் 
 வேங்கையும்
 சுள்ளியுஞ் சூரலும் வள்ளியும் 
 மரலும்
 வால்வெள் வசம்பும் வள்இதழ்க் 
 காந்தளும்
 பால்வெண் கோட்டமும் பனிச்சையும் 
 திலகமும்
 30   வேயும் 
 வெதிரமும் வெட்சியும் 
 குளவியும்
 ஆய்பூந் தில்லையும் அணிமா 
 ரோடமும்
 ஆரமும் சந்தும் அகிலும் 
 தமாலமும்
 ஏர்இல வங்கமும் ஏலமும் இருப்பையும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | .................. பாய்தலில் 
 கிழிந்து 35   பொதிக்கண் 
 இறாஅல் பூம்புறம் 
 புதைஇ
 மதிக்கண் மறைந்த மாசுணம் 
 மான
 மணிவரை மருங்கின் அணிபெற 
 ஒழுகி
 முதிர்பூங் காவின் உதிர்தாது 
 அளைஇ
 மலைவாழ் குறவர் மகளிர் 
 குடையும்
 40   சுனைவாய் 
 நிறைக்கும் சூருடைச் 
 சிலம்பின்
 பாடுபெயர்த்து அறியாப் பக்கம் 
 பயின்ற
 கோடுஉயர் நிவப்பின் குளிர்மலை ஒங்கி
 | உரை | 
 
 |  | 
 
 |  | மாடம் நிரைத்த மறுகை 
 போல நிரப்பம் எய்தி முரப்புநிலை முனாது
 45   கல்லில் காட்டிய செல்லல் 
 தூவழிப்
 பிண்டி பிணங்கிப் பிலம்புக் 
 கதுபோல்
 கண்டவர்க்கு ஆயினும் கடத்தற்கு 
 ஆகா
 அருமை எய்திய வரில்அமை 
 ஆரிடை
 இறும்பமல் அடுக்கத் இன்தேன் 
 கொளீஇய
 50   பொங்கெரி 
 விளக்கம்.............ம்
 ஏனல் பெருந்தினை ஏனம் 
 காவலர்
 கானல் பெருமரம் கண்ணுற 
 மாட்டி
 இருள்பட ஒங்கிய எல்லை 
 வேலிதொறும்
 வெருள்படப் போக்கிய வெண்தீ 
 விளக்கம்
 55   மங்குல் 
 வானத்து மதிநிலா 
 மழுங்கக்
 கங்குல் யாமத்துக் கடைஅற 
 எழுந்த
 கதிரோன் போல எதிர்எதிர் 
 கலாஅய
 நறும்பூஞ் சோலை நாற்றம் 
 கழுமிய
 குறிஞ்சிப் 
 பெருந்திணை குலாஅய்க் கிடந்த
 60  
  பதிற்றுப் பத்தொடு விதிப்பட 
 எண்ணிய
 ஐ¬ஐயந்து எல்லையும் அரைஇருள் 
 நடுநாள்
 எய்தி இகந்தன்றால் இயற்றமை பிடிஎன்.
 
 | உரை | 
 
 |  |