மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை) | 647 |
|
ப
அருஞ்சொற்பொருள் அகராதி
|
|
|
|
பாட்டு எண் |
|
தொழுதெழுவார் |
- |
தொழா நின்று துயிலெழுவார் |
118 |
|
தோ |
|
|
|
|
தோட்ட |
- |
வாங்கிய,தொகுதியையுடைய |
8 |
|
தோயம் |
- |
நீர் |
207 |
|
தோல் |
- |
கலைத்தோல் |
243 |
|
தோளாமணி |
- |
துளைக்கப்படாத மாணிக்கம் |
47 |
|
தோன்றி |
- |
செங்காந்தள் |
325 |
|
ந |
|
|
|
|
நஞ்சூணும்திருத்தும் |
- |
நஞ்சை உணவாகவும் செய்யும், நஞ்சு உண்டலையும்
குற்றம் நீக்கும் |
341 |
|
நடுங்கநுடங்கும் |
- |
நடுங்குவிக்கும் |
31 |
|
நடைமணி |
- |
இயங்குதலையுடைய மணி-புதல்வன் |
385 |
|
நணி |
- |
நண்ணி |
342 |
|
நணுகும் |
- |
அணித்தாம் |
48 |
|
நந்தி |
- |
சிவபெருமான் திருநாமம் |
163 |
|
நயப்பு |
- |
அன்பு மிகுதி |
11 |
|
நயம் |
- |
பயன் |
26 |
|
|
|
இன்பம் |
198 |
|
நகர் |
- |
இல் |
297 |
|
|
|
ஊர் |
329 |
|
நற, நறவம் |
- |
தேன் |
133,128 |
|
நறை |
- |
நறுநாற்றம் |
258 |
|
நன்மை |
- |
காதன்மை |
174
|
|
நன்று |
- |
பெரிது |
246 |
|
நனைய |
- |
நனையும் வண்ணம்,அரும்புகளையுடைய |
63 |
|
நா |
|
|
|
|
நாகம் |
- |
நாகமரம் |
95 |
|
|
|
யானை |
96 |
|
|
|
பதஞ்சலியாகிய பாம்பு |
171 |
|
நாடுதல் |
- |
மனத்தாலாராய்தல் |
253 |
|
நாண் |
- |
வில் நாண், நாணுதல் |
81 |
|
நி |
|
|
|
|
நிகரன்னார் |
- |
மறுதலைபோல்வார்,ஒப்பாகிய அத்தன்மையர் |
225 |
|
நிலவு |
- |
நிலைபெற்ற |
214 |
|
நிரைத்த |
- |
மொய்த்த |
151 |
|
நிற்கில் |
- |
நிற்குமாயின் |
142 |
|
நிறம் |
- |
இயல்பு,
திருமேனி, வண்ணம் |
58 |
|
நிறை |
- |
ஐம்பொறிகளையும் அடக்குதல் |
31 |
|
நிறைவு |
- |
அறிவொடுகூடிய ஒழுக்கம் |
266 |
|
நின்றிடத்துய்த்து |
- |
இடத்துய்த்து நீங்கி நின்று |
125 |
|
நின்றுதோன்றும் |
- |
இடையறாது தோன்றும் |
221 |
|
நீ |
|
|
|
|
நீடுக |
- |
ஓங்குக |
296 |
|
நீடுதல் |
- |
விடாது தங்குதல் |
122 |
|
நீதி |
- |
உள்ளப்பொருத்தம் உள் வழிமறாது கொடுத்தல் |
266 |
|
நீர் |
- |
நீர்மை |
123 |
|
நு |
|
|
|
|
நுதி |
- |
முன் |
360 |
|
நுந்த |
- |
தள்ள |
208 |
|
|
|