3.6 தொகுப்புரை

    கலையனுபவம் பலவகைக் கவின் கலைகளாக வடிவெடுக்கும்; அந்நிலையில் கட்டடக் கலை தோன்றுவதற்கும் வளர்வதற்கும் சில உந்து சக்திகள் உண்டு என்பது விளக்கம் பெற்றது.

    மதிப்பிற்குரிய ஆலயங்கள் பலவகைகளாகக் கிளைத்தற்கும் வளர்வதற்கும் பல்லவர்கள் கற்கோவில்கள் தோற்றுவித்ததே காரணம் என்பது வரலாறு கூறும் உண்மை. மாமல்லபுரம் கோயில்களும் காஞ்சிபுரம் கட்டுமானக் கோயில்களும் பற்றிய விவரங்கள் அறிய வந்தன.

    தமிழ்நாட்டில் தொன்மையான கோயில்களுள் அழியாமல் நன்கு பராமரிக்கப்படும் கோயில்களுள் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலும், திருச்சி மலைக்கோட்டைக் கோயிலும் சிறப்பிற்குரியவை ; எனவே அவை பற்றிய கட்டடக் கலைக் கூறுகள் கூறப்பட்டுள்ளன.

    வரலாற்று நோக்கில், பல்லவர் காலத்திற்கு முன்பும் பின்பும் அமைந்த ஆலயக் கட்டடங்கள் பற்றிய செய்திகளும் விளக்கம் கொள்கின்றன.

    சோழ மன்னர்களின் அரண்மனைக் கட்டுக்கோப்புப் பற்றிய சில விவரங்களும் கூறப்பட்டுள்ளன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.

மாமல்லபுரத்து ஒற்றைக்கற்கோயில்கள் பற்றி ‘லாங்ஹர்ஸ்ட்’ (Long Hurst) கூறிய கருத்தினை எழுதுக.
2.

திருவதிகை வீரட்டத்தில் அமைந்துள்ள மூலவர் கருவறை விமானத்தின் தனிச்சிறப்பு என்ன?
3.

திருச்சி மலைக்கோட்டைக் கோயிலில் உச்சியிலுள்ள பிள்ளையார் பெயரும், அடிவாரத்திலுள்ள பிள்ளையார் பெயரும் என்ன?
3.

ஆலய வளாகத்தில் உண்ணாழிகை, இடைநாழிகை ஆகியவற்றினை வடமொழியில் எவ்வாறு அழைக்கின்றனர்?
5.

‘மாளிகைமேடு’ - என்று வழக்காற்றில் அழைக்கப்படுவது எது?