2.8 தொகுப்புரை மொழிபெயர்ப்புப் பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. சங்க காலம் தொட்டே வடமொழி நூல்களின் மொழிபெயர்ப்பு தொடங்கியது. அந்நூல்களின் கருத்துகளும் கதைகளும் தமிழ் நூல்களில் இடம்பெற்றன. இவ்வகையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களைப்பற்றி விரிவாக இந்தப் பாடம் தெரிவிக்கிறது. வடமொழி, பிற இந்திய மொழிகள், உலக மொழிகள் என மொழி அடிப்படையிலும், புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள் முதலிய பல இலக்கிய வகைகளின் அடிப்படையிலும், தமிழில் வந்துள்ள பெயர்ப்பு நூல்களைப் பற்றி நாம் இந்தப் பாடத்தின் மூலம் அறிந்து கொண்டோம்.
|