4.9 தொகுப்புரை

இலக்கியத் துறையில் மொழிபெயர்ப்பு தற்கால அளவில் நிறையப் பல்கிப் பரந்து பெருகியுள்ளது. அமைப்பு நிலைகளாலும் தனியாரின் ஆர்வத்தினாலும் மொழிபெயர்ப்புகள் பெருகின. தமிழ் இலக்கிய வரலாற்றில் மொழிபெயர்ப்புகள் வளம் சேர்த்த பாங்கினை இப்பாடம் விளக்கிச் சொல்கிறது.

தமிழ்மொழி இலக்கிய வளத்திற்குப் பெரிதும் துணை நின்ற சூழலாக மொழிபெயர்ப்பைச் சொல்வது பொருந்தும்.
வடமொழியின் செல்வாக்கும், ஆங்கில இலக்கிய அறிமுகத்திற்குப் பிறகும் ஏற்பட்ட மொழிபெயர்ப்பு வீச்சும் வளம் சேர்த்துள்ளன.
தற்காலத்தில் இலக்கிய திறனாய்வு உத்திகள் முதலியன மொழிபெயர்ப்பின் வழியே தமிழில் இடம் பெற்றுள்ளன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
பம்மல் சம்பந்த முதலியார் தமிழில் தந்த ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் பற்றிக் கூறுக.
விடை
2.
தமிழுக்கு வந்த ஆங்கிலக் கட்டுரை இலக்கியங்கள் யாவை?
விடை
3.
குஜராத்தி மொழியில் சிறந்தவைகளாகக் கருதப்படும் புதினங்களைக் குறிப்பிடுக.
விடை
4.
கா.ஸ்ரீ.ஸ்ரீ. தமிழில் மொழிபெயர்த்த மராட்டிய நூல்கள் யாவை?
விடை
5.
தமிழ்ப் படைப்பாளிகளில் எவருடைய நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன?
விடை