வாழை மரம்

வாழை மரம்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  வாழைப் பழத்தைச் சாப்பிட்ட பேரரசரின் பெயர்-----------.

வாழைப் பழத்தைச் சாப்பிட்ட பேரரசரின் பெயர் அலெக்சாந்தர்.

2.  வாழை விளையும் நாடுகளில் இரண்டு --------, -------.

வாழை விளையும் நாடுகளில் இரண்டு மலேசியா, இந்தியா,

3.  வாழை மரத்தின் இலை-------------.

வாழை மரத்தின் இலை பெரிதானது, பசுமையானது.

4.  வாழை இலை உணவு -------------- என அழைக்கப் படுகிறது.

வாழை இலை உணவு தலை வாழை இலை உணவு என அழைக்கப்படுகிறது.

5.  உலகிலேயே எல்லாரும் அறிந்த பழம் எது?

வாழைப்பழம்

6.  வாழைக் காய்கள் ---------- காய்க்கும்.

வாழைக் காய்கள் அடுக்கு காய்க்கும்.

7.  வாழை மரத்தில் உள்ள மென்மையான பகுதி --------------.

வாழை மரத்தில் உள்ள மென்மையான பகுதி தண்டுப் பகுதி.

8.  பூக்களைக் கட்ட உதவும் வாழை மரத்தின் பகுதி---------.

பூக்களைக் கட்ட உதவும் வாழை மரத்தின் பகுதி வாழை நார்.

9.  வாழைப்பழத்தின் வகைகள் ---------, ---------, ---------.

வாழைப்பழத்தின் வகைகள் கற்பூரம், பேயன், இரசுத்தாலி,

10.  வாழைப்பூ ............. நோக்கிப் பூக்கும் பூ

வாழைப்பூ கீழ் நோக்கிப் பூக்கும் பூ