எழுத்து
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே!
தமிழ் மொழி வளமான மொழி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடைய மொழி. தமிழ் மொழி 'செம்மொழி' என்னும் சிறப்பு உடையது. தமிழ் மொழியின் வளமைக்கு அம்மொழியில் உள்ள இலக்கண நூல்கள், இலக்கிய நூல்கள் காரணம் ஆகும்.
தமிழின் மொழி அமைப்பை இலக்கண நூல்கள் காப்பாற்றுகின்றன. இதனால் தமிழ் மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றது. தமிழ் இலக்கணத்தின் சிறப்புக் கருதி அது குறித்த பாடம் இப்பகுதியில் இடம் பெறுகிறது.
தமிழ் இலக்கணம் பற்றி அறிந்து கொள்ள ஆறு பாடங்கள் இங்குத் தரப் பெறுகின்றன. இப்பாடத்தில் உள்ள செய்திகள் நன்னூல் என்ற இலக்கண நூலின் அடிப்படையில் தரப்படுகின்றன.