எழுத்து

எழுத்து

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  உயிர்மெய் எழுத்து என்றால் என்ன?

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து ஒலிப்பது உயிர்மெய் எழுத்து எனப்படும்.

2.  உயிர்மெய் எத்தனை வகைப்படும்?

உயிர்மெய் எழுத்துகள் குறில், நெடில் என்று இருவகைப் பெறும்.

3.  மெய் எழுத்துகள் எத்தனை? அவை யாவை?

மெய் எழுத்துகள் 18 ஆகும் அவை க்,ங்,ச்,ஞ்,ட்,ண் த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன்

4.  குறில் என்றால் என்ன?

குறுகிய ஒலிகளுடைய எழுத்துகள் குறில் எழுத்துகள் எனப் பெறும்.

5.  நெடில் எழுத்துகள் என்றால் என்ன?

நீண்ட ஒலிகளையுடைய எழுத்துகள் நெடில் எழுத்துகள் எனப்பெறும்.

6.  ஆய்த எழுத்து எவ்வாறு ஒலிக்கப் பெறுகிறது?

ஆய்த எழுத்து அஃகு ஒலிக்கப் பெறுகிறது.

7.  ஆய்த எழுத்து தனித்து வருமா?

ஆய்த எழுத்து தனித்து வராது.

8.  உயிர் எழுத்துகள் எத்தனை? அவை யாவை?

உயிர் எழுத்துகள் 12 ஆகும். அவை அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஒள.

9.  குற்றியலுகர எழுத்துகள் யாவை?

கு, சு, டு, து, பு, று ஆகியன குற்றியலுகர எழுத்துகள் ஆகும்.

10.  குற்றியலிகரம் என்றால் என்ன?

தன் மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும்.