எழுத்து
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. அ, இ, உ, எ, ஒ என்பன ------------- எழுத்துகள்.
அ, இ, உ, எ, ஒ என்பன உயிர்க்குறில் எழுத்துகள்.
2. ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்பன ---------- எழுத்துகள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்பன உயிர் நெடில் எழுத்துகள்.
3. க், ங். ச், ஞ் முதலிய 18 எழுத்துகள் --------- எழுத்துகள்.
க், ங். ச், ஞ் முதலிய 18 எழுத்துகள் மெய் எழுத்துகள்.
4. க், ச், ட், த், ப், ற் ஆகிய எழுத்துகள்---------------.
க், ச், ட், த், ப், ற் ஆகிய எழுத்துகள் வல்லினம் .
5. ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய எழுத்துகள்---------------.
ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய எழுத்துகள் மெல்லினம்.
6. ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய எழுத்துகள்---------------.
ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய எழுத்துகள் இடையினம் .
7. உயிர் எழுத்துகள் மொத்தம் ----------.
உயிர் எழுத்துகள் மொத்தம் பன்னிரண்டு .
8. மெய் எழுத்துகள் மொத்தம் -----------.
மெய் எழுத்துகள் மொத்தம் பதினெட்டு.
9. ஆய்தம் என்பது ------------- எழுத்து.
ஆய்தம் என்பது சார்பு எழுத்து.
10. உயிர்மெய் என்பது ---------- எழுத்து.
உயிர்மெய் என்பது சார்பு எழுத்து.