வினைச்சொல்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. 'இளங்கோ ஓடினான்' என்பதில் ‘இளங்கோ’ என்பது --------- .
'இளங்கோ ஓடினான்' என்பதில் ‘இளங்கோ’ என்பது செய்பவன் .
2. 'இளங்கோ ஓடினான்' என்பதில் அவன் கால்களால் ஓடினான் என்பது தெரியவருகிறது. அது ---------.
'இளங்கோ ஓடினான்' என்பதில் அவன் கால்களால் ஓடினான் என்பது தெரியவருகிறது. அது கருவி.
3. 'இளங்கோ ஓடினான்' என்பதில் அவன் மண்மீது ஓடினான் என்பது தெரிய வருகிறது அது --------.
'இளங்கோ ஓடினான்' என்பதில் அவன் மண்மீது ஓடினான் என்பது தெரிய வருகிறது அது நிலம்.
4. 'இளங்கோ ஓடினான்' என்பதில் ஓடுதல் என்ற செயல் நடைபெற்றது தெரிய வருகிறது. ‘ஓடுதல்’ என்பது ----------.
'இளங்கோ ஓடினான்' என்பதில் ஓடுதல் என்ற செயல் நடைபெற்றது தெரிய வருகிறது. ‘ஓடுதல்’ என்பது செயல்.
5. 'இளங்கோ ஓடினான்' என்பதில் ஓடியதால் செயல் விரைவில் முடியும் என்பது தெரியவருகிறது. அது -------.
'இளங்கோ ஓடினான்' என்பதில் ஓடியதால் செயல் விரைவில் முடியும் என்பது தெரியவருகிறது. அது செய்பொருள்.
6. வினைச்சொல் -----------, -----------, ---------- , ---------- காட்டும்.
வினைச்சொல் திணை, பால், இடம், காலம். காட்டும்.
7. இலக்கணத்தில் இடம் -------- ------ -------- என்று மூன்று வகைபெறும்.
இலக்கணத்தில் இடம் தன்மை, முன்னிலை, படர்க்கை. என்று மூன்று வகைபெறும்.
8. வினைச்சொல்லின் சிறந்த அடையாளம் -------- காட்டுவது ஆகும்.
வினைச்சொல்லின் சிறந்த அடையாளம் காலம் காட்டுவது ஆகும்.
9. இறந்த காலத்தின் இடைநிலைகள் --------- ------ ----- --------- ஆகும்.
இறந்த காலத்தின் இடைநிலைகள் த், ட், ற், ன். ஆகும்.
10. வினைச்சொல் ------- --------- என இரண்டு வகைபெறும்.
வினைச்சொல் வினைமுற்று, வினையெச்சம். என இரண்டு வகைபெறும்.