14. புணர்ச்சி

புணர்ச்சி

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  வாழை + பழம் = வாழைப்பழம் இதில் வந்துள்ள விகாரம்

அ) தோன்றல்

ஆ) திரிதல்

இ) கெடுதல்

ஈ) எதுவும் இல்லை

அ) தோன்றல்

2.  கிழக்கு + நாடு = என்பது புணர்ச்சிப்படி வரும் நிலை

அ) கிழக்குநாடு

ஆ) கீழ்நாடு

இ) கிழநாடு

ஈ) கிழா நாடு

ஆ) கீழ்நாடு

3.  வெண்மை + குடை = வெண்குடை எனப் புணர்ந்ததன் விதி

அ) ஆதிநீடல்

ஆ) இனம் மிகல்

இ) ஈறுபோதல்

ஈ) தன்னொற்று இரட்டல்

இ) ஈறுபோதல்

4.  “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” - என்ற வழக்கு எடுத்துக்காட்டு

அ) நிலாவழகு

ஆ) கடவுளருள்

இ) பூம்பாவை

ஈ) வெற்றிலை

ஆ) கடவுளருள்

5.  “பைம்பொழில்” - என்ற எடுத்துக்காட்டுக்கு ஏற்ற புணர்ச்சி விதி

அ) முன்னின்ற மெய் திரிதல்

ஆ) இனம் மிகல்

இ) அடி அகரம் ‘ஐ’ ஆதல்

ஈ) இடையுகரம் இய்யாதல்

இ) அடி அகரம் ‘ஐ’ ஆதல்

6.  பைங்கொடி - என்பதைப் புணர்ச்சி விதிப்படி பிரித்துக் காணும் முறைமை

அ) பைங் + கொடி

ஆ) பை + ங் + கொடி

இ) பசு + மை + கொடி

ஈ) பசுமை + கொடி

ஈ) பசுமை + கொடி

7. ‘உடம்படுமெய்’ - எனப்படும் மெய்யெழுத்துகள்

அ) ல - ழ

ஆ) ய், வ்

இ) க், ஞ்

ஈ) த், ப்

ஆ) ய், வ்

8.  ‘தனிக் குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” - என்ற புணர்ச்சி விதிக்கு எடுத்துக்காட்டு

அ) கண்ணொளி

ஆ) தண்ணீர்

இ) கண்ணகி

ஈ) பன்னீர்

அ) கண்ணொளி

9. ‘பாய்புலி’ - இதில் வல்லினம் மிகாமைக்குக் காரணம்

அ) இது உம்மைத் தொகை

ஆ) இது விளித்தொடர்

இ) இது வினைத் தொகை

ஈ) இது இரட்டைக்கிளவி

இ) இது வினைத் தொகை

10.  பத்து + பாட்டு = பத்துப்பாட்டு - இவ்வாறு வல்லெழுத்துமிக்குப் புணருவதற்குக் காரணம்

அ) இது முற்றியலுகரம்

ஆ) வன்தொடர்க் குற்றியலுகரம்

இ) இருபெயரொட்டு

ஈ) உவமைத்தொகை

ஆ) வன்தொடர்க் குற்றியலுகரம்