புணர்ச்சி
பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1. ஒரு சொல்லோடு மற்றொரு சொல் சேருவதை இலக்கணத்தில் புணர்ச்சி என்று வழங்குவர்.
சரி
2. வாழை மரம் - இத்தொடரில் ‘வாழை’ என்று வருவது வருமொழி.
தவறு
3. வாழைப்பழம் - இத்தொடர் விகாரப்புணர்ச்சி.
சரி
4. பல + பல = பல பல எனவும் பற்பல எனவும் புணரும்.
சரி
5. சில + மலர் = சின்மலர் என்று வருவது இயல்பு புணர்ச்சி.
தவறு
6. வடக்கு + வேங்கடம் = வடவேங்கடம் என்று வருவது திசைப்பெயர்ப் புணர்ச்சி.
சரி
7. மணி + அடித்தது = மணி அடித்தது என்று எழுதுவது உடம்படுமெய்ப் புணர்ச்சி.
தவறு
8. தமிழ் + ஆசிரியர் = தமிழாசிரியர் என்று புணவருவதற்கான புணர்ச்சி விதி, ‘உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’.
சரி
9. உம்மைத் தொகையில் வல்லினம் மிகும்.
தவறு
10. பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.
சரி