புணர்ச்சி
பயிற்சி - 2
Exercise 2
1. நிலைமொழியும் வருமொழியும் சேரும்பொழுது எவ்வித மாறுபாடும் இல்லாமல் சேருவது ------------ ஆகும்.
நிலைமொழியும் வருமொழியும் சேரும்பொழுது எவ்வித மாறுபாடும் இல்லாமல் சேருவது இயல்பு புணர்ச்சி ஆகும்
2. நிலைமொழியும் வருமொழியும் சேரும்பொழுது ஓர் எழுத்துத் தோன்றல் அல்லது திரிதல் அல்லது கெடுதல் ஆகிய மாறுபாடுகள் அமைவது ---------- ஆகும்.
நிலைமொழியும் வருமொழியும் சேரும்பொழுது ஓர் எழுத்துத் தோன்றல் அல்லது திரிதல் அல்லது கெடுதல் ஆகிய மாறுபாடுகள் அமைவது விகாரப் புணர்ச்சி ஆகும்.
3. ஒரு திசைப்பெயரோடு மற்றொரு திசைப்பெயரும் பிற பெயர்களும் சேருவதை ------------ என வழங்குவர்.
ஒரு திசைப்பெயரோடு மற்றொரு திசைப்பெயரும் பிற பெயர்களும் சேருவதை திசைப்பெயர்ப்புணர்ச்சி என வழங்குவர்.
4. நன்மை, தீமை, வெண்மை, செம்மை போல்வன --------- பெயர்கள்.
நன்மை, தீமை, வெண்மை, செம்மை போல்வன மையீற்றுப்பண்புப் பெயர்கள்.
5. ‘செம்மலர்’ என்பது --------- என்று பிரியும்.
‘செம்மலர்’ என்பது செம்மை + மலர் என்று பிரியும்.
6. பூ + சோலை = பூஞ்சோலை என்று புணருவதற்குரிய விதி -------- என்பதாகும்.
பூ + சோலை = பூஞ்சோலை என்று புணருவதற்குரிய விதி பூப்பெயர்முன் இனமென்மையும் தோன்றும் என்பதாகும்.
7. தெங்கு + காய் = ------------ என வரும்.
தெங்கு + காய் = தேங்காய் என வரும்.
8. வாழை + இலை = வாழையிலை என்று வரும் புணர்ச்சி -------.
வாழை + இலை = வாழையிலை என்று வரும் புணர்ச்சி உடம்படுமெய்ப் புணர்ச்சி. .
9. உவமைத்தொகையில் வரும் வல்லினம் -----------.
உவமைத்தொகையில் வரும் வல்லினம் மிக்கு வரும்..
10. அடுக்குத் தொடரில் வல்லினம் ------------.
அடுக்குத் தொடரில் வல்லினம் மிகாது