முகப்பு |
பேரிசாத்தனார் |
25. குறிஞ்சி |
அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன |
||
செவ் வரி இதழ சேண் நாறு பிடவின் |
||
நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப் |
||
பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம் |
||
5 |
வள மலை நாடன் நெருநல் நம்மொடு |
|
கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ, |
||
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது |
||
அல்லல் அன்று அது-காதல் அம் தோழி!- |
||
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா |
||
10 |
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி |
|
கண்டும், கழல் தொடி வலித்த என் |
||
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே! | உரை | |
தலைமகளைத் தோழி குறை நயப்புக் கூறியது.- பேரி சாத்தனார்
|
37. பாலை |
பிணங்கு அரில் வாடிய பழ விறல்நனந் தலை, |
||
உணங்குஊண் ஆயத்து ஓர் ஆன் தெள் மணி |
||
பைபய இசைக்கும் அத்தம், வை எயிற்று |
||
இவளொடும் செலினோ நன்றே; குவளை |
||
5 |
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ, |
|
கலை ஒழி பிணையின் கலங்கி, மாறி |
||
அன்பிலிர் அகறிர் ஆயின், என் பரம் |
||
ஆகுவது அன்று, இவள் அவலம்-நாகத்து |
||
அணங்குடை அருந் தலை உடலி, வலன் ஏர்பு, |
||
10 |
ஆர்கலி நல் ஏறு திரிதரும் |
|
கார் செய் மாலை வரூஉம் போழ்தே. | உரை | |
வரைவிடை வைத்துப்பிரிவின்கண் தோழி சொல்லியது.-பேரி சாத்தனார்
|
67. நெய்தல் |
சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம் |
||
மால் வரை மறைய, துறை புலம்பின்றே; |
||
இறவு அருந்தி எழுந்த கருங் கால் வெண் குருகு |
||
வெண் கோட்டு அருஞ் சிறைத் தாஅய், கரைய |
||
5 |
கருங் கோட்டுப் புன்னை இறைகொண்டனவே; |
|
கணைக் கால் மா மலர் கரப்ப, மல்கு கழித் |
||
துணைச் சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை, |
||
எல் இமிழ் பனிக் கடல், மல்கு சுடர்க் கொளீஇ, |
||
எமரும் வேட்டம் புக்கனர்; அதனால், |
||
10 |
தங்கின் எவனோதெய்ய-பொங்கு பிசிர் |
|
முழவு இசைப் புணரி எழுதரும் |
||
உடை கடற் படப்பை எம் உறைவின் ஊர்க்கே? | உரை | |
பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது.-பேரி சாத்தனார்
|
104. குறிஞ்சி |
பூம் பொறி உழுவைப் பேழ் வாய்ஏற்றை |
||
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே, |
||
துறுகல் மீமிசை, உறுகண் அஞ்சாக் |
||
குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த |
||
5 |
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது |
|
பைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும் |
||
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும் |
||
யானே அன்றியும் உளர்கொல்-பானாள், |
||
பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர, |
||
10 |
உருமு சிவந்து எறியும் பொழுதொடு, பெரு நீர் |
|
போக்கு அற விலங்கிய சாரல், |
||
நோக்கு அருஞ் சிறு நெறி நினையுமோரே? | உரை | |
தலைவி ஆறுபார்த்து உற்ற அச்சத்தால் சொல்லியது.-பேரி சாத்தனார்
|
199. நெய்தல் |
ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை |
||
வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு, |
||
நள்ளென் யாமத்து, உயவுதோறு உருகி, |
||
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து, |
||
5 |
உளெனே-வாழி, தோழி! வளை நீர்க் |
|
கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர் |
||
வாங்கு விசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி, |
||
வளி பொரக் கற்றை தாஅய், நளி சுடர், |
||
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய, |
||
10 |
பைபய இமைக்கும் துறைவன் |
|
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே! | உரை | |
வன்புறை எதிரழிந்தது.-பேரி சாத்தனார்
|